(Reading time: 19 - 38 minutes)

2017 போட்டி சிறுகதை 64 - என் 'மண' வானிலே - லக்ஷ்மி சங்கர்

This is entry #64 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - லக்ஷ்மி சங்கர்

Queen

னைவரும் பரபரப்பாக இருக்கும் காலைத்தருணம் அது. அந்தப் பெண்கள் விடுதியில் தன் அறையில் போர்வைக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மதுமிதா தன் கைபேசியின் அலறல் சத்தம் கேட்டு சட்டென்று விழித்தாள்.தடுமாறியவரே அலைபேசியை எடுத்தவள் கண்களை சுருக்கித் திரையை பார்த்தாள்.அவளுடைய அத்தைப் பெண் வாணி தான் அவளை அழைத்தது.இந்த அழைப்பு அவள் எதிர்பார்த்திருந்ததுதான்.

தூக்கக்கலக்கத்தோடு அலைபேசியை காதிற்குக் கொண்டு சென்றவள் “ஹலோ வாணி" என்றாள். மறுமுனையில் வாணி “நா உன்கிட்ட நேர்ல பேசணும்”.

நிச்சயமாக சந்திக்கலாம். எங்க எப்போன்னு சொல்லு நா வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்.

பெசன்ட் நகர் பீச்? ஈவினிங்…?

ஓகே. சாயந்தரம் 4 மணிக்கு நா வந்து உன்ன கூப்டுக்கிறேன். வினு குட்டியும் வருவான்ல.

இல்லை.  நீயும் நானும் மட்டும். அப்றம்….. நீ வீட்டுக்கு வர வேணாம் . நா திருவான்மியூர் பஸ் டெப்போல நிக்கறேன். அங்க வா

சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்த மதுவிற்கு இந்த சந்திப்பு எதற்கு என்று நன்கு தெரியும்.மதுவிற்கு இருபத்தியாறு  வயது முடிந்து ஒரு மாதம் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக மாப்பிள்ளை பார்க்கின்றனர். மதுவின் அப்பா அரசாங்க அதிகாரி. இன்னும் ஒரு வருடத்தில் அவர் பதவி ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் மாப்பிள்ளை பார்க்கும் படலம் வெகு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்ற வாரம் மதுரையில் இருக்கும் தன் வீடு சென்ற மது இனிமேல் தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அதிர்ந்து போன அவள் பெற்றோர் முகம் கண்களில் வந்து போய் அந்த நாள் நினைவுக்கு வந்தது

“இப்படி சொன்னா என்ன அர்த்தம் மது. ஊர்ல இருக்கிறவங்களுக்கு நாங்க என்ன பதில் சொல்றது” என்றாள் தாய்.

அவங்களுக்கு எதுக்குமா நாம பதில் சொல்லணும். இப்போல்லாம் யாரும் அடுத்தவன் லைப் நெனச்சு பீல் பண்றது இல்ல. அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை. போற போக்குல கேட்டுட்டு போய்டுவாங்க. அத கண்டுக்காம விட்டுடுங்க

சரிமா ஊர் இருக்கட்டும். வாழக்கைல கல்யாணம் ரொம்ப முக்கியம். எங்களுக்கு அப்புறம் ஒரு வாழ்க்கைத்துணை உனக்கு வேணாமா என்றார் அவள்  அப்பா ஈஸ்வரன்.

எனக்கு வேண்டாம்ப்பா. நா தனியாவே இருக்கேன். எனக்கு பெருசா இதுல ஆர்வமும் ஈடுபாடும் இல்ல.

ஏன்டி நீ யாரையாச்சும் பாத்து வெச்சுருக்கியா என்றாள் தாய்.

காதல் என்ற வார்த்தையைக் கூட சொல்ல விரும்பாதவள் அவள் அன்னை என்று அவளுக்கு நன்கு தெரியும்.அவள் தந்தை மிகவும் முயற்சி செய்து தோற்று தன் கலங்கிய மனதையும் பதற்றத்தையும் ஒரு சேர காட்டி அவள் முகம் பார்த்து நின்றார். ஏனெனில் இன்னொரு முறை அவமானப்பட அவர் தயாரில்லை.

