(Reading time: 19 - 38 minutes)

ரு ஆணுக்கு பொண்ணு தேடுறப்போ அந்த பையன பெத்தவங்க ...அந்த பையனும் கூட சில இடங்கள்ல ....பொண்ணு நல்லா படிச்சு நெறைய சம்பாதிக்கணும்னு கேக்குறாங்க.....செகண்டரி இன்கம்கே இவ்ளோ கண்டிஷன்னா...பிரைமரி இன்கம்க்கு...எவ்ளோ கண்டிஷன் இருக்கனும் என்று வாணியை பார்த்து சிரித்தாள்.

என்ன கிண்டலா...பட் இப்டிலாம் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சா யாருக்குமே கல்யாணம் ஆகாது மது.

படிப்பு வேல விஷயத்துல என் கருத்து இதுதான் வாணி... பையன் எனக்கு சமமா படிச்சுருக்கணும்....எந்த துறைல இருந்தாலும் சரி...அந்த வயசுக்கு அந்த துறைல என்ன வளர்ச்சி இருக்கனுமோ அது இருக்கனும்....இதுதான் என் எதிர்பார்ப்பு..

இதுக்கு முன்னாடி ஒரு வரன் வந்துச்சே மது.நல்ல வசதியான குடும்பம்தான ...அதுலயும் பிரச்னையா.

ஐயோ...அவனை பத்தி மட்டும் ஏதும் பேசாத.அவனை பாத்ததுக்கு அப்புறம்தான் எனக்கு நெறைய பயமே.

ஏன்...

நல்லா கேட்ட போ.....அவன் சொல்றான் ....நா வீட்டுக்கு ஒரே பையன்....ரொம்ப செல்லம்...கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் ஆனேன்...நா இன்ஜினியரிங்ல எடுத்த  குரூப்க்கு  வேல கெடைக்கிறது கஷ்டம்...கிடைச்சாலும் சம்பளம் கம்மியாதான்  இருக்கும்....ஒரே பையன்னு  வெளிநாட்டுக்கு அனுபமாட்றாங்க....அங்க போன நல்ல சம்பாதிக்கலாம் ...இல்ல பிசினஸ் பண்ணலாம்...ஆனா பிசினஸ் பண்ண அப்பா அம்மா கிட்ட காசு கேக்க விரும்பல....எங்களுக்கு நெறைய  வசதி இருக்கு....சென்னைல சொந்த வீடு இருக்கு....என்ன என் சம்பளம்  ரொம்ப கம்மி இது வரைக்கும் மாசம் ஆனா அப்பாகிட்ட பணம் வாங்கிக்குவேன்..நீ வந்துட்டா நா வாங்க மாட்டேன்.....நீ அதுக்குள்ள குடும்பம் நடத்திக்கோ ...கஷ்டம்தான்....ஆனா எனக்கு நெறைய வசதி இருக்கு அப்டினு சொல்றான்.

இந்த பையன் எனக்கு வேணாம்னு சொன்னா வீட்ல ஒரே சண்டை...அவன்கிட்டத்தான் நெறைய பணம் இருக்குல்ல அப்டினு சொல்றங்க ...அதுக்குன்னு கொஞ்சம் கூட தான் வாழ்க்கை, வேலையை பத்தி தெளிவான முடிவு எடுக்க முடியாத பையன கல்யாணம் பண்ணிக்கவா முடியும்....அந்த பையனால தான் கிட்ட நெறய பணம் இருக்கு அப்டிங்கிறத தவிர வேற எதைப்பத்தியுமே பேச முடியலையே.

இப்டி சொன்ன...எங்க அப்பா கேக்கறாங்க...ஒரு வேல கல்யாணத்துக்கு அப்பறமா அவன் மாறலாம்....ஒரு பொண்ணு நெனச்சா என்ன வேணா செய்யலாம் அப்டினு சொல்றங்க...நாம மனசார விரும்பற பையன்னா அவனுக்காக எல்லா ரிஸ்க்கும் எடுக்கலாம்...அது ரொம்ப நல்ல விஷயமும் கூட....ஒரு தடவ பாக்கிற பையனுக்காக நான் என்னனு முடிவு எடுக்கிறது சொல்லு.

