(Reading time: 23 - 46 minutes)

ர்டர்க்கு நன்றி, இரண்டாவது கவுன்டரில் காபி பெற்றுக்கொள்ளவும் என ஸெல்ப் சர்வீசை நாகரிகமாக நினைவுபடுத்தியது TAB.

காபி எடுத்துவர கிளம்பிய முகேஷை அமர சொல்லி விட்டு கவுன்ட்டர் நோக்கி நடந்தாள் தீபிகா. முகேஷ் செல்போனை காதில் பொருத்த, தீபிகா கவுன்ட்டர் போவதற்கு பதில் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அங்கே சைனாக்காரனா? இல்ல நம்ம மணிப்பூரியா? ன்னு வித்தியாசம் தெரியாம சப்பை மூக்கு செப் ஒருத்தன் எதையோ குக்கிகிட்டு இருந்தான். அவனிடம் உப்பு கொஞ்சம் வாங்கிகொண்டு, கவுன்ட்டர் வந்து, காபி பெற்றுக்கொண்டு ஒரு காபியில் உப்பை கொட்டினாள். மறு கப்பில் கைப்பையில் இருந்து மார்கரை எடுத்து பச்சை நிற புள்ளி வைத்தாள். வைட்டரிடம் 1௦௦ ரூபாய் டிப்ஸ் கொடுத்து, சூடாக இருப்பதால் டேபிள் வரை கொண்டு வந்து தருமாறு கேட்டாள். தரும்போது பச்சை நிற டாட் வாய்த்த கப்பை தன்னிடம் தருமாறு கேட்டுக்கொண்டாள். நூறு ரூபாய் விசுவாசமாக தலை ஆட்டியது.

தீபிகா டேபிலுக்கு திரும்ப, போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த முகேஷ் சட்டேன பேச்சை நிறுத்தி புன்னகைத்தான். 

வைட்டர் காபி கப்பை தீபிகா சொன்னபடி வைத்து விட்டு போனான். “காபி சூடா இருக்கு நீங்க குடிங்க, நான் ஆறின பிறகு குடிக்கிறேன்” என்றாள் தீபிகா       

காபியை எடுத்து ஒரு சிப் உறிஞ்சினான் முகேஷ். அவன் முகத்தில் எந்த ரியாக்சனும் தெரியவில்லை. முழு காபியையும் குடித்து முடித்து விட்டு “நீங்க குடிங்க காபி ஆறிர போகுது”  என்றான் கூலாக.

தீபிகா காபியை ஒரு மடக்கு குடித்ததும், மறுகணம் குடித்ததை குமட்டிக்கொண்டு துப்பினாள். காபியில் உப்பின் சுவை உணர்ந்தாள். சந்தேகப்பட்டு கப்பை பார்க்க பச்சை புள்ளி சரியாகத்தான் இருந்தது. பிறகு எப்படி காபி இடம் மாறியது. புரியாமல் முழித்தாள்.

“என்ன தீபிகா, காபில உப்பு ஜாஸ்தியா இருக்கா?” சிரித்தான் முகேஷ்.

“காபில உப்பு இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.

“நான்தான் சொன்னன்ல மனுஷங்க மனச படிக்கிற திறமை எனக்கு இருக்குன்னு” என்று குறும்பாக சிரிக்க, அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை முதன்முறையாக உணர்ந்தாள்.

முகேஷ் தன் பேக்கிலிருந்து ஒரு சிறிய பார்சலை எடுத்து அவள் கையில் திணித்தான்.

“எனக்கு எதுக்கு இது?” தீபிகா கேட்டாள்.

“என்னை ஏமாத்த முயற்சி பண்ணி ஏமாந்தவங்களுக்கு நான் கொடுக்கிற பரிசு. இது என்னோட பழக்கம்” என்றான் முகேஷ்

கிப்ட் பார்சலை பிரித்துபார்த்தால் ஒரு காபி கப் இருந்தது. அதில் “HANDLE  ME WITHOUT  FEAR”  என்ற வார்த்தைகள் மின்னின.