உங்க அண்ணன் அவன் இஷ்டத்துக்கு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இவளத்தான் கட்டிக்குவேனு நின்னான். வேற வழி இல்லாம அவனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சோம். அதனாலதான்  அன்னிக்கே உங்கிட்ட சத்தியம் வாங்கினேன் நீயும் அந்த தப்ப பண்ணணிடக்கூடாதுனு. ஆனா இப்போ நீ பேசறதை பாத்தா எனக்கு பயமாயிருக்கு என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

அம்மா. அந்த மாதிரி எதுவும் இல்ல. எனக்கு விருப்பம் இல்ல அவ்ளோதான். இதை பத்தி இனிமே பேசாதீங்க என்று அதற்கு தற்காலிகமன முற்றுப்புள்ளி வைத்து சென்னை வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியும் ஒரு நாளின் சிறு உரையாடலிலெல்லாம் அவர்களை சமாதான படுத்த முடியாது. அதோடு இது சிறிய விஷயமும் அல்லவே.

ந்தியத் திருநாட்டில் திருமண பந்தத்தில் இல்லாதவர்கள் மற்றும் காதலிப்பவர்கள் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை விட பெரிய குற்றவாளிகள் ஆயிற்றே. திருமணம் செய்யாதவர்கள், குறிப்பாக பெண்கள் பல தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும். இதைப் புரியாதவள் அல்ல மது.

நன்கு படித்து இன்று மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவள். அதனால் மட்டுமே அவளை அறிவாளியென சொல்லக்கூடாது. ஆனால்  எல்லாவற்றயும் சிந்தித்து முடிவெடுப்பவள். தனக்கென பார்வையும் கொள்கையும் உடையவள். இப்படி இருப்பவர்களுக்கு திமிர் பிடித்தவள் என்ற பெயரும் இந்த சமூகத்தில் கொடுக்கப்படும். கொடுத்தவர்கள் யாருமல்ல. அவள் உறவுகளே. ஆனால் அதைப்பற்றியெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத மது படுக்கையை விட்டு எழுந்தாள்.

இன்று வெள்ளிக்கிழமை என்ற எண்ணம் தந்த உற்சாகத்தில் கிளம்பியவள் சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று சேர்ந்தாள்.வழக்கம்போல சுறுசுறுப்பாக தன் வேலைகளை பார்த்தவள் ஒரு சிறு இடைவெளி எடுத்து வெளியே வந்தாள். அலுவலகத்தின் பேன்ட்ரி அறையில் சென்று தேநீரை எடுத்துக்கொண்டு வெளியில் இருக்கும் தோட்டத்திற்கு வந்தாள்.

தோட்டத்துக்குள் நுழைந்தவுடன் அவள் அன்னை கேட்ட கேள்வி அவள் முன்னே வந்து சென்றது “நீ யாரையாச்சும் பாத்து வெச்சுருக்கியா". மெல்ல நடந்து ஒரு கல் மேடை மேல் அமர்ந்த அவளுக்குள் அவன் முகம் தோன்றியது.

அவன் பெயர் பிரபு. அவனும் அதே நிறுவனத்தில் பணியாற்றியவன்தான். அவளை விட இரண்டொரு வயது பெரியவன். அவள் வேலைக்கு சேர்ந்த சில காலத்திலே இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது . அவள் மீது நேசம் கொண்டு அதை அவன் வெளிப்படுத்திய சமயம், அவள் அண்ணன் தான் விரும்பிய பெண்ணை பதிவுத்திருமணம் செய்துகொண்டான். மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு பிறகு ஊரைக்கூட்டி திருமணம் செய்து வைத்தார்கள் இரு வீட்டாரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.