(Reading time: 13 - 26 minutes)

ங்கு மேடையில் சரணிற்கு துணையாக இருந்த ஸ்வேத்தாவின் பார்வை சாஹித்யா மேலையே இருந்தது.. அவளுக்கு சஹியை நிணைத்து கோபமாக வந்தது. ‘சரியான முந்திரிக் கொட்டை.. மத்தவங்க சொல்ல வரத கேக்கறதே இல்ல.. இன்னிக்கி இருக்கு இவளுக்கு.. வரவேற்ப்பு முடியட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம் இவளை’ என மனதுக்குள் கூறிக் கொண்டாள் ஸ்வே என்கிற ஸ்வேத்தா.

சரண்யாவோ மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள். மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை.. கூடவே இவ்வளவு நாள் திரும்பி பார்க்காத தோழி இன்று தன் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள். அவளுக்கு நம்பிக்கையிருந்தது தங்களது சஹி தங்களிடம் பழைய படி சேர்ந்து விடுவாள் என.

ஒருவழியாக வரவேற்ப்பு முடிந்து விருந்தினர்கள் கிளம்பியவுடன் மற்ற நெருங்கிய உறவினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர் காலை முகூர்த்தம் இருப்பதால்.. சஹி இரவு உணவு முடித்து மீண்டும் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்தாள்.. அவளுக்கு குழப்பமாக இருந்தது. ஸ்வே மற்றும் சரணிடம் கேக்கலாம் என்றாள்.. அவளுக்கு என்னமோ தடுத்தது.. ‘இந்த வினோத் வேற ஏன் இப்படி என்னையேப் பார்க்கிறான்.. ஹையோ எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கே’ என அவள் பொலம்பிக் கொண்டு இருக்கும் பொழுது..

“ப்பாஆஆ.. உன்னை தலையில்லாம எல்லாம் என்னால பார்க்க முடியாது.. அப்புறம் என்ன சொன்ன.. நான் உன்னை பார்க்கிறனா.. ஆமா உன்னை தான என்னால பார்க்க முடியும்.” என குறும்பு புன்னகையுடன் கூறிக் கொண்டு அவளருகில் வந்து நின்றான் வினோத்..

தூக்கிவாரிப் போட நிமிர்ந்தாள் சாஹித்யா.. அவன் சொன்னது அவளுக்கு புரியவில்லை சரியாக..;இவன் எதுக்கு நம்மள பார்க்கனும் லூசா இவன்’ என அவனையே கண்களில் கேள்வியுடன் பார்த்தாள்.

“ரொம்ப முழிக்காத.. நான் உன்னை தான் காலேஜ் சேர்ந்ததுல இருந்து லவ் பண்றேன்.. அதை தான் அவங்க கிட்ட சொன்னேன்.. படிப்பு முடியரவர உங்கிட்ட இத தான் சொல்ல வேண்டாம்னு ஸ்வே சொன்னாள்.. சரண்யா எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட்.. அன்னிக்கி நீ என்ன நினைச்சனு இன்னிக்கி மாலை நீ முழிச்சதுலையே தெரிஞ்சுது.. எப்பவும் ஃப்ரெண்ட்ஸ் மேல இருக்கற நம்பிக்கைய இழக்காத சஹி.. அவங்க ரெண்டுப் பேறும் கிடைக்க நீ ரொம்ப லக்கி.. இப்போவர அவங்க உன்னை தப்பா நினைக்கல.. ஸோ உன் அவசர புத்தினால மறுபடியும் அவங்க நட்பை இழக்காத.. மத்தபடி I always love you okay.. ஹாஹா உலகத்துல யாரும் இவளோ blunt ah லவ் சொல்லியிருக்க மாட்டங்க’ல.. பரவாயில்ல செல்லம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு ஸ்பெஷலா ப்ரபோஸ் செய்றேன்.. இப்போ நான் கிளம்பனும்.. டாடா.. “ என சொல்லி நம்ம சர் எஸ் ஆகிட்டார்.. எங்க இருந்தா அடிச்சிருவாளோ’ங்கிற பயத்துல தான்:D

வினோத் கூறியது கேட்டு சாஹித்யா அதிர்ச்சியில் இருந்தாள்.. அவளுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.. அவளது உள் மனம் தவறு செய்துவிட்டோமோ என்று தவித்துக் கொண்டிருந்தது.. அவன் கூறிய லவ் அது இதெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை( haha idha vino ketta nenju vedichurum avanukku) தனது தோழிகள் விளக்கம் கொடுக்க முயன்றப் பொழுது கூட தான் அதை கேக்கவில்லை என்பது தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது..

உடனே அவர்களைப் பார்க்க வேண்டும் என்று வேகமாக மணமகள் அறை நோக்கி செல்ல திரும்புகையில் ஸ்வே கைக் கட்டி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..

சாஹித்யா எதையும் யோசிக்காமல் ஓடிச் சென்றுத் தனது தோழியை அணைத்துக்கொண்டாள்.. இருவரது கண்களிலும் கண்ணீர் மழை..

“ச சாரி ஸ்வே.. உ உ உங்க மேல த தப்பே இல்லாம் என்னோட அ அ அவசர புத்தினால உ உங்கள க கஷ்ட்டப் ப் படுத்திட்டேன் ..ல” என அழுதுக் கொண்டே தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள்..

“டேய் அழாத.. எங்களுக்கும் கஷ்டம் தான்.. ஆனா உன்னை நினைச்சு.. ஏன்னா.. நீ தனியா இன்னும் குழம்பி உன்னை நீயெ கஷ்டப்படுத்திப்பனு.. சரி வா ரூம்க்கு போலாம்.. “என அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு அவர்கள் இருந்த அறைக்கு கூட்டிச் சென்றாள்..

‘என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு புரிதலுடன் நட்பு கிடைக்க.. வினோத் சொன்னதுப் போல.. I am lucky to have them’என தன் தோழியை நட்புடன் பார்த்துக்கொண்டே அவளுடன் சென்றாள்.

அறையில் சரண்யா கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் தனது தோழிகள் இருவரையும் அணைத்துக் கொண்டாள்.. அவர்களுக்கு அவள் நினைத்தபடியே பழைய சஹிக் கிடைத்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒருவழியாக தோழிகள் மூவரும் சமாதனமாகி.. இவ்வளவு நாள் பேசாத கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.. மூவரின் பெற்றோர் வந்து இவர்களைத் தூங்க சொல்லியும் அவர்களைக் கண்டுகொள்ளாமல் தங்களது பணியை செவ்வனே செய்தனர்..

“டி சஹி வினோ என்னமோ சொன்னானாமா.. சொல்லாவேஎஎ இல்ல..”என அவளை வம்பிழுத்தாள் மணப்பெண்ணான சரண்யா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.