(Reading time: 8 - 15 minutes)

2017 போட்டி சிறுகதை 91 - யார் சுமங்கலி - பூஜா பாண்டியன்

This is entry #91 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

Marriage

விடியற்காலை சூரியோதயத்தை ஜன்னல் வழியாக பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சம்யுக்தா .  திருமணமாகி கணவன் வீடு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றான. இபோதும் தனது தாயை பற்றிய என்ன ஓட்டங்களில் அவள் .......

அவளது பெற்றோர் ஆதர்சன தம்பதியினர். அப்பா ஜெய் ஆகாஷ் , இருதய சிகிச்சை நிபுணர். அடுத்தவர்க்கு உதவுவதில் அதிக நாட்டம் கொண்டவர். அம்மா, ஷீலா தேவி வீட்டில் Home Minister அவர் தான். வீட்டை பற்றி எந்த கவலையும் அப்பாவை அண்டாமல் பார்த்து கொள்வார்...........

அவர்கள் இருவரும் சண்டை இட்டு சம்யுக்தா பார்த்ததே இல்லை எனலாம். ஒருவர் நினைப்பதை மற்றவர் சொல்லாமலே புரிந்து கொண்டு அதற்கு தக்க மாதிரி நடந்து கொள்வார்கள்.

அது எப்படித்தான் தெரியுமோ ? இரவு எந்த நேரமானாலும் ,அப்பாவின் கார் வீட்டின் கேட்டிற்குள் நுழைவதற்கு  ஐந்து நிமிடம் முன்பு , அம்மா சரியாக, இட்லி குக்கரை அடுப்பில் வைப்பார்கள்,...............

இத்தனைக்கும் மருத்துவ மனையிலிருந்து கிளம்பும் பொழுது அப்பா போன் கூட செய்திருக்க மாட்டார்...............

நான் கூட கிண்டல் செய்வேன்,”முதல் மரியாதை சிவாஜி ரேஞ்ச்க்கு இருக்கீங்கமா “ அப்பாவோட கால் கூட இல்லை, கார் டயர், நம்ம தெரு முனை தொட்டதும், உங்களுக்கு  அப்படியே கை, கால் உதறி டக்குன்னு இட்லி அவிக்க கிளம்பிடரிங்க, என்னே உங்க பதி பக்தி” என்று .............

அப்பாவும், எப்பவும் எங்க சொந்தகாரங்க கிட்ட எல்லாம் அம்மாவை விட்டே குடுக்க மாட்டார். எந்த dinnerஉடன் கூடிய Medical Conference க்கு போய்ட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்து அம்மா கையால் ஒரு தோசையாவது சாப்பிடாமல் தூங்க மாட்டார்.........

இவர்களை பார்த்து வளர்ந்ததால், தனக்கு வரும் கணவனும் , இவ்வளவு அன்பாக, அரவணைப்பாக இருக்க வேண்டும் என நினைத்தாள் சம்யுக்தா......

அவர்களது அன்யோநியத்தை பார்த்து ஊரார் கண் பட்டதோ!!!!!!!! இல்லை  சம்யுக்தாவின் கண்ணே பட்டதோ!!!!!!!!! அவளது தந்தை ஒரு விபத்தில் உயிர் இழந்தார்...........

எதிர் திசையில்  வந்து கொண்டிருந்த டாங்கர் லாரியின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி வந்து,  அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பள்ளி குழந்தைகளின் மேல் இடிப்பதற்கு முன், தனது SUV காரை எதிர் திசையில் திருப்பி, அந்த லாரியை இடித்து நிறுத்தினார். இதில் பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  

ஆனால் அவளுடைய அப்பா ஜெய் ஆகாஷ், அடி பட்டு கோமாவிற்கு சென்றார்....... மருத்துவமனையில்  இனி அவர் பிழைக்க வழி இல்லை என தெரிந்த பின்............. மனதை கல்லாக்கி கொண்டு அவளது தாயார், தந்தையின் உறுப்புக்களை தானமாக வழங்க முடிவெடுத்தார்............

