(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 66 - ருத்ர வீணை - பூஜா பாண்டியன்

This is entry #66 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

Love

தேநீர் இடைவெளியில் அலுவலக சிற்றுண்டி சாலையில் (food court) தனது தோழிகளான, ஜனனி , ஃபரீனா வுடன் அமர்ந்து கதை அடித்துக் கொண்டிருந்தாள், ருத்ரா...........

ருத்ரா, பெண்களுக்கெதிரான வன்முறைகளை பற்றி அறியும் போது எல்லாம் தனது பெயருக்கு ஏற்றார் போல் கோபம் கொள்பவள்.

ஜனனி, “நேற்று இரவு எங்க வீட்டு குளியலறையில் ஒரு கரப்பான் பூச்சி, அதை விரட்ட சொன்னால், அது பாவம், ‘உயிர்வதை கூடாது” என்று, ஏதோ Peta சங்க தலைவர் போல சொல்லிட்டார் என்னில் பாதி பிரவீண்.

ஃபரீனா, “அப்புறம் என்ன தான் செஞ்ச ?

ஜனனி, “ விட்ருவோமா, நாம எல்லா யாரு? சிங்கத்தையே செருப்பால அடிச்சா பரம்பரை............. கரப்பானை, செருப்பால ஒரே போடு........ பிரவீண் கூட என்னை ஆச்சர்யமாக பார்த்தார்.

ஃபரீனா, “ புது செய்தி தெரிமா? நம்ம ஆதித்யா குருப் ஆப் கம்பெனிக்கு புது CEO வர்றாராம், பெயர் ஆதித்யா அபிமன்யு ....... பெயர் நல்லா இருக்குல்ல?....... இன்னும் கல்யாணம் கூட ஆக வில்லையாம்...... இவ்வளவு நாள் அமெரிக்கால , படிச்சுட்டு சில வருஷம் வேலை பார்த்துட்டு, இப்போ இங்க வந்து அவங்க குடும்ப தொழிலை விரிவாக்க சேருகிராராம்.

நம்ம அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லா குமரிகளும், ஜாதகம், பயோ-டேட்டா வோட காத்துட்டு இருக்காங்க........

நீ கூட ஒண்ணு ரெடி பண்ணலாம் ருத்ரா.......

ருத்ரா, நெற்றி கண்ணனை திறக்காதது தான் குறை........

ஜனனி, “ அவளே அன்னை தெரசா மாதிரி பொது சேவை செய்யணும்னு நினைக்கும் ஆள், அவ கிட்ட போய் இப்படி சொல்றியே......

மாலை அனைவருக்கும் அவர்களது கணினி பேச்சு பெட்டியில் (chat box) மறு நாள் காலை சரியாக 9.30க்கு CEO வை சந்திக்க பொது வரவேற்பறைக்கு வர சொல்லி தகவல் இருந்தது......

று நாள் காலை ருத்ரா , தினமும் போல் அம்மாவுடன் சமையலரையில் அரட்டை அடித்தபடி காபி குடித்து, அப்பாவுடன் சேர்ந்து செய்தி தாள் வாசித்து ஒரு வழியாக கிளம்பி ஆபீஸ் காரில் வரும் பொழுது சாலையில்...........

எதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருந்த ஓர் கர்ப்பிணி பெண்ணை, சைக்கிளில் சென்ற ஒருவன் இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டான். இதனை பார்த்த ருத்ரா, காரை நிறுத்த சொல்லி கதவை திறந்து இறங்க முற்பட்டாள்.

கார் ஒடுனரோ, “ மேடம் , நீங்க வேணா , இறங்கிக் கொள்ளுங்கள், என்னால் காத்திருக்க முடியாது என கூறி விட்டார்.

ஜனனி , “ ருத்ரா இங்க ஆட்டோ கூட கிடைக்காது, நீ எப்படி ஆபிஸ் வருவ?.......

கவலை படாத, நான் அவங்களை ஆம்புலன்ஸில் அனுப்பி விட்டு, யாரிடமாவது லிப்ட் கேட்டு வந்து விடுகிறேன்.

வேறு நாளாக இருந்தால் ஜனனியும் அவளுடன் இறங்கி இருப்பாள். இன்று முதல் நாள் CEO வை பார்க்கும் பொழுது , தாமதமாக செல்ல கூடாது என நினைத்ததோடு மட்டும் அல்லாது, தான் சென்றால் ருத்ரா தாமதமாக வருவதையும் சமாளிக்கலாம் என நினைத்தாள்.

ருத்ராவும் அவசரமாக சாலையை கடந்து அப்பெண்ணை அடைந்து, அவரை அமர வைத்து சிறிது தண்ணீர் கொடுத்து, உடனடியாக ஆம்புலன்சை அழைத்து, அது வரும் வரை அப்பெண்ணிற்கு தைரியம் சொல்லி ……..

அப்பெண்ணின் கணவனை போனில் அழைத்து, அங்கு வருமாறு கூறி, அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைபதற்குள் மணி 9.20 ஆகி விட்டது..........

“ நீங்க நல்ல இருக்கணும்மா” என அவளது கணவணும் கூறி ஆம்புலன்சில் ஏறி சென்றனர்..........

அதன் பின் தான் ருத்ராவிற்கு, ஆபிஸ் நியாபகமே வந்தது....... அவசரமாக சாலையை கடந்து டிவைடரை ஏறி குதித்து மறுபுறம் வந்தாள்.

அவசரமாக, வந்து கொண்டிருந்த காரில் லிப்ட் கேட்டு ஏறி அமர்ந்து பின்பே நிதானித்து அந்த காரை நோட்டாம் விட்டாள். நல்ல சொகுசு கார் தான். Aadi கார் என்று ஸ்ட்யரிங் வீலில் இருந்த லோகோ மூலம் தெரிந்தது. அடுத்து, ஓட்டி வந்தவனை மெதுவாக ஓர கண்ணால் பார்த்தவள், ம்ம்ம்....... நன்றாக தான் இருக்கிறான்,

சொட்டு நீலம் கம்பெனி வைத்திருப்பவன் போல் வெள்ளையாக !!!

ப்ரில் க்ரிம் கம்பெனி ஒனர் போல் அடர்ந்த சிகையுடன் !!!!

Raymonds ஒனர் போல் புல் ஸுட் டில்..........

என நினைத்து கொண்டாள்.

ஊரிலுள்ள கம்பெனிகெல்லாம், ஓனராக நினைத்தவள், தன் கம்பெனி ஓனராக இருப்பான் என நினைக்கவில்லை.......

இவ்வாறாக அவனை எடை போட்டு கொண்டிருந்தவள் , திடிரென அவன் கூறிய,

“முட்டாள்” என்ற வார்த்தையில் குழம்பி, அவன் கூறிய அந்த முட்டாள் எவ்வளவு அழகாக இருந்தது என ரசித்து கொண்டிருந்த பொழுது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.