(Reading time: 8 - 16 minutes)

றிவு இருக்கா? என்ற அவனது குரலை கேட்டு , தன்னைத்தான், திட்டுகிறான் என் உணர்ந்த நொடி, கோபத்தில் துர்வாச முனிவராக , மாறி இருந்தாள் ருத்ரா.......

ஹலோ, உங்க கார்ல எரிட்டதால என்ன வேனா, திட்டலாம்னு, நெனைச்சிங்களா?

அப்படி என்ன அவசரம் ?, டிவைடர் மேல ஏறி சாலையை கடக்க...... எதாவது வண்டி வந்து இருந்தா, என்ன ஆகி இருக்கும்.......

“அழகா இருக்ற பொண்ணுங்க எல்லாம்

அறிவா இருக்க மாட்டங்க”

“தனி ஒருவன்” படத்தில் வர்ற பாட்டு, சரி தான் போல......... என கூறினான்.......

அழகா இருக்கும் ஆண்கள் கூட தான் அறிவா இருக்க மாட்டாங்க....... அதெப்படி பெண்கள் மட்டும்தான்னு சொல்றிங்க? என ருத்ரா , ரௌதிரமானாள்.........

அப்ப, நான் அழகா இருகேன்னு சொல்ற !!!!........

உங்க முகத்தை யார் பார்த்தா?

யார் பார்த்தானு சொல்ற ஆள் தான், காரில் ஏறியவுடன், ஓர கண்ணால் என் அழகை பார்த்துட்டு இருந்த!!!! எவ்வளவு மார்க் போட்ட?

ஓவர் கான்பிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது............ என இழுத்தாள், பெயர் தெரியாதே!!!!!!!

ஆதின்னு கூப்பிடலாம்.........என கூறினான்.

போதும் உங்க பெயர் எனக்கு எதற்கு. நிப்பாட்டுங்க என் ஆபிஸ் வந்து விட்டது.

உள்ளே வந்து அவளை இறக்கி விட்டு அவனும் இறங்கினான். இவன் ஏன் இறங்குறான், மனசுல பெரிய ரோமியோனு நினைப்பா............

அவன் இறங்கியவுடன் காவலாளி ஓடி வந்து அவனது லேப்டாப் பையை வாங்கியவுடன் , அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.........

அடுத்து மேனஜிங் டைரக்டரே வெளியே வந்து ஒரு மலர் கொத்தை கொடுத்து வரவேற்றார்.

இங்கு ஆபிஸ் துவங்கும் நேரம் என்ன? என இவளை பார்த்து கொண்டே அவரிடம் கேட்டான் ஆதி . ஆதி என்ற ஆதித்யா அபிமன்யு.

ருத்ரா , மேனஜரிடம் “ சார் கேபில் வரும் பொழுது, ஒரு கர்பிணி பெண்ணுக்கு விபத்து நடந்தது , அவங்களுக்கு உதவிட்டு வர சிறிது தாமதமாகிவிட்டது” என ஆதியை பார்த்து கொண்டு கூறினாள்.

அவன் பார்வையிலிருந்து, அவன் நம்பினானா இல்லையா என்று தெரியும் முன் அவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்..........

கான்ஃபிரன்ஸ் ஹாலில் ஆதி பேசிய பேச்சு பாரட்டும்படி இருந்தது. வேலையை பற்றி மட்டும் பேசாது, அங்கு வேலை பார்ப்பவர் ஒழுக்கமும் மிக முக்கியம் என் கூறினான். முடிக்கும் முன் நேரத்திற்கு வேலைக்கு வருவதும் அவசியம் என் கூறி பேச்சில் அவளுக்கு ஒரு குட்டும் வைத்தான்........

னது கணினியின் முன் அமர்ந்த பொழுது,

ஜனனி வந்து, “எப்படிப்பா நம்ம CEO காரிலேயே வந்து இறங்கிட்ட?

ஹைய்யோ, அது நம்ம CEO காருன்னு எனக்கு எப்படி தெரியும்? அது வேற அவர் கூட ஒரே சண்டை வரும் பொழுது.......

“லிப்ட்டு கொடுத்தவரிடமே சண்டையா?

“அவன் எப்படி என்னை முட்டாள்னு சொல்லலாம்?

“ ம்ம்ம்...... நீ என்ன செஞ்ச?

“ரோடில் டிவைடர் மேல் ஏறி குதிச்சு வந்தேன்.”

“அறிவு இருக்காடி உனக்கு........

அவனும் இதையே தான் சொன்னான். என்ன “டி” மட்டும் சொல்லல!!!!!!

அப்போ என்னை போல, “உன் மேல் உள்ள அக்கரையில் தான் சொல்லி இருக்கார்..........

து நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், டீம் லீடர் ருத்ராவை அழைத்து, ஆன் சைட்ல், உன்னை ஆஸ்திரேலியா அனுப்புவதாக இருந்தது, ஆனால் உன் பெயருக்கு அடுத்து இருந்த நவீண் பெயரை தான் ஆதி சார் தேர்ந்தெடுத்து உள்ளார், என கூறினார்.

ருத்ராவும் கோபமாக வந்து, ஜனனி , ஃபரீனாவிடம் “பாருங்க, எதோ என் மேல் ஆதிக்கு அக்கறைன்னு சொன்னிங்க ஆனால் இன்னைக்கு, என்னோட onsite யே நிராகரித்து, அடுத்திருந்த நவீனை தேர்ந்து எடுத்து இருக்கார்.

பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? பெண்களுக்கு மரியாதை கொடுக்காதவன் கிட்ட எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது....... நான் போய் என்னுடைய ராஜினாமாவை கொடுக்க போகிறேன்” என் கூறி நேராக ஆதியின் அறைக்கு சென்றால் ருத்ரா........

வெளியே இருந்த அவனது உதவியாளர் தடுத்தும், கேளாமல், நேராக அறையுனுள் நுழைந்தாள்.........

ஆதி, அங்கு வேலை பார்க்கும் ராம், அவன் மனைவி ஜானகியிடம் பேசி கொண்டிருந்தான்.

மிஸ்டர் ராம், சாதரணமா நான் என்னோட ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதில்ல, ஆனால் உங்க மனைவியும் என்னோட ஊழியர் என்பதால் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டி உள்ளது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.