(Reading time: 19 - 38 minutes)

வளின் பெற்றோரரை, அவள் உறவினர்கள் அனைவரும் வார்தைகளாலே வெட்டி வீழ்த்தினர். அதில் இருவரும் உடைந்து போய் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு வந்தபோது அவர்களை ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்தினாள் மது. அப்பொழுதான் அவள் அன்னை அந்த சத்தியத்தை கேட்டாள்."நீ நாங்கள் பார்த்து வைக்கும் பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டும்".

சிறிது நேரம் தயங்கினாள் மது. அவளுக்குள்ளும் காதல் மொட்டுவிட்ட தருணமல்லவா அது. அவளுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை அந்த வார்த்தைகள். அந்த சில நிமிட இடை வெளியில் அவள் அன்னை அழுது அரற்ற ஆரம்பித்தாள். தன் தந்தை முகத்தை பார்த்தவள் அவர் முகமும் அதையே கெஞ்சுவதை உணர்ந்ததும் சத்தியம் செய்து கொடுத்தாள்

அன்று இரவு அவள் உகுத்த கண்ணீரின் அளவு அவளுக்கும் வாணிக்கும் மட்டுமே தெரியும். வாணி மதுவின் தூரத்து சொந்தம். வாணியின் அம்மா அவளுக்கு அத்தை முறை. மதுவை விட ஒரு வயது பெரியவள் . ஒற்றை பெண்ணான வாணிக்கு மது என்றால் உயிர். மதுவுக்கும் வாணி மேல் அதீத அன்பு.இருவரின் இல்லங்களும் அருகருகே இருந்தது மதுரையில். அதன் பின் மணமாகி வாணியும் சென்னைக்கு வந்து விடவே அவர்கள் அன்பில் இடைவெளி இருக்க வாய்ப்பில்லாமல் போனது.

வாணி அவளிடம் கேட்டாள். "என்ன சொல்ல போற பிரபு கிட்ட?"

மது அவளை நிமிர்ந்து பார்த்து வலி நிறைந்த புன்னகையில் சொன்னாள் “இனி ஒன்னும் சொல்றதுக்கு இல்லை”.

நா இன்னும் பிரபுக்கிட்ட என் விருப்பம் பத்தி சொல்லல.நா முடியாதுனு சொல்ல போறேன்"

நீ அவசரப்படறேனு தோணுது மது. கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாக்கலாம்.

இல்ல வாணி. நா வெயிட் பண்ணலாம். பிரபு வீட்ல அவருக்கு பொண்ணு பாக்குறாங்க. எனக்காக அவங்கள வெயிட் பண்ண வைக்க நா விரும்பல. அதோட எங்க அம்மா இதே மாதிரி எமோஷனல் பிளாக்மெயில் பண்ணா ஒரு பொண்ணா என்னாலும் என்ன செய்ய முடியும். எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. உறுதியா என்னால சொல்ல முடியாத ஒரு விஷயத்துக்காக என்னால இன்னொரு குடும்பத்தோட சந்தோஷத்தை கெடுக்க முடியாது.

அதன் பின் சென்னை வந்த மது நேராக பிரபுவிடம் சென்று வீட்டில் நடந்ததை மட்டும் சொன்னாள் .அவனுக்கு அவள் பதில் புரிந்தது. இருப்பினும் விடாமல் "நா வெயிட் பண்றேன். எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. எங்க வீட்ல புரிஞ்சுக்குவாங்க"

இல்ல பிரபு. என்னால எதையும் உறுதியா சொல்ல முடில. உன்ன காக்க வெச்சு அதுக்கப்புறம் எங்க அம்மா இதே மாதிரி தற்கொலை பண்ணிக்குவேன்னு மெரட்டுனா அப்போ என்னால ஒன்னும் பண்ண முடியாது. அது உங்க வீட்ல உள்ளவங்க மனசையும் பாதிக்கும்.குறிப்பா உன் மனச. அப்புறம் இப்போ எல்லாரும் பாடுற மாதிரி அடிடா அவள! ஒதடா அவளன்னு நீயும் பாட்டு பாடிட்டா என்று சொல்லி மென்மையாக சிரித்தாள்.

அப்டிலாம் நா பண்ணமாட்டேன் மா.

அப்டிலாம் சொல்ல முடியாது. நாம ரொம்ப ஆசைப்படற ஒரு விஷயம் நடக்கலேன்னா அது தன்னோட ஏமாற்றத்தை எப்படியாச்சும் வெளிப்படுத்தும். அது சமயத்துல நம்ம அன்பு வெச்சுருக்கவங்க மேல கோபமா மாறும். இப்போ நாம ஒரு ஆரம்ப கட்டத்துல இருக்கோம். பட் இன்னும் கொஞ்சம் நாள் ஆச்சுன்னா நம்ம உறவு இன்னும் ஸ்டராங் ஆகும். அப்போ ரெண்டு பேருக்கும் கஷ்டம்.

இருவருக்குள்ளும் அமைதி நிலவியது. இருவரும் சற்று நேரம் தங்கள் குறுகிய கால நேசத்தை மௌனமாக உணர்ந்து கொண்டிருந்தனர்.

அமைதியை கலைத்த பிரபு அவளிடம் "உன் விருப்பம் போல மது. உன்ன நா வற்புறுத்தல. எந்த சூழ்நிலையிலும் உனக்கு உதவ நா காத்திருப்பேன்" என்று கை நீட்டினான்.

அவள் மனதில் பரவிய வலியோடு அவனுக்கு கை குலுக்கினாள்.

தே இடத்தில் அமர்ந்திருந்தவளின் கண்கள் சற்றே கலங்கி இருந்தன பழைய நினைவுகளில். தன்னை ஒருநிலைப்படுத்திக்கொண்டு அலுவலக அறையின் உள்ளே சென்றவள் தன் வேலையில் மூழ்கினாள் வெகு முனைப்பாக.

அவளுடைய மேலதிகாரி அஜய் அவளருகே வந்து," நாம் அனுப்பிய பிளானிற்கு நம் மேலதிகாரியிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடனே கிளைண்ட்டிற்கு அனுப்பிவிடலாம். நீங்கள் அதை பார்த்துக்கொள்ளுங்கள். நான் திங்கள்,கிழமை தாமதமாக வருவேன் " என்றபடி கிளம்பிவிட்டார் .

தன் வேலையை துரிதமாக முடித்தவள் கிளம்பி விடுதிக்கு வந்து சேர்ந்தாள். அன்று இரவு படுக்கையில் விழுந்தவள் பலவற்றையும் எண்ணியவாறே உறங்கிப்போனாள்.

றுநாள் தன்னுடைய அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருவான்மியூரில் பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்த வாணியை தன்னோடு அழைத்துக்கொண்டாள். வண்டியை கடற்கரை அருகே நிறுத்தியவாறே மது வாணியிடம் "நா உன்ன வீட்டுக்கே வந்து கூப்ட்ருப்பேன். ஏன் வேணாம்னு சொன்ன" என்று கேட்டாள்.

கேள்வியை எதிர்பார்த்தவள் "என் மாமியார் வந்திருக்கிறார்." என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.