(Reading time: 4 - 7 minutes)

2017 போட்டி சிறுகதை 95 - அரளிப்பூ - கற்பகம்

This is entry #95 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - கற்பகம்

Arali

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

பூமி நிற்காமல் சுற்றுவது போல ஐயரும் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். 

அடுப்புக்கரி  போன்ற நிறம். எரிமலை வெடிப்பது  போன்ற குரல், நெருப்புப் போன்ற சிவந்த வாய் ; பச்சோந்தி போன்ற கண்கள் கொண்ட  ராசப்பன்  எப்போதும் கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பான்.

டேய் ! முருகா ! எப்பப்  பார்த்தாலும் உட்கார்ந்துகிட்டே  இருக்க. குனிஞ்சு நிமிர்ந்து  வேலை செய்டா!  சோம்பேறிப் பயலே! என்று அதட்டுவான்.

மில்லில்  தன்னிடம் வேலை செய்யும் ஆட்களிடமும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கடுமையாக  நடந்து கொள்வான். 

பெண்கள் என்றாலும் சரியாக  வேலை செய்யவில்லை என்றால்  ஈவு இரக்கம் இல்லாமல் திட்டுவான். பெத்த அம்மாவையும்  கூட கோபம் வந்தால்   வாய்க்கு  வந்தபடி திட்டுவான்.

பிளாட்டினம் விலை அதிகமாக இருந்தாலும் மக்களிடம்  மதிப்பில்லை. ஆனா மின்னும் தங்கத்திற்குத் தான்  மதிப்பு அதிகம்.

காசு பணம் நிறைய இருந்தாலும்  என்ன ? ... ராசப்பனுக்கு அவனுடைய  நிறத்தைப் பார்த்து எந்தப் பொண்ணும் திருமணம்  செய்து கொள்வதற்கு  விரும்ப வில்லை. குணத்தைப்  பார்த்து  யாரும் கல்யாணத்திற்குப்  பெண்  கொடுக்க விரும்பவில்லை.

தாய் தந்தை யாரும் இல்லாத அனாதையான விஜியை பெரியப்பா எடுத்து வளர்த்தார். அவருக்கும் மூன்று குழந்தைகள். அதனால் பெரியம்மா அவளை  ஒரு பாரமாக நினைத்தாள். ஐந்தாவது படிக்கும்போது  அவளைப் பள்ளிக் கூடத்தை விட்டு நிறுத்தி , தான்  வேலை செய்யும்  மில்லுக்கு வேலைக்கு அனுப்பினாள். பெரியப்பாவால் எதுவும் பேச முடியவில்லை.

வாய்க்கும் வயிறுக்கும் நடக்கும் போராட்டாத்தால் ராசப்பனிடம்  பெரியம்மா  வட்டிக்குப் பணம்  வாங்கியிருந்தாள். பணமும்  வட்டியும் கொடுக்க முடியாது கஷ்டப்பட்டாள். ராசப்பன்  வீட்டு வாசலில் நின்று  “மானங்கெட்ட ஈனப்பிறவி வாங்குன காசை கொடுக்கத் தெரியாது “  எனக்  கண்டவாறு   பேசுவான்.

புரோக்கர் கந்தசாமி பெரியம்மாவிடம் நீ! ஏன்? கஷ்டப்படுகிறாய்! விஜியை  ராமசாமிக்கு கல்யாணம் கட்டி வச்சிரு ! உன் பாரமும் குறையும்.  கடனும்  தீர்ந்து போகும். என்றான்.

பொட்டைப் புலம்பல் பிறருக்குத் தெரியவில்லை. அவள்  விருப்பத்தையும் யாரும் கேட்க விரும்பவில்லை.

கரிக்