(Reading time: 14 - 27 minutes)

ம்ம்…எதிர்பார்ப்பில் விரிந்தன அவள் விழிகள். வலி மயக்கத்தில் சிஸ்டர் சொன்ன “பேபி கர்ள்” என்றுக் கேட்டதும் சற்றுத்தூரத்தில் கண்பார்வைக்கு எட்டும் வகையில் தான் முன் பின் பார்த்திராத ஒரு குட்டி குழந்தை சின்னக் கையசைப்போடு இருந்ததையும் , அதைப் பார்த்தபடியே தான் கண்செருகி மயக்கத்திற்கு சென்றதையும் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

பூரிப்பும் எதிர்பார்ப்புமாக தன்னுடைய வயிற்றில் உதித்த ஜீவனைக் குறித்து வருணனைக் கேட்க காத்திருக்க, அவள் கணவனோ அவளைத் தவிக்க விட்டான்.

ம்ம்ம்…சொல்லுங்க..

அவ அப்படியே அவளோட………

ம்ம் சுரேன்………செல்லக் கோபத்தோடு முறைக்க……..

அவ அப்படியே அவ அப்பா மாதிரி….உற்சாகத்தில் கண்ணடித்தான் அவன்.

ஆமா சும்மாவே ரெண்டு பேரும் என்னைக் கண்டுக்காம கொஞ்சிக்குவீங்க….. சலித்தவளை

நாங்க ரெண்டு பேரும் உன்னை இனிமே கொஞ்சுறோம் சரியா? செல்லமாய் மனைவியின் தலையை முட்டி சமாதானப் படுத்தினான் அவன்.

தானும் அவர்களோடு சேர்ந்துக் கொள்ள விரும்பியோ என்னவோ அவர்கள் செல்ல மகளும் தொட்டிலினின்று வீறிட ஆரம்பித்தாள்.

குழந்தைக்கு நீ முழிச்சதும் ப்ரெஸ்ட் ஃபீட் செய்யணும்னு சிஸ்டர் சொன்னாங்க சுப்ரி என்றவனாய் மனைவியைக் கைத்தாங்கலாய் அமர வைத்தவன் குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்து வாகாய் அவள் கைகளில் கொடுத்தான். மடிக்கு தலைகாணியைக் கொடுத்து உயரத்தைச் சரி செய்தவன். மனைவியின் உடையையும் தேவைக்கு ஏற்ப தளர்த்த உதவி செய்தான். மனைவிக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தாமல் அவளுடலையும் குழந்தையையும் அவள் தோளில் துண்டைப் போட்டு மறைத்தவன் தாய்க்கும் சேய்க்குமான அந்த உறவில் தொல்லைச் செய்யாமல் இருக்க சற்றுத் தூரமாய் சென்று நின்றுக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவன் திரும்ப வர, அங்கே அவன் குழந்தை பசியாறியதும் சமர்த்துப் பாப்பாவாய் சிஸ்டர் தோளில் சாய்ந்து தூக்கத்திலிருக்க, சிஸ்டர் குழந்தையை எவ்வாறு தோளில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தன் மனைவிக்கு பாடமெடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிஸ்டர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைக்க, இவன் மறுபடி மனைவி கட்டிலில் வாகாக படுக்க உதவிச் செய்தான்.

ழிந்து விட்டது ஒரு மாதம், அது வரையில் லீவுப் போட்டிருந்தவன் அன்றுதான் வேலைக்கு மறுபடிச் சென்றிருந்தான். வீட்டு வேலைகள் செய்ய ஆளிருக்க அவளுக்கு குழந்தையைக் கவனிப்பது அவ்வளவு சிரமமாயில்லை. பகலில் குழந்தை உறங்கும் போதெல்லாம் தானும் உறங்க அவளுக்கு உத்தரவு. இரவிலும் அவள் தூக்கம் குறையாமல் முடிந்தவரையில் தானே குழந்தையைப் பார்த்துக் கொள்வான்.

பேறுகாலத்திற்க்குப் பின்னதான போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் எனும் மன அழுத்தம் குறித்து அவள் பயந்த மாதிரி எதுவும் நிகழவில்லை. இன்னும் எத்தனையோ பயங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான் அவள் கணவன் என்று அவளுக்கு பெருமிதமாக இருந்தது.ஆனால் முன்பு ஏன் அவ்வளவு சிடு சிடுப்பாக இருந்தான் என்பது அவளுக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

தினமும் இரவு தகப்பனும், மகளும் அதிகமாய் கொஞ்சிக் கொள்வது இன்னமும் அவளுக்கு கடுப்பு தான். பாப்பா நம்ம ரெண்டு பேர் நோஸ் ஒரே மாதிரி எனும் முன்.

அவ கண்ணு என்னை மாதிரியாக்கும் என்று இவள் நொடித்துக் கொள்வாள். பாவப்பட்டு அவளையும் அவர்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள். இனிமையாய் கடந்தன நாட்கள். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்க்கு இருவர் குடும்பத்திற்க்கும் அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அழைப்பு விடுத்து வந்தான் அவன்.

சுரேன் உங்களை எதாவது சொல்லிட்டா…என்று கலங்கியவளை தேற்றினான். இரண்டு நாட்கள் முன்பே அவனுடைய வீட்டினர்கள் வந்து விட்டார்கள். தானே பெயரை தெரிவுச் செய்யப் போவதாக சுரேனுடைய தங்கை உரிமைப் பாராட்டவும் மகிழ்ச்சியாகவே சுப்ரியா விட்டுக் கொடுத்தாள்.

அவளுடைய தரப்பிலிருந்து அவள் அம்மா மட்டும் வந்திருக்க சொல்ல முடியாத மகிழ்ச்சியில் அவள் திளைத்தாள். கணவனை அவள் பார்த்த பார்வையில் காதல் கரை புரண்டு ஓடியது.

ஆயிற்று மிகச் சிறப்பாக அவர்கள் செல்ல மகளுக்கு "பரி" என்று பெயரிட்டு விழா நடைப் பெற்றது. பெற்றோரைப் பிரிந்து வந்திருந்தாலும் தான் வழக்கமாய் செய்யும் கடமை எதையும் அவன் விட்டிருக்கவில்லை.ஒவ்வொரு மாதமும் அப்பா வங்கிக் கணக்கில் தேவையான பணம் போய் சேர்ந்து விடும் படி அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய குடும்பம் போல் அவளுடைய குடும்பமும் வெகு விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தன்னுடைய மனைவியை மகள் தூங்கிக் கொண்டிருக்கும் சமயமாக தன் மேல் சாய்த்துக் கொண்டு சின்னக் குரலில் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தான்.

“உனக்கு தெரியாது சுப்ரி சொந்தமெல்லாம் எவ்வளவு தேவைன்னு புரிய வைச்சது நம்ம பாப்பா உன் வயித்தில வந்த பிறகு தான். எனக்கு ரொம்ப பயமாயிருக்கும். எப்படிடா நாம சமாளிக்க போறோம்னு…. அதிலயும் ஒவ்வொருத்தரும் வித விதமா எதையாவது சொல்லி பயம் காட்டுவாங்களா?” அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன்..........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.