“நிஜம்மா சாரி டி.. நீங்க ரெண்டுப் பேரும் நான் கூப்பிட்டு வராம அந்த ஃப்ராட் கூட பார்த்ததும்.. செம்ம கோவம் வந்திருச்சு.. அதுவும் நீங்க ஏதொ லவ் மேட்டர் எனக்கு தெரியவேண்டாம் அப்படினு சொன்னதும் இருந்த கொஞ்சம் புத்தியும் அப்போ வெலை செய்யல’ என கேவலமாக இளித்துக் கொண்டே சொன்னாள்.
“ஹாஹா நான் என்ன தெரியுமா நினைச்சேன்.. நீயும் வினோத்தும் தான் லவ் பண்றிங்கனு.. நல்ல வேளை நீ தப்பிச்சுட்ட அந்த மொக்க பீஸ் கிட்ட இருந்து” (வினோ பாவம் டா நீ) என சரண்யாவைப் பார்த்து சொல்லி விட்டு பலமாக சிரிக்க ஆரம்பித்தாள்.. மற்ற இருவரும் அவளை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
“சிரிப்ப டி நீ.. உன்னை எல்லாம் நல்ல சாத்தாம விடக்கூடாது.. எப்படி வினோ உனக்கு ஃப்ராட் அப்புறம் மொக்கையா.. அவங்கிட்ட சொல்றோம் நில்லு” என தோழிகள் இருவரும் நல்ல மொத்தினர் அவர்களது சஹியை..
“சரி வினோக் கிட்ட என்ன சொல்லப் போற?” என ஸ்வே கேக்கவும்..
“தெரியல ஸ்வே.. பார்க்கலாம்.. இன்னிக்கி தான சொல்லிற்கான்,, எனக்கு கொஞ்சம் யோசிக்கனும்..”என யோசனையோடு கூறினாள்.
“ஆனா அன்னிக்கி நீ அப்படி சொல்லிட்டுப் போனது எவ்ளோ கஷ்டமா இருந்துச்சுத் தெரியுமா.. நீ கோபத்துல சொன்னாலும் அதை எங்கனால மீற முடியல” என அவளைப் பார்த்து வலியுடன் கூறினாள் சரண்யா..
“டேய் செல்லம்ஸ் சாரி டா.. என் அவசர புத்தி தான் தெரியும் ல.. நான் தான் சொன்னேன்’னா நீங்க ஏன் வரலை.. இப்போ எங்க சிரிப் பார்ப்போம்.. நாளைக்கு ஃப்ரெஷா இருக்கனும்ல.. அப்போ தான ரஞ்சித் அண்ணா மயங்கர அளவுக்கு அழகா இருக்க முடியும்” என குறும்புடன் கூறினாள்.. சரண்யாவின் முகம் தாமரையாக சிவந்தது அவளது மணவாளனின் பெயர் கேட்டு.. அதை மறைக்கும் பொருட்டு..
“அதெல்லாம் இருக்கட்டும்.. தைரியம் இருந்தா அன்னிக்கி சொன்னத இப்போ சொல்லு.. அப்பொ நாங்க ஷாக்ல இருந்தோம்.. அதான் எதுவும் சொல்லலை.. இன்னிக்கி பின்னி எடுத்திருவோம்“ எனத் தோழிகள் இருவரும் அவளைத் தாக்கத் தயாராகினர்..
தனது தோழிகள் அடிக்க வசதியாக நின்றுக் கொண்டு கண்களில் குறும்பு மின்ன,…….. "என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றாள் அவள்.
உன் கோபத்தில் வருத்தமடைவோம்
உன் சோகத்தில் பங்கேற்போம்
உன் சிரிப்பில் உயிர் கொள்வோம்
என்றும் எங்களது சகி(ஹி) நீயடி!
-ஸ்வே மற்றும் சரண்.
Hi friends I found this one particular category very challenging.. indha situation dhaa enna romba attract pannuchu.. I wanna pen a story in this category.. enakku adha positive aagavum kaamikanumnu thonuchu.. adhaa indha story.. share ur comments as u always do J
Do share the negatives.. so that I can improve..
Thank you Chillzee team & my chillzee friends.
Aarthe N.
This is entry #61 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவிற்கான கதை...
எழுத்தாளர் - ஆர்த்தி N
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.