........

நீ புத்திசாலியா பாத்து கல்யாணம் பண்ற....பட் அப்புறமா அவன் முட்டாளா ஆயிட்டா என்ன பண்ணுவேன்னு எங்க அம்மா கேக்கறாங்க என்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள் மது.

அந்த பையன் உங்கிட்ட வெளிப்படையா  பேசுனான்ல....நீ ஏன் அப்படி அத  பாக்கக்கூடாது  என்று கேட்கும்பொழுது  அவள் சுருதி  வெகுவாக இறங்கி ப் போயிருந்தது...இருப்பினும் எங்கேனும்  மது எதிர்மறை எண்ணம் கொண்டிருக்கிறாளோ...என்றால் அதை போக்க வேண்டும்....எல்லாவற்றையும்  விட அவளுக்கு திருமணம் நடந்தே  தீர வேண்டும் என்ற எண்ணத்தில்  கேட்டாள் .

வாணியின் மனமறிந்த மது...அவளை மெல்லிய புன்னகையோடு ஏறிட்டாள் ....ஒருத்தன் நா தண்ணியடிப்பேன் ...தம்மடிப்பேன்னு....வெளிப்படையா சொன்னா உண்மைய சொன்னானு அவனுக்கு கட்டி வைப்பாங்களா...இல்ல வேணாம்னு சொல்லுவாங்களா.தண்ணி தம் அடிக்காதவங்க எல்லாம் நல்லவங்கனு நா சொல்ல மாட்டேன்.

பட் வாழ்க்கைல என்ன வேணா நடக்கலாம் இல்லியா மதுமா...

மறுபடியும் அதே புன்னகை....நீ இப்போ கடைக்கு போற...துணி வாங்குற......துணி நல்லா இருக்கு...அழகா இருக்கு...அப்டினா நீ வாங்குவ...

துணி கிழிஞ்சு இருக்குனு கடைல பாத்துட்ட....பணம் குடுக்கிறதுக்கு முன்னாடியே....இப்போ என்ன பண்ணுவ....கண்டிப்பா யாருமே கிழிஞ்சதை வாங்க மாட்டாங்க.

எது எப்டியோ வாணி....நாம கண்ணுக்கெட்டுற தூரம் வரைக்கும் எல்லாமே சரியா இருந்தாதான் நாம அத செய்வோம்….சின்னச்சின்ன அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்தான்.ஆனா எது சின்னது எது முக்கியம்னு தீர்மானிக்கிறதும் ஒருத்தவங்க தனி விருப்பம்தான்.அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.

தெரிஞ்சே கிழிஞ்சத வாங்கலாமா...துணி கூட நெறைய வாங்கலாம்...ஆனா கணவன்...அது பொருள் இல்ல.இவ்ளோ நேரம் ஒரு பொண்ணா நா சந்திக்கிற பிரச்னையை சொன்னேன்.பசங்களுக்கும் இதுல கண்டிப்பா கஷ்டம் இருக்கும்.பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும்....ஆம்பள அழக்கூடாதுனு....ரெண்டு பேரோட உணர்வுகளுக்கும் இங்க நெறைய கட்டுப்பாடுகள் இருக்கு.

இந்த மாதிரி பொதுவான பல சமூகக்கட்டுப்பாடுகள்ல பெரும்பாலும் கஷ்டப்படறது நடுத்தர வர்க்கம்தான்.நெறைய சம்ப்ரதாயங்களை எதுக்கு பண்றோம்னு தெரியாம ஊர் உலகத்துக்காகவும்....சமுதாயத்துக்காகவும்....பிடிச்சும் பிடிக்காமலும்...செஞ்சுட்டு உள்ள வலிச்சாலும் வெளிய சந்தோசமா காமிச்சிக்கிட்டு....என்ன வாழ்க்கை இது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.