அவளது தந்தை ஒருவர் இறந்து, பலருக்கு வாழ்வளித்தார்..........

தாய், தந்தையின் இருபத்தைந்து வருட மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது..........

அதன் பின் ஆறு மாத காலம் தாயும், மகளுமாக வாழ்க்கையை எதிர் கொண்டனர்...........

சம்யுக்தாவின், கல்யாண வயதை மனதில் கொண்டு அவளது தாயார் ஷீலா தேவியும், மகளுக்கு மாப்பிள்ளை தேட முடிவெடுத்தார்..............

அப்பொழுது ஜெய் ஆகாஷின் , மருத்துவ நண்பர்  மூலமாக இந்த வரன் வந்தது...........மாப்பிள்ளை டாக்டர், பெயர் கவின்.  

அவரும், “இந்த மாப்பிள்ளையை முன்பே ஜெய்யிடம் சொன்னேன்மா அவனும் , நேரில் பார்த்து  மிகவும் பிடிச்சிருக்குன்னு சொன்னான்.......... ஆனா அதன் பின்பு, என்னன்னவோ நடந்து விட்டது....... அதனால் உடனே எதுவும் சொல்ல முடியல.......... இப்ப சொன்னா சரியாய் இருக்கும் என்று தான் சொல்ல வந்தேன்”  என கூறினார்.

இதற்க்கு மேல் வேற வேண்டுமா? அப்பாவுக்கே பிடித்த வரன், உடனே பேசி திருமணமும் இனிதே முடிந்தது.........

சம்யுக்தவிர்க்கு தான், தனது தாயை தனியே விட்டு வர வருத்தமாக இருந்தது..........

ஷீலாவோ, “நீ உன் புகுந்த வீட்டில் நல்லா வாழ்ந்தாலே எனக்கு மகிழ்ச்சி என கூறிவிட்டார்..............

குட் மார்னிங் சம்யு “ என கவினும், சொல்லி அவளை பின் புறம் இருந்து அணைத்து, அவள் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசி, ஷேவிங் எப்படி என கேட்டான்.

“ம்ம்ம்ம்..........நல்லா இருக்கு, வழு வழுன்னு பேபி கன்னம் மாதிரி “  அவன் ஷேவ் செய்யும் தினங்களில் எல்லாம் இப்படித்தான். அவளும் திரும்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்...........

அந்த வழு, வழு கன்னமும் , அந்த ஆப்டர் ஷேவ் லோஷனின் வசமும் சம்யுவுக்கு மிகவும் பிடித்த ஒன்று..........

அதற்குள் , கீழிருந்து பாத்திரம்  உருட்டும் ஓசையும், அதற்கு மேல் மாமியாரின் அதிகார குரலும் கேட்டது.........

தினமும் கேட்பது தான்........... மாமியார் பத்மாவிற்கு எப்பொழுதும் யாரையாவது குறை கூறி கொண்டே இருக்க வேண்டும்.......   தனது கணவனிடமும் எப்பொழுதும் சண்டை தான்.........

திருமணமாகி வந்த புதிதில், சம்யுவிர்க்கு, ஆச்சரியமாக இருந்தது.......

மாமியார், தனது கணவருக்கு எதுவும் செய்ய மாட்டார்........ அவருக்கு மரியாதையும் அளிக்க மாட்டார். வீட்டு நிர்வாகமும் மிக மோசம்..........

சம்யுக்தா வந்த பின் எல்லாவற்றையும் சரி செய்தாள்.............. வீடே அழகானது...............

அவளது மாமனார் வெற்றி , “நீ வந்த பின் தான் நல்ல சாப்பாடே சாப்பிடுகிறேன் சம்யுமா” என கூறுவார்............

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.