(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 92 - இனியவன் - ஜான்சி

This is entry #92 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புச் சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - ஜான்சி

Husband

ரு தடவைச் சொன்னாக் கேட்க மாட்டியா சுப்ரி….. சுள்ளென விழுந்தன சுரேனின் வார்த்தைகள்.

இவன் ஏன் இப்படி மாறிப் போனான்? மனதிற்க்குள் நொந்துப் போனாள் சுப்ரியா. எல்லாம் இந்த கொஞ்ச நாட்களாகத் தான் முன்னேயெல்லாம் உயிராகக் கொஞ்சியவன் தானே நினைத்துக் கண்கள் கலங்க ஆரம்பித்தன சுப்ரியாவிற்க்கு.

இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவருடைய குடும்பமும் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளவேயில்லை. வேறு வழியே இல்லாமல் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. ஒரே ஊரில் இருப்பது அடிக்கடி வீட்டினரின் பாரா முகத்தைப் பார்த்து பார்த்து மனம் வலிக்க, அதிலும் தன் வீட்டில் மிகவும் செல்லமாய் வளர்ந்த சுப்ரியா அடிக்கடி இந்த காரணத்தினாலேயே மனம் சோர்ந்துப் போவதைப் பார்த்து அவன் தங்கள் இருவருடைய வேலைகளையும் முயன்று பக்கத்து ஊருக்கு மாற்றிக் கொண்டான்.

பெற்றோரைப் பற்றி நினைக்க கூட அனுமதிக்காதவனாக திகட்ட திகட்ட அவளை அன்பில் நனைய வைத்தான். என்றைக்காவது அவள் தப்பித்தவறி தன்னுடைய பெற்றோர் குறித்து ஏக்கமாக பேச முனைகையில் அப்படியே பேச்சை மாற்றி கலகலக்க வைப்பான். அவன் சொல்லாவிட்டாலும் அவனுக்கும் அவன் பெற்றோரைப் பிரிந்த ஏக்கம் இருக்கும் என்று அறிந்தவளாக அவளும் அவனை தேற்றிக் கொள்வாள். 

இப்படியே கடந்திருந்தது ஒன்றரை வருடங்கள் அப்பொது தான் அவர்களுக்கு கிடைத்தது அவர்கள் வீட்டின் புது குட்டி உறுப்பினரின் வருகைக்கான செய்தி. இருவரும் அத்தருணம் நெக்குருகி விட்டார்கள். சுரேனோ அவளை அணைத்துக் கொண்டு தேம்பவே ஆரம்பித்திருந்தான்.

ஆர்வமாய் டாக்டரிடம் சென்று என்னச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று அத்தனைப் பட்டியலையும் கொண்டு வந்து மிக அக்கறையாக அதைப் பின்பற்ற வைத்தான். மசக்கையில் அவள் மிகவும் கஷ்டப் பட அவளுடைய அலுவலக வேலையை கட்டாயமாக அவளை நிறுத்த வைத்தான்.

நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ? வேலையெல்லாம் நம்ம குட்டி கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் வேணா பார்த்துக்கலாம் என்றுச் சொல்லி கரைத்து கரைத்தே அவளை வேலையை விட வைத்தான். அவளாலும் அப்போது வீட்டைக் கவனித்துக் கொண்டு வேலைக்குச் செல்வது சிரமமாக இருக்கவே தன்னுடைய கரியர் குறித்து கவலையாக இருந்தாலும் அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், இப்போது குழந்தை தான் பிரையாரிட்டி என்று துணிந்தே வேலையை விட்டாள் ஏனடா வேலையை விட்டோமென்று பின்னர் வருந்தப் போவதை அறியாமல்.

அவளுக்கு ஒரு குறையுமில்லாமல் தான் பார்த்துக் கொண்டான் என்றுச் சொல்ல வேண்டும். வீட்டு வேலைக்கு வேலையாளை அமர்த்திக் கொண்டான்.மிச்சம் மீதியுள்ள சின்ன சின்ன வேலைகளை மட்டுமே அவளைச் செய்ய அனுமத்தித்தான். அவள் கனமான எதையும் தூக்கவோ, உடல் வருத்தும் வேலைச் செய்யவோ விடவில்லை.

இரவும் தூங்குவானோ என்னவோ அடிக்கடி அவள் எப்படிப் படுத்திருக்கிறாள் என்பதை கவனித்துக் கொண்டே இருப்பான். எக்குத்தப்பாக படுத்திருந்தால் அவ்வளவு தான் நடு இரவிலும் அரட்டி அவளை ஒழுங்காக படுக்க வைப்பான்.

ஆஃபீஸில் அதிக வேலைப் பளு போலும் அலுத்துக் களைத்து வருபவன் அவளை ஒரு போதும் வேலைச் சொல்லாமல் அவனே தன்னுடைய வேலைகள் அனைத்தும் பார்த்துக் கொள்வான்.

வீட்டில் தனியாக இருந்து அவளும் என்னதான் செய்வாள்? டிவி பார்ப்பதுவும், சுரேன் கொண்டு வந்து குவிக்கும் பழங்களை தொட்டும் தொடாமல் ருசி பார்ப்பதுவும் புத்தகங்களை வாசிப்பதுவும் தவிர வேறு வேலை எதுவுமில்லை.

முதல் மூன்று மாத மசக்கைக்கு பிறகு இப்போது அவள் வெகுவாக தெளிவாகியிருந்தாள், சுரேனுடைய உதவி தேவைப் படாமலே தன்னுடைய வேலைகளைச் செய்யவும் அவளால் முடிந்தது. அப்போதுதான் தான் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது அவளை மிகவும் வருத்தியது. கூடவே சுரேனுடைய கடும் சொற்களும்.

முன்பு கொஞ்சிப் பேசுவதைத் தவிர வேறொன்றும் அறியாமலிருந்தவன் இவன் தானா? என்று எண்ணும் விதமாக கடுகடுவென்று இருந்தான் அவன். முகத்தில் சிரிப்பேயில்லை. காரணங்கள் எத்தனையோ யோசித்துப் பார்த்து விட்டாள் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

ஒருவேளை தான் கருவுற்றது அவனுக்கு பிடிக்கவில்லையோ? இல்லையே ஏதோ லாட்டரி அடித்த உற்சாகத்தோடு தானே அவன் இருந்தான் இப்போது என்னவாயிற்று?

அப்படியென்றால் நான் வேலையை விட்டது அவனைப் பாதிக்கிறதா? செலவுகள் அதிகமாக இருக்கும் என்று பயப்படுகின்றானா? அதற்க்கும் பதிலில்லை. ஒருமுறை தனக்கு தற்போது உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் தான் மறுபடியும் வேலைக்குச் செல்லலாமா? என்றுக் கேட்ட போது சள்ளேன்று விழுந்தான். ஒருவேளை இவனும் பெண்களை அடிமைத்தனமாய் தன் கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஆண்மகனோ? என்றொரு எண்ணமும் வந்துச் சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.