(Reading time: 9 - 18 minutes)

யப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. அவர் குணமாகுறது உங்ககிட்ட தான் இருக்கு. நீங்க உங்க உடம்பைக் குறைச்சீங்கன்னா, உங்களுக்கும் ஆரோக்கியம், அவரோட மனக்குழப்பமும் தீரும்!"

என்னோட எடை இப்படி அவரை யோசிக்க வச்சிருச்சே டாக்டர்!

“சுத்தியுள்ளவங்க உங்க உடல் எடையைப் பற்றி ஏதாவது கிண்டல்,கேலி பேசி அவர் மனதைப் பாதித்து இருக்கலாம். இல்லைனா ஆரோக்கியக் குறைபாடு வரும்ன்னு நினைத்திருக்கலாம். உங்க அதீத எடை பற்றி அவர் சிந்தித்து இப்படி கற்பனை ஆரம்பிச்சிட்டார். ஆனால் அவர் உங்களைப்பற்றி இவ்வளவு யோசிச்சு இருக்கிறார்னா உங்க மேல இருக்கிற அக்கறையும் அன்பும் தான் காரணம்!"

புரியுது டாக்டர். முயற்சி பண்ணி என்னோட எடையைக் குறைக்கிறேன். இப்போதைக்கு அவர் என்னைப் பார்த்து பயப்படாம இருக்க என்ன பண்றது?

அவரோட மனக்குழப்பத்தைக் குறைக்க சில மருந்துகள் தர்றேன். அவரையும் உடற்பயிற்சி, தியானம் பண்ண சொல்லுங்க. டிவி முன்னாடியே இருக்கிறத நிறுத்திட்டு இருவரும் சேர்ந்து எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க. இன்னொரு விஷயம் மேடம், நான் அவரோட பிரண்ட்ன்னு உங்ககிட்ட பொய் சொல்லி உங்களை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கார். அதே பொய்யை நீங்க வெளிப்படுத்தாம பார்த்துக்கங்க. அவரை என்னோட நண்பராகவே ஏத்துக்கிட்டேன். கவலைப்படாம போய்ட்டு வாங்க. நாளைடைவில் எல்லாம் சரியாகிடும்.

டாக்டர் பீஸ்?

பீஸ் எல்லாம் அவர் குணமானதும் தரலாம்.வித்தியாசமான பேஷன்ட் இவரு. அதுனால இவரைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். வேற டாக்டர் மட்டும் போகாம என்கிட்டே வாங்க.

நன்றி டாக்டர்.

இன்னொரு விஷயம். உடல் எடை அதிகமானதுக்குப் பலவேறு காரணங்கள் இருக்கு. இந்த உலகமயமாக்கலால் வரும் துரித உணவுகள், எண்ணையில் பொறித்த மாமிசம், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்ன்னு எல்லாமே நம்ம மக்கள் உடல்நிலையைப் பாதிக்குது. நீங்க அதீத எடையா இருக்கிறதைக் குற்றவுணர்ச்சியோட பார்க்காமல், ஆரோக்கியத்தை நோக்கிய பாதைக்குத் திரும்புங்க. உங்க குடும்பத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.

ரொம்ப நன்றி டாக்டர்.

கிளிங்! கிளிங்!

பழனி, ராஜேந்திரனை வரச்சொல்லு!

ராஜேந்திரன், உங்க மனைவிகிட்ட எல்லா விவரமும் சொல்லிட்டேன். சீக்கிரமே எடை குறைஞ்சு பழைய மாதிரி ஆகிடுவாங்க.

பழைய மாதிரி ஆகிடுவாளா டாக்டர்?

ஆகிடுவாங்க! கவலையேபடாதீங்க!

பழனி, சார்கிட்ட பேசிட்டு, நம்ம ஹாஸ்பிட்டல் பைல் ஒண்ணு சார் பேர்ல பதிஞ்சிரு!

சரி டாக்டர்! நன்றி!                                                                        

டாக்டர் புன்னகையுடன் தலையசைக்க, ராஜேந்திரனும், கஜலட்சுமியும் கிளம்பினர்.

"ன்ன பிரியாணி சாப்பிடப் போலாமா?"

"வேணாங்க! என்னை வீட்டுல விட்ருங்க. நீங்க மட்டும் இன்னிக்கு பிரியாணி சாப்பிடுங்க!"

"நீ என்ன சாப்பிடப்போற?"

"ஒரே ஒரு வாழைப்பழம்!"

 

This is entry #78 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புக்கான கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - பூர்ணிமா செண்பகமூர்த்தி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.