அவளுடைய நன்றி நவிலலை எதிர்பார்க்காமல் அந்த இடம் விட்டு நகர்ந்தான் முகேஷ்.

மீண்டும் ஒரு காபி ஆர்டர் செய்து வாங்கினாள், சூடாக இருந்ததை ஆற்ற, அவன் கொடுத்த புதிய கப்பை பயன்படுத்தினாள். முகேஷ் கொடுத்த கப்பில் இருந்த காபியை குடிக்க முயன்ற போது, ஒரு வினோத சத்தம் அவளை திடுக்கிட வைத்தது. காபியை அப்படியே வைத்துவிட்டு, சத்தம் வந்த திசையை பார்த்தாள்.அங்கே ஒரு கொக்கு கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தம் சிதறி துடித்து, பின் உயிர் விட்டது. அதன் கண்கள் அகோரமாக அவளையே பார்ப்பது போல் உணர்த்தாள்.மனதில் லேசாக திகில் பரவியது. யாரோ வந்து கொக்கை அப்புறபடுத்த, வெள்ளைகாரி பேய் நினைவு வந்து அவள் நிம்மதியை கெடுக்க, “சஷ்டியை நோக்க சரவண பவனார்” சொல்லி, திரும்பி காபியை நோக்க, கப் அப்படியே இருக்க காபி மட்டும் மிஸ்ஸிங்.      

அருகில் ஆள் நடமாட்டமே இல்லாதபோது யாரும் குடித்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ஓட்டையா இருக்குமோ? சந்தேகம் வர கப்பை எடுத்து பார்த்தாள். எந்த ஓட்டையும் இல்லை. காபி கீழே காபி கொட்டிய அடையாளமும் இல்லை. வெயிட்டரை அழைத்து விபரம் சொன்னாள். யாரும் அந்த இடத்திற்கே வரவில்லை என்று உறுதியாக சொன்னான். தீபிகா மீண்டும் ஒருமுறை கப்பை பரிசோதிக்க, காபியை அந்த கப்பில் ஊற்றினாள். அவள் கண்ணெதிரே காபி மெதுவாக  மிகமெதுவாக கப்பில் இருந்து உறிஞ்சப்பட்டது. நொடிப்பொழுதில் காபி ஆவியாக மறைந்தது. விபரீதத்தை உணர்ந்த தீபிகா வீரிட்டு அலறினாள்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த முகேஷ் அங்கு ஓடிவந்தான். “ஹலோ குண்டலகேசி ஏன் குண்டுவெடிச்ச மாறி அலற்றீங்க?”

நடந்ததை சொன்னாள். காபி தானாக காணாமல் போவதையும் விவரித்தாள். “இந்த ஷிப்புகுள்ள (ship) சுத்தர ஆவிதான் இந்த கப்புக்குள்ள வந்து காப்பிய குடிச்சிருக்கும். இது அந்த வெள்ளைகாரி பேயோட வேலையா இருக்குமோ?”ன்னு பயந்தாள்.

முகேஷ் அந்த கப்பில் காபி ஊற்றினான். காபி மறையவில்லை. அப்படியே இருந்தது. ஆவி பறந்த காபியை, ஒரு சிப் உறிஞ்சி விட்டு “பேஸ்! பேஸ்! ரொம்ப நன்னாருக்கு! என்றான்.“காபில இருந்து ஆவி வெளிய போகும் .ஆனால் ஆவி காப்பிக்குள்ள வரவே வராது” என தத்துவம் பேசினான் முகேஷ்.

“பின்ன எப்படி இதெல்லாம்.நடக்கறது” என்று பயந்தவளை

“இதுக்கெல்லாம் காரணம் இந்த குட்டிச்சாத்தான் தான்” என்று தன்னையே சுட்டிக்காட்டினான்.    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.