(Reading time: 23 - 46 minutes)

2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி

This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ஜானகி

Ship

வானில் கருமேகங்கள் பொதுக்குழு கூட்டியிருந்த, ஒரு விடிந்தும் விடியாத அதிகாலை பொழுதில், பிரம்மாண்டமான சொகுசுகப்பல் “ப்ளூ சீ ஈகிள்” அந்தமானுக்கு புறப்பட்டது. கப்பலில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் உற்சாகத்தோடு கடல் பயணத்திற்கு தயாரானார்கள்.  கப்பல் புறப்பட்ட நேரம் ராகு காலமா? வடக்கில் ஸூலமா? தெரியாது. ஆனால் நடுக்கடலில் நடுங்கவைக்கும் ஒரு விபரீதம் நடக்கபோகிறது.

கப்பலின் AFT டெக்கிலிருந்த, ஸூட் ரூம் No.480  லிருந்து வெளிப்பட்ட தீபிகா, டெக்கின்  நீண்ட காரிடரை கடந்து லிப்ட் அருகே வந்தாள். Adventure Mirror ஆங்கில பத்திரிக்கையில் ஜெர்னலிஸ்ட்டாக பணிபுரியும் தீபிகா, போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையில்  அடைபட்டுள்ள ஒரு சர்வதேச சிலை கடத்தல் கும்பலின் தலைவனை பேட்டி எடுக்க, அரசாங்க அனுமதியுடன், அவளுடைய பத்திரிகையின் முழுச்செலவில் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

கப்பலின் மேல்தளத்தின் முனையில் (gunwale) திறந்தவெளியில் நின்று கொண்டு, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும் கடலின் அழகையும், கப்பலின் பிரமாண்டத்தையும் bird view பாயிண்ட்டில் பார்த்துக்கொண்டு சீ ப்ரீசின் வருடலை அனுபவிக்க ஆசைப்பட்டாள்.

ப்ளூடூத் ஸ்டேதாஸ்கோப் போல கழுத்தில் தொங்க, earphone காதில் மாட்டியிருந்தாள். “காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ” என்று ஹரிஷ் ராகவேந்திரா,  தீபிகா காதில் பாடிக்கொண்டிருந்தார். அன்று பாரதி எழுதிய  தீர்க்கதரிசன வரிகள் இன்று மெய்ப்படப்போவதை அறியாமல் லிப்ட்டின் வருகைக்கு காத்திருந்தாள்.

லிப்டின் கதவு திறக்க, உள்ளே ஆப்பரேட்டர் தவிர ஜீன்ஸ் அணிந்த வேறு ஒரு இளைஞனும் நின்றுருந்தான். “லிப்ட் மேல போகுதா? இல்லை கீழ போகுதா?”  தீபிகா கேட்டாள்.

“எங்கயும் போகல, இங்கயே நகராம நின்னுக்கிட்டு இருக்கு! கிண்டலான பதில் ஜீன்ஸ் இளைஞனிடமிருந்து வந்தது“

earphone ஐ கழட்டாமல் “நான் மேல போகணும்” என்றாள்.

அவன் ஏதோ சொல்ல, பாட்டின் சுவாரசியத்தில் மெய்மறந்திருந்த அவளுக்கு, அவன் சொன்னது காதில் விழவில்லை. “என்ன சொன்னீங்க?” earphone ஐ கழட்டி கேட்டாள்.

“அந்த பால்கனி விண்டோவை திறந்து கடலுக்குள்ள குதிச்சா நேரா மேல போயிறலாம்” ஜீன்ஸ் மீண்டும் அவளை சீண்ட

“ஹலோ மிஸ்டர்!  நான் கப்பலோட மேல கநல் (gunwale) கிட்டபோகணும்” தீபிகாவின் கோபத்தில் உஷ்ணம் கூடியதை தர்மாமீட்டர் உதவி இல்லாமலேயே உணர்ந்தான் இளைஞன்.  

“அதுக்கு நீங்க உள்ள வரணும்” அவனிடமிருந்து கூலா பதில் வர, வெறுப்புடன் லிப்ட்டில் நுழைத்தாள்.

அவனை பார்த்தாள். நடிகை தமன்னாவுக்கு ஒரு அண்ணா இருந்தா எப்படி இருப்பான் அப்படி செவசெவன்னு இருந்தான். ஒட்டடைக்குச்சி தேகம். ஆனால் சட்டென கவரும் முகம். வருஷ கணக்கா பயன்படுத்திய டூத் பிரஸ் மாதிரி ஹேர் ஜெல் தடவிய ஒழுங்கில்லாத கேசம். அழகிய முகத்தை ஹெட் லைட் போல் ஆக்கிரமித்த ரேபான் கண்ணாடி. மொத்தத்தில் சாமுத்ரிகா லட்சணத்தில் காந்த சாந்த முகம். பெயர் முகேஷ்.  

“நீங்க கப்பல்ல வொர்க் பண்றீங்களா?” முகேஷிடம் கேட்டாள் தீபிகா.

“இல்ல என்னோட வேலை நெய்தல்ல”

“நெய்தலா? .....சங்க காலத்தில ஆரம்பிச்ச கம்பெனியோ?

“நெய்தல் கம்பெனி இல்லை. கடலும் கடல் சார்ந்த பகுதிகள். அங்க தான் என்னோட வேலை”

“நங்கூரம் வேலை செய்யலேன்னா கடல்ல இறங்கி கப்பலை தாங்கி புடிக்கிற வேலையா ?” நக்கலாக அவள் கேட்க

“இல்லை ஜனங்களை ஏமாத்தறது என் வேலை” குறும்பாக  பதில் சொன்னான்.

சரியான குசும்பனா இருப்பான் போலிருக்கே என்று எண்ணியவள்  “மார்க்கெட்டிங் ரெப்பா? இல்ல அரசியல்வாதியா?”  

“ஏழரை மணிக்கு  மணிக்கு கிளப் ஹவுஸ் மெயின் ஹாலுக்கு வந்தா புரியும்” பொறுமையுடன் அவன் பதில் சொல்ல

“இன்னைக்கு விடிஞ்சதே ஒரு ஏழரை கூடத்தான்” என்று அவனை பார்க்காமல் சிரித்தாள்.

அதற்குள் மேல்தளம் வர, லிப்ட் வாய் திறந்து இருவருக்கும் வழி விட்டது. எதிரே கடல் நீர் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிர்பட்டது.

“என்னை பத்தி விசாரிச்ச நீங்க உங்களை பத்தி எதுவுமே சொல்லலையே” ரேபானை கழட்டி டி சர்ட்டில் சொருகியபடி  கேட்டான் முகேஷ்.

“I am தீபிகா. ஜெர்னலிஸ்ட்” கை கொடுத்தாள்.

செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல் சம்பிரதாயமாக கை கொடுத்தான்.

“எங்க வொர்க் பண்றீங்க தீபிகா?”  

“குண்டலகேசி தெரியுமா” என்றாள்

“குண்டக்க மண்டக்க யோசிக்க தெரியும். வேற எந்த கேசியும் தெரியாது”

“ஐம்பெரும் காப்பியமான குண்டலகேசி கதாநாயகி எங்க வேலை பாத்தாங்களோ அங்க நான் வேலை பாக்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.