(Reading time: 9 - 17 minutes)

ங்க வீட்ல எல்லாரும் இந்த போட்டோ பார்த்துட்டு உன்னை தேட ஆரம்பிச்சாங்க. குறிப்பா என் தங்கை. அவளுக்கு ஒரு ஜோடி கிடைச்சிடுச்சுன்னு அவ்ளோ சந்தோஷம் அவளுக்கு... அதான் உன்னை நேர்ல பார்த்த உடனே அவ கொஞ்சம் குஷிஆகிட்டா.

அம்மாவும் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டாங்க. உனக்கு எவ்ளோ பெரிய அதிர்ச்சினு எனக்கு புரியுது...  இருந்தாலும்... “

அனைத்தையும் கேட்ட ஷக்தி கலவையான உணர்சிகளின் பிடியில் இருந்தாள். அனால் அவள் முகத்தின் வெட்கம் மட்டும் நன்றாக விளங்கியது ரூபனிற்கு. அதனால் தைரியமாக தொடர்ந்தான்.

“நேராவே கேட்கறேனே... ஷக்தி... நான் உன்னை விரும்பறேன்... மனசாற..! உளமாற..!! பைத்தியமா...!!! நீ என் வாழ்க்கைல வந்தா நம்ப வாழ்க்கை ரொம்ப ரசனையா இருக்கும்னு நம்பறேன்... நீ என்னை கல்யாணம் பண்ணிப்பியா, ஷக்தி?” என்று கேட்டுவிட்டு அவன் வலது கையை நீட்டினான்... அவளுக்காக.. அவளின் சம்மதத்திருக்காக.

நெஞ்சு பட படக்க.. உள்ளம் துடி துடிக்க.. அவனின் கையை பார்த்தவள், ஒரு முறை திரும்பி தனது பெற்றோரை நோக்கினாள், கேள்வியாக.

இதற்காகவே காத்திருந்தார்போல அவளின் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர், ரூபனின் அன்னையின் தயவால்.

பிறகு “எனக்கும் உங்களை பிடிச்சுஇருக்கு” என்றுவிட்டு நாணமுடன் தனது கையை ரூபனின் கையில் வைத்தாள்.

அவனின் சரிபாதி ஆவதற்கு தயாராக.

பின்னே.. அவளுக்குத் தானே தெரியும்.. இந்த ரூபனின் குரலில் மயங்கி.. தினமும் அவன் குரலில்(பாடலில்) கண்விழித்து... கண்ணுறங்கி... அவனின் குரலே மூச்சாக சுவாசித்து வந்ததும்... இன்று மண்டபத்தில் அவனை கண்டதும் தேன் உண்ட வண்டாக மயங்கி இருந்ததும்... தனது உள்ளம் கவர் கள்வனே கணவனாக வரும்போது கசக்குமா என்ன அவளுக்கு.!

இதுவரை நேரில் கண்டதில்லை என்றாலும், இருவரின் உள்ளமும் ஒன்றே நினைத்ததை அறிந்து உவகை கொண்டாள், ஷக்தி. அதேநேரம் சொர்க்கம் தன்வசம் வந்ததாக உணர்ந்தான், ரூபன்.

அடுத்து என்ன.. கூடிய விரைவில் ‘டும் டும் டும்’ தான்.

This is entry #57 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ப்ரதீபா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.