(Reading time: 4 - 7 minutes)

2017 போட்டி சிறுகதை 74 - பகிர்வன் - மனோ ரமேஷ்

This is (guest) entry #74 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − முடிவுக்கான கதை

எழுத்தாளர் - மனோ ரமேஷ்

Friend

சீன் 1:

சொல்லு மனோ என்னைய தான் தேடற மாதிரி இருக்கு

எப்படி தான் எல்லா டயமும் சரியா ஆஜர் ஆகுறியோ.

ஹா ஹா நீ தான் பன்சுவாலிட்டில புலி ஆச்சே நான்னாச்சும் இப்படி இருந்துட்டு போறனே, ரெண்டு பேர்ல யாராவது டைம்ம ஃபாலோவ் பண்ணணும்ல.

சரி சொல்லு என்ன ஆச்சு இன்னைக்கு யார் சரியாய் சொன்னது நான் தானே.

ஆமா, நீ சொன்ன மாதிரி தான் இருந்தது அந்த பிரச்சனை நான் நினச்ச அளவுக்கு இல்ல,

அது எப்படி நீ எப்பவும் கரெக்ட்டா இருக்கற.  

அப்படி இல்ல நீ தப்பா இருக்கப்போ மட்டும் நான் கரெக்ட்டா இருக்கறத நீ ரியலைஸ் பண்ற 

நீயே சரியாய் இருக்கும்போது நான் சரியாய் சொல்லி இருந்தாலும் தப்பா இருந்தாலும் என்னைய ஒன்னும் சொல்லமாட்டல அதான் அதெல்லாம் உனக்கு தெரியல.

சீன் 2:

இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்ல.

எதுக்கு இவளோ யோசிக்கற அதெல்லாம் சரியாத்தான் வரும்

நீ சொல்றியேன்னு தைரியமா ஆரம்பிக்கறேன்.

சீன் 3:

மனோ சொன்னா கேளு இது செட் ஆகாது வேணாம்.

என்ன எடுத்ததும் இப்படி சொல்லிட்ட எனக்கென்னமோ அவளோ டாக்ஸிக்காலாம் தோணலையே

சரி உன் இஷ்டம்.

நோமா இந்த முறையும் நீதான் கரெக்ட் டாக்ஸிக்னு இல்லனாலும் எனக்கு இவங்கல்லாம் செட் ஆக போறதில்ல.

சீன் 4:

ஆனாலும் நீ அவளோ டென்ஷன் ஆகி இருக்க வேண்டாம் மனோ.

என்னைய மட்டும் எப்படி எல்லா நேரமும் குத்தம் சொல்ற, கேள்வி கேக்கற.

நான் வேற யாரையும் கேள்வி கேக்க வேண்டியதில்லை யாரோட செயல் பலன்களுக்கும் நான் பொறுப்பில்லை ஆனா உனக்கு அப்படி இல்லையே நான். அப்போ நான் உன்னை தானே கேக்க முடியும்.

கரெக்ட் தான்.

சீன் 5:

மனோ எதுவுமே பண்ணாம இருக்க எதாவது யோசி

கண்டிப்பா யோசிக்கணுமா.

ஆமா யோசி.

சரி யோசிக்கிறேன்.

சீன் 6:

மனோ இந்த வருஷம் கதை எழுதிரியா இல்லையா

எழுதணும் ஆனா என்ன எழுதனும்னு யோசிக்கல. நிஜமா நீங்க எழுதலையானு 2 பேர் கேட்டுட்டாங்க அதுக்காகவாச்சும் எழுதணும்.

பேசாம நம்ம ரெண்டு பேர பத்தியே எழுதிடுவோமா. ஸ்டோரி டிஸ்கஷன் பத்தியே படமே எடுக்கற மாதிரியா. நல்ல ஐடியா.

நான் மனோ, இது நோமா.

இந்த சீன்னோட ஆரம்பத்துல மாதிரி நான் எதாவது பயங்கரமா யோசிப்பேன் அப்போல்லாம் இவன் தான் ரொம்ப கஷ்ட பட்டு என்னைய சரி பண்ண ட்ரை பண்ணுவான்.

சில நேரம் நான் நல்லா இருந்தாலும் இவனா எதாவது கிளப்பி விட்டு இவனே என்னை பரபரப்பாக்கிடுவான்.

ஏன் இத இப்படி பண்ணிட்டனு என்னைய யாரும் கேள்வி கேட்டதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.

இவன தவிர யாருக்கும் நான் இவளோ பயந்ததெல்லாம் இல்ல.

அதெல்லாம் சும்மா அடிச்சு விடாத மனோ.

என்னோட டிசைன் கொஞ்சம் குழப்பமானது அதை அப்போ அப்போ தட்டி சரி பண்ணும் ஆள் தான் நோமா.

என்னோட எல்லா சூழ்நிலையிலையும் என்னோட எல்லா விதமான மூட்லையும் என்கூடவே இருக்க ஒரு ஆள்.

என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் என்னோட சேர்ந்து பகிர்ந்துக்கிட்ட ஒரு ஆள்

இவனை உங்களுக்கு அறிமுக படுத்தனத்துல மகிழ்ச்சி.

கிளம்புவோமா நோமா.

கதை எங்கடா மனோ.

மேலயே நெறய சொல்லிட்டேன் நோமா.

ப்போ ரியல் சீன்:

டேய் என்னடா இது நோமா யாரு என்னனு ஒண்ணுமே சொல்லாம முடிச்சிட்ட.

அது யாரை வேணா இருக்கலாம் நித்து.

எனக்கு என்னோட மனசாட்சி/ இண்டியூஷன்/ இன்னர் வாய்ஸ் னு வெச்சுக்கலாம்.

சிலருக்கு கடவுளா இருக்கலாம்.

என் அம்மாக்கு எங்க அப்பா மாதிரி சிலருக்கு வேற யாராவது ஒரு மனுசுங்களே இருக்கலாம்.  

அதான் நோமா யாருனு அவங்கவங்களே முடிவு பண்ணிக்கட்டும்.

அதனால தான் ஒவ்வொரு சீன்லையும் கூட எக்ஸாக்ட் நடந்த விஷயங்களை சொல்லல.

அதையும் நம்ம மக்கள் அவங்களா அவங்களுக்கு நடந்த விஷயங்களை மேட்ச் பண்ணிக்கலாம் பாருங்க. 

அப்போ இதான் இந்த கதையோட முடிவு.  

ஆமா இந்த கதையை பொறுத்தவரை,

"எல்லாமே முடிஞ்சு போச்சு" என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மகிழ்ச்சி.

ஹாப்பி பர்த்டே நித்து உங்ககிட்ட சொன்ன மாதிரி மனோ நித்யாவ ஹீரோ ஹீரோயின்னா வெச்சு கதை எழுதிட்டேன். என்ன உங்ககிட்ட சொன்ன கதையை தான் எழுதலை.

 

This is (guest) entry #74 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − முடிவுக்கான கதை

எழுத்தாளர் - மனோ ரமேஷ்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.