(Reading time: 6 - 12 minutes)

2017 போட்டி சிறுகதை 65 - நட்பு - பூவிழி

This is entry #65 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - மலர்

Friends

அனைவருக்கும் பூவிழியின் வணக்கங்கள்..

இதுவே சில்சீ-ல் எனது முதல் பதிப்பு . ஏன் எனது வாழ்விலுமே கூட முதன்மையான முழு பதிப்பு இதுதான்...

கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..!!!

காலம் எல்லா நிகழ்வுகளையும் மாற்றிவிடக்கூடியது .....

உண்மைதான் ...!

ஆனால் , மனித மனம் சில பொக்கிஷமான நினைவுகளையும் , ஏன் சுமையான வலிகளையும் கூட தன்னுள் ஒளித்து வைத்து கொண்டுதானே இருக்கிறது.. அவ்வப்போது நம் நினைவுகள் பின்னோக்கி பயணிப்பதை காலதேவனால் கூட தடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத நிதர்சனம் .....

என் மனதில் பதிந்து போன முக்கியமான நினைவுகளில் சிலவற்றையே இப்பதிப்பில் "பூவிழி " யின் வாயிலாக வெளிக்கொணர்கிறேன் ..

பூவிழி ....!!!!!

பெற்றோர்களிடம் அன்பையும் , பள்ளியில் பண்பையும் பரிசாக பெற்று வளர்ந்தவள் . அதனால் வெளியுலகை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமலே வளர்ந்து விட்டாள் . பள்ளியில் புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் அறியாதவள் .. வாழ்க்கை பல கஷ்டங்களைக் கொடுத்த போதும் பெற்றவர்களின் அரவணைப்பில் அதையெல்லாம் எளிதில் தூக்கித் தூரப் போட முடிந்தது .

ஆனால் , கல்லூரியில் சேர்ந்த பின் அனைத்தும் புதுமையாய் மிரட்டியது... இதுவரை அறியாத ஆங்கில வழி பாடங்கள், விடுதி வாழ்க்கை எல்லாம் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பழகி போனாலும் ... பெற்றோர் இல்லாத வெற்றிடத்தை அவையெல்லாம் பூர்த்தி செய்யவில்லை.

அதற்கு மருந்தாய் வந்த நட்புதான் இன்றும் மனதில் நிறைந்திருக்கிறது... எல்லாம் நடந்து ஏழு வருடங்கள் ஓடி முடிந்ததே தெரியவில்லை...

வகுப்பில் மாணவர்களுக்கு இரண்டு வரிசை.. மாணவிகளுக்கென இரண்டு வரிசையில் இருக்கைகள் உண்டு.. இரண்டிரண்டு மாணவிகள் ஒரு இருக்கையில் அமர,இறுதியில் தனியாய் நின்றது பூவிழி மட்டுமே... பாடத்தில் எப்போதும் அவள் சுட்டி . அதனால் எல்லா வகுப்புகளும் எளிதாகவே முடிய , அனைத்துக் குறிப்புகளும் தவறாமல் நோட்டில் இருக்கும்.. அதுவும் கணக்கு பாடத்தில் அவளுக்கு சுவாரஸ்யம் அதிகம்...

"ஏங்க கொஞ்சம் நோட் தரீங்களா ... இந்த சம் முடிக்கல .. " அவளுக்கு இடப்பக்க வரிசையில் இருந்த "லோகு"தான் கேட்டான்...

அங்குதான் அவளது வாழ்வில் , நட்பின் முதல் அத்யாயம் ஆரம்பம்..

பின் வந்த சில நாட்களில் , பூவிழியின் வாழ்வில் அவனும் முக்கியமான ஒருவனாகிப் போனான்....குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் உதயமான நட்பு, பின் மேலும் சிறு சிறு உதவிகளாக வளர்ந்தது... விடுதி அங்காடியில் கிடைக்காத சில பொருட்களை அவன் வாங்கி வருவதும் வழக்கமானது....

நட்புக்கு ஆண் பெண் பேதமெல்லாம் இல்லை என்பதை பூவிழி உணர்ந்து கொண்ட தருணம் இதுதான்... அவள் வாழ்வில் பெற்றோரைப் போல வேறு ஒருவருக்கு இடம் உண்டு என்றால் அது அவனுக்குதான் முதன் முதலில் பகிர்ந்து கொள்ளப்பட்டது...

அந்த நாட்களில், அவளின் நட்பை , அதன் ஆழத்தை .. அந்த நட்புக்கு சொந்தக்காரன் உணர்ந்து கொண்டானோ இல்லையோ அவள் அறியவில்லை.. ஆனால் நாளும் ஏதாவதொரு நிகழ்வின் மூலம் நட்பானது விருட்சமாய் வளர்ந்து கொண்டே இருந்தது ...

கல்லூரியில் அவளது முதல் பிறந்த நாள் யாரும் அறியாமலே முடிந்து போனது.. அப்பா அம்மாவின் வாழ்த்துக்களுடன் முடிந்து விட்டது அந்த நாள்.. அவளும் அதைப் பெரிதாக எண்ணவில்லை..ஆனால் இரண்டாம் வருடம் அடியெடுத்து வைத்த பின் வந்த நாட்கள்தான் எல்லாவற்றையும் மாற்றியது..

நண்பர்களுக்கிடையே அன்பளிப்பு தேவை இல்லைதான் என்றாலும், அவளின் பிறந்த நாளன்று அவனிடம் இருந்து பரிசாக கிடைத்த அவளுக்கு மிகவும் பிடித்த கடிகாரம் ...!!! அதன் பின் வந்த கொண்டாட்டங்கள் .. பின்பு அவனது பிறந்த நாள் என ஒவ்வொரு நிகழ்வுமே அவர்களிடையே இருந்த நட்பின் உறுதியைக் கூட்டியதோ ???

தனக்கு வேண்டும் என்பதையெல்லாம் பார்த்து பார்த்து செய்யும் தந்தையின் இடத்தையே அவனுக்கும் கொடுத்து விட்டாள் பூவிழி ...

அப்புறம் , அதை ஒட்டியே வந்த ராக்கி காட்டும் நாள் .. அவன் பூவிழியின் சகோதரனும் ஆகிப் போனான்.... ஒரு நாளும் அவர்கள் பேசாமல் போனதில்லை.. சிறு சிறு சண்டைகளும் சமாதானங்களும் வாழக்கையை இனிமையாய் நகர்த்திக்கொண்டு போனது...

ஒரு நாள் எதற்கோ நடந்த வாக்குவாதம் முற்றி "இனி என்னிடம் பேசாதே " என்று சொல்லி விட்டு நிம்மதியாய் உறங்கப் போய்விட்டான் .... எப்போதும் பாதுகாப்பையும் , சந்தோஷத்தையும் மட்டுமே கொடுத்த அவனே பிரிவையும் கொடுக்க... அவளுக்கு அன்றிரவு உறக்கமின்றியே கழிந்தது..

உண்மையிலேயே அவன் இனி நம்முடன் பேசப்போவதில்லை என்ற நினைவில் அழுது வீங்கிய முகத்தோடு பூவிழியின் மறுநாள் விடிய... சாதாரணமாக பேசி அவளை உறைய வைத்தான் அவன்... அன்றிலிருந்து அவனது நட்பு சுகமான சுமையாய் மாறி போனது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.