விமானப்பயணம் முழுவதும் தனது தோழிகளை நேரில் காணப் போகும் மகிழ்ச்சியில் இருந்தாலும் படப்படப்பாக இருந்தாள். ஏனெனில் இரண்டு வருடங்களாக அவர்கள் தொடர்புக் கொள்ள முயற்சித்தப் பொழுதும் சஹி மேடம் அவர்களை கண்டுக் கொள்ளவில்லை. இப்படி பலவாறு சிந்தித்துக் கொண்டே சரண்யாவின் அன்னை சொன்ன விலாசத்தில்லுள்ள மண்டப்பத்திற்கு வந்தடைந்துவிட்டாள்.. அவளின் பெற்றோர் அவளிற்கு முன்பே அங்கு வந்து விட்டனர்.
அங்கும் இங்கும் பார்வையை சுழற்றிக் கொண்டே மண்டப்பத்தினுள் நுழையும் பொழுது..” டேய் சஹி வா டா.. எங்க வரமாட்டியோனு ரொம்ப கவலைப் பட்டேன்.. ஆனால் இந்த அம்மாவ மதிச்சு வந்துட்ட.. இப்போ தான் எனக்கு சந்தோசமா இருக்கு “ என சரண்யாவின் அன்னை அவளை அன்புடன் அணைத்து வரவேற்றார்.
இவர்கள் மூவரின் பெற்றோர்களுக்கும் இவர்களின் லடாய்ப்(:D)பற்றித் தெரியும்.. ஆகவே சரண்யா அவளின் அன்னையை விட்டு சஹியை சரிக்கட்ட செய்தாள்.
“உங்க வார்த்தைய மீற முடியுமா ம்மா.. அதான் பறந்து வந்துட்டேன்..” என அவரை செல்லம் கொஞ்சிக் கொண்டே அவளது அன்னை மற்றும் தந்தையைக் கான அவருடன் சென்றாள்..
அவளுள் ‘எங்க இந்த ஸ்வே வானரத்த கானோம்.. சரண் கூட உள்ள இருப்பாளாயிருக்கும்’ என யோசித்துக் கொண்டே பெரியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
மாலை வரவேற்பு விழா ஆரம்பிக்கும் வரை அவள் தோழிகள் அவளது கண்களில் படவேயில்லை. இவளும் அவர்களைத் தேடவில்லை.. எப்படியும் சந்திக்கதான் போகிறார்கள்.. ஆதலால் அமைதியாக விட்டுவிட்டாள். பின் மாலையில் சாஹித்யா இளஞ்சிவப்பு நிற லெஹெங்காவில் அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு மணமேடை எதிரில் போடப்பட்ட இருக்கையில் வந்தமர்ந்து அவளது மொபைலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அவளருகில் யாரொ அமரும் அரவம் கேட்டு திரும்பியவள் சத்தியமாக வினோத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவளது அதிர்ந்த முகமே சொன்னது..
மீண்டும் அவளது எண்ணங்கள் அன்றைய தினத்திற்கு பயணித்தது..
ஸ்வேத்தா சரண்யா மற்றும் வினோத் அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் சாஹித்யாவையேப் பார்த்துக் கொன்டிருந்தனர். அவர்களின் அதிர்ந்த முகம் மேலும் சாஹித்யாவை வலிக் கொள்ளச் செய்தது.
“ஏன் அமைதியா இருக்கீங்க.. நீங்க பேசுனத எல்லாமே கேட்டுட்டு தான் இருந்தேன்” என சாஹித்யா கூறவும்..
“இல்ல சஹி நாங்க சொல்றத ஒரு நிமிஷம் கேளு..”என ஸ்வே ஏதொ சொல்ல வரவும்.. அவளை கை அமர்த்தி..
“நீங்க தான மேடம் எங்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னிங்க.. பரவால எனக்கு தெரிய வேண்டாம்..” என வினோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டே அமைதியாக கூறினாள்..
ஸ்வே மற்றும் சரணிற்கு அவளின் அமைதியான இந்த அனுகுமுறை மிகவும் பயத்தை அளித்தது.. ஏனெனில் அவள் மிகவும் காயப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வாறு அமைதியாக பேசுவாள்..
“என் வாழ்க்கை’ல நான் வெறுக்கற ஒரு ஆள்’னா அது நீ தான்.. என் ஃப்ரெண்ட்ஸ என்கிட்டையே மறைக்க வெச்சுட்டல “ என வினோத்தைப் பார்த்து வெறுப்புடன் கூறினாள்.. வினோத் அவளையே வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் ஒன்று நினைக்க.. நடந்ததோ வேறு.. மேலும் தனது தோழிகளைப் பார்த்து அமைதியுடன் அவள் கோபத்தைக் காட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்..
கல்லூரி முடிந்தப் பிறகு இன்று தான் அவள் வினோத்தைப் பார்க்கிறாள். வினோத் அவளையே புன்னகையுடன் பார்த்திருந்தானே தவிற.. ஒரு வார்த்தை பேசவில்லை.
‘இவன் என்ன இங்க இருக்கான்.. மாப்பிள்ளை இவன் தான.. ஹாயா இங்க அதுவும் என் பக்கத்துல உட்க்காந்திருக்கான்’ என தெளிவாக குழம்பினாள் நம்ம சஹி மேடம்.. அப்பொழுது தான் சுற்றும் முற்றும் பார்த்தாள்.. மண்டபம் முழுக்க ஆட்கள் நிறைந்திருந்தனர்.. மேடையில் சரண்யாவுடன் வேறு யாரோ நிற்க.. இவளுக்கு மேலும் குழம்பியது.. சாஹித்யா அன்றைய அவர்களின் உரையாடல் வைத்து சரண் மற்றும் வினோத் காதலிகிறார்கள்.. அதையே தன்னிடமிருந்து மறைத்துவிட்டார்கள்.. தன் தோழிகள் தன்னை ஒதுக்கி விட்டார்கள் என்ற வருத்தமே அவளை அவர்களிடமிருந்து தள்ளி நிறுத்தியது.
சரண் அம்மாவும் மாப்பிள்ளை இவர்கள் படித்தக் கல்லூரியில் தான் படித்தார் என்றுக் கூறவும் வினோத் தான் என்று இவள் நினைத்துவிட்டாள். ஆனால் அவள் காண்பதோ வேறு.. குழப்பத்தில் அவளுக்குத் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.. அந்த மாப்பிள்ளையை இபோது நன்கு பார்த்தால் அடையாளம் காண முடிந்தது.. அவர் பெயர் ரஞ்சித்.. இவர்கள் முதல் வருடம் சேர்ந்தப் பொழுது கடைசி வருடத்தில் இருந்தார்.. கல்லூரி ஃபுட்பால் டீம் கேப்டன் ஆகையால் மிகவும் ஃபேமஸ்.. இப்பொழுது அவளுக்கு கொஞ்சம் புரிந்தது.. இருப்பினும் வினோத் விஷயம் அவளுக்கு குழப்பமாகவெ இருந்தது.