அவன் சொல்லும் "ஐ லவ் யு டியர் " என்ற வார்த்தைகள் அவளுக்கு எந்த தவறான அர்த்தத்தையும் கொடுக்கவில்லை.. சகோதரனிடம் உணரும் அன்பையே அவள் அதில் கண்டாள் .. ஆனால் இது மற்றவர்கள் பார்வையில் தவறாகத் தோன்றிவிடும் என்று அவனைப் பூவிழி கடிந்து கொண்ட நாட்களும் உண்டு..
ஆனால் , அவன் எதையும் சட்டை செய்வதில்லை...
அவர்கள் மூன்றாம் வருடத்தில் கால்பதித்து சில மாதங்கள் முடிந்திருந்த வேளை ... அடிக்கடி அவள் காதைத் துளைக்கும் வார்த்தைகள்... "லோகு ஜூலிய லவ் பண்றானா????" நண்பர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் அவனது நடவடிக்கைகளை விமர்சிக்க ... பூவிழிக்குத்தான் வேதனையாகிப்போனது...
ஜூலி அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவி ... பூவிழிக்கும் அவளுக்கும் இடையில் அழகிய நட்பு உண்டு... பூவிழியின் பக்கத்துக்கு அறையில்தான் ஜூலி தங்கி இருந்தாள் ....
லோகுவும், ஜூலியும் ஒருவரை ஒருவர் விரும்புவது பூவிழிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றால் ... இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே தன்னிடம் அவர்கள் விரும்பும் விஷயத்தை மறைக்கின்றனர் என்பது வேதனையை அளித்தது ..
வாழ்க்கை எப்போதும் சுகத்தை மட்டுமே கொடுப்பதில்லையே... பூவிழியின் வாழ்விலும் அந்த நாள் வந்தது....
அது அவளது வாழ்வைப் புரட்டிப்போட்டது... லோகு பூவிழிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை எல்லாம் பார்த்த ஜூலி, அவர்களது நட்பை அதன் வீரியத்தை சந்தேகத்தின் பேரில் தவறாக நினைக்க ஆரம்பிக்கிறாள்..
அதனால் அவர்களுக்கிடையே தோன்றும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது...
தங்களது நட்பை யாருக்கும் நிரூபிக்க பூவிழி நினைக்கவில்லை.. அதே நேரத்தில், தன்னால் தனது சகோதரனும் நண்பனுமான லோகு வாழ்வில் கஷ்டம் ஏற்படுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அதனால் அவள் அவர்கள் இருவரிடம் இருந்தும் விலக முயற்சி செய்ய... அந்த வருடம் அவர்கள் கல்லூரி வாழ்வும் முடிவுக்கு வந்து அதற்கு உதவி செய்தது...
கல்லூரி வாழ்கைக்குப் பின் அவர்கள் மூவரும் சென்னையில் தங்கி அலுவலகம் சென்று வந்தாலும் வேறு வேறு இடம் என்பதால் பூவிழியால் முற்றிலுமாய் அவர்கள் இருவரையும் தவிர்க்க முடிந்தது.... அவர்களுடன் பேசி இதோ மூன்று வருடங்கள் ஓடி விட்டன...
ஆனால் இன்றும் , அந்த அழகிய நட்பும் அதன் வாசனையும் பூவிழியின் மனதை விட்டு மறைய வில்லை... அவர்கள் இருவரும் எப்போதும் நலமாய் ஒற்றுமையாய் வாழவே விரும்புகிறாள்.... அந்த நண்பனின் நினைவுகள் அவளின் கண்களில் ஆனந்த் துளிகளைக் கொண்டு வருகிறது... பூவிழியுடன் இணைந்து நீங்களும் லோகு - ஜூலி இருவரையும் வாழ்த்துங்கள் தோழமைகளே !!!!!!
This is entry #65 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - மலர்
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.