(Reading time: 23 - 46 minutes)

வினோதமாக பார்த்த முகேஷிடம் “புரியலையா, சாகசமும், சாகசம் சார்ந்த பகுதிகளில் என்னோட வேலை இருக்கும். இது எப்படி இருக்கு?  

“அப்போலோவில் அட்மிட் பண்ண மாதிரி இருக்கு! தயவுசெய்து என்னை விட்டுறுங்க” கை எடுத்து கும்பிட்டான்.

“நீங்க பயணியா ? இல்ல marine இன்ஜினியரா?” என்ன டிகிரி?” பத்திரிகைகாரியின் புத்தியை காட்டினாள்.  

“சேச்சே..... நான் இந்த கப்பல்ல வேலை பாக்கிற ஒரு சாதாரண ஆள். பத்தாங்கிளாஸ் பெயில். ஹிஸ்டரில போயிருச்சு! படிப்பு வரல, ஆனா மனுஷங்க மனச நல்லா படிக்க தெரியும்”

“உண்மையாவா?”

“உங்க ஹேன்ட் பேக் மேல சத்தியமா! என்று சொல்லி சிரித்து விட்டு, “நீங்க” என்றான்  

“நான் ஒரு magazinல வொர்க் பண்றேன். வர்தா புயல் வர்றப்ப பழவேற்காடு லைட் ஹவுஸ் மேல நின்னு அப்டேட் நியூஸ் கொடுத்தவ நான். இப்ப ஒரு சவாலான வேலை எனக்காக காத்துகிட்டு இருக்கு” கொஞ்சம் சகஜ நிலைக்கு இறங்கிவந்தாள்.

“என்ன சாகசம் பண்ண போறீங்க? கடல் மேல நடக்க போறீங்களா? இல்ல கப்பல்ல இருந்து எகிறி குதிக்க போறீங்களா?”

அவனுடைய கிண்டல் பேச்சை பொருட்படுத்தாமல் “அந்தமான் ஜெயில்ல ஒரு V.I.P யை  இன்டர்வியூ எடுக்க போறேன்.

“உங்களோடு வேறு யாரும் வரலையா தீபிகா?”

“சென்னைல இருந்து நான் மட்டும் போறேன். போர்ட் பிளேயர்ல கேமரா மேன், டிரைவர், அசிஸ்டன்ட் எல்லாம் என்கூட சேந்துருவாங்க”

“நீங்க எந்த சூட்ல தங்கி இருக்கீங்க முகேஷ்?” என்று பேச்சை மாற்றினாள்.

“எனக்கெல்லாம் சூட் கிடையாது. காண்ட்ராக்ட் பேசிஸ்ல கப்பல்,கப்பலா அலையற எனக்கு லோயர் டெக்ல பத்தோட பதினொன்னா தங்கற ஜாதி நான். நீங்க ?”

 “AFT  டெக்ல சூட் No.480”

“ஐயையோ..... AFT டெக்கா? அதிர்ந்தான் முகேஷ்.

“எதுக்கு இந்த ஐயையோ?”

“இல்ல...அந்த டெக்ல தான் போன வருஷம் ஒரு வெளிநாட்டுகாரிய கொலை பன்னாங்க. அதோட ஆவி அங்க அலையறதா ஒரு பேச்சு. நிறைய பேர் அதோட நடமாட்டத்த பார்த்ததா பேசிக்கறாங்க”

“ஐயோ.... நிஜமாவா?” என்று அதிர்சியாக கேட்டாள் தீபிகா.

“என்னங்க நீங்க எதோ சவால் விரும்பி! சாகச மண்ணி! ன்னு பேனர் வைக்காத குறையா பெருமை பேசினீங்க...பேய்கூட சகஜமா பேசி,  பேட்டி எடுத்து, காபி with பேய் ன்னு article எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படி ஆடிப்போய்டீங்க”

“பேய்னா எனக்கு கொஞ்சம் பயம்” சமாளித்தாள் தீபிகா.

“மேடம் ஒண்னு சொல்லறேன்..தப்பா நெனைக்காதீங்க, ஜர்னலிஸ்ட்டா இருக்க நீங்க லாயக்கே இல்லை”

“ஏன்?” தீபிகா மூக்கு சிவந்தது.

“பின்ன வர்தா புயலயே வருதா வருதான்னு பார்த்து வரவேற்பு கொடுத்த நீங்க, ஆப்ட்ரால் ஒரு பேய், அதை ஜல்லிக்கட்டு காளையை துள்ளிக்கிட்டு அடக்குற மாதிரி தில்லா இருப்பீங்கன்னு பார்த்தா! வேஸ்டுங்க நீங்க. உங்களை நம்பி ஒரு பத்திரிகை வேற.. பாவங்க உங்க எடிட்டர்”   

“ஹலோ.... பத்து வருசமா இந்த பத்திரிகைல வேலை பாக்கறேன். எத்தனை பேர பாத்து இருப்பேன்! ஏதோ பால் வடியற முகமா இருக்கேன்னு பெர்சனலா பேசினா எனக்கே அட்வைசா?”

“சாரி... நான் பேசறது உங்களுக்கு எரிச்சலா இருக்கா?

“இல்ல ... தேன் ஒழுகற மாதிரி இருக்கு. என்ன சொன்னீங்க! ஜனங்களை ஏமாத்தறது உங்க வேலையா? இப்ப நான் சாலன்ஞ் பண்ணறேன். இன்னைக்குள்ள உங்களை நான் fool பண்ணி காட்றேன்” சவால் விட்டாள் தீபிகா.

“ஆல் தி பெஸ்ட், என் தலைல நீங்க மொளகா அரைக்க!”

ஏதோ நினைத்தவள் “ என்கூட ஒரு கப் காபி சாப்பிட்டா ஏமாறாம இருக்க உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும்”

“ஒ.எஸ், கண்டிப்பா...எனக்கு காபில சக்கரை கம்மியா போட சொல்லுங்க”

“ஏன் உங்களுக்கு சக்கரை வியாதியா?”

“இல்ல... என் பேச்சுல தேன் ஒழுகறதா சொன்னீங்க!  இந்த தித்திப்பும், காபில இருக்கற சக்கரையும் சேர்ந்து திகட்டிரபோகுது”

இருடி மவனே உனக்கு காபி இனிக்குதா? இல்ல உவர்க்குதா? ன்னு நான் இப்ப முடிவு பண்ணறேன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, அவனுடன் galley (கிச்சன்) உள் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

டேபிள் மேல் இருந்த  TAB யில் மெனுகார்டு நண்டு வறுவலிருந்து நரசுஸ் காபி வரை காட்டியது. கப்பலில் அனைத்தும் இலவசம் (எல்லாமே டிக்கெட் தொகையில் அடங்கிவிடும்) என்றாலும் இரண்டு காபி மட்டும் ஆர்டர் செய்ய டச் பானலில் ஆள்காட்டி விரலில் டச்சினாள்.     

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.