அன்புள்ள பாலா,
நலம் நலமறிய ஆவல்! இப்படித் தான் முன்பெல்லாம் கடிதத்தை ஆரம்பிப்போம். அந்தச் சொற்களில் உண்மை விரவியிருந்தது... ஆத்மார்த்தமான அன்பு புதைந்திருந்தது. ஆனால் இன்று?
தினமும் பதிலை எதிர்பாராமலேயே சம்பிரதாயத்துக்காக, ‘வாட்ஸ் அப்’ என்கிறார்கள்... ‘ஹவ் ஆர் யூ?’ என்கிறார்கள். அப்படி ஆகிவிட்டதா நம் நட்பும்? உண்மையில் வேதனைப்படுகிறேன்...
நம் நட்பு, விட்ட இடத்திலிருந்து மீண்டும் துளிர்த்திருக்கிறது என மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் காலத்தின் சுழற்சியால் அது பட்டுப் போனது எனத் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.
எனக்குப் பணம் அவசியம் தான்... அதற்காகப் பார்ப்பவர்களிடமெல்லாம் உதவி கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் என்பதை நீ கூடப் புரிந்துகொள்ளவில்லை.
ஒருவேளை எனக்கும் உன்னைப் போல் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருந்திருந்தால் நானும் இது போல் நினைத்திருப்பேனோ என்னவோ?
நான் ஓர் முக்கிய முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என் மகளுக்கு, கடுமையான ‘ஆட்டிசம்’ இருப்பது நீ அறிந்ததே. அவள் வளர்வதும், அதனால் ஓர் பெண்ணிற்கு உரிய இயற்கை மாற்றங்கள் அவளுக்கு நிகழ்வதும் இயல்பு அல்லவா? அவள் கூடிய விரைவில் பருவம் அடைந்துவிடுவாள்.
அதைத் தடுக்கக் கூடிய ஹார்மோன் மருத்துகளைப் பற்றி மருத்துவர் விளக்கினார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே என் மகளுக்குத் தெரியாது. பிற்காலத்தில் அவளால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
அதனால் மருத்துவர் குறிப்பிட்ட ஹார்மோன் ஊசிகளை என் மகளுக்குப் போடுவதா, வேண்டாமா என ஓர் தகப்பனாக எனக்குள் பெரும் குழப்பம்.
இரு பெண்களின் தந்தையான உனக்கு என் கஷ்டம் புரியக்கூடும் என்பதால் அதைப் பற்றி உன்னிடம் ஆலோசனை கேட்கலாம் என நினைத்தேன். நீ இல்லையென்றாலும் உன் மனைவியிடமாவது கருத்துக் கேட்கலாம் என உன் வீட்டுக்கு வந்தேன்.
துரதிர்ஷ்டவசமாக நீ உன் மனைவியிடம் பேசியதையும் கேட்டேன்.
உன்னிடம் பணம் கேட்கப் போகிறேன் என நீயாக அனுமானித்துக் கொண்டாய். பரவாயில்லை... உன் மேல் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஓர் சராசரி குடும்பத் தலைவனாக நடந்து கொண்டாய்.
நான் வேறு யாரிடமாவது பேசித் தெளிந்து கொள்கிறேன். நான் உன் மேல் கொண்ட நட்பின் காரணமாகவே உனக்கு இதைத் தெளிவுபடுத்த எண்ணினேன்.
நீ சொல்லும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளால் என் உணர்வுகளை நான் விளக்கி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே இக்கடிதம்.
நலம்... நலமறிய ஆவல்!!!
இப்படிக்கு,
வெங்கடேஷ்.
கஷ்ட காலத்தில் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் தோள் கொடுக்காமல் பின்பு எதை முன்னேற்றம் எனப் பீற்றிக் கொள்கிறோம்? கையடக்கக் கருவிகளால் நாம் உலகத்தை மட்டும் சுருக்கவில்லை; மனித உறவுகளையும் தான்.
பாலகுமாரின் கைகள் அனிச்சைச் செயலாக வெங்கடேஷின் எண்ணை அழுத்தின. ஆனால் தொடர்பு அறுக்கப்பட்டிருந்தது.
This is entry #90 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்
எழுத்தாளர் - லாவண்யா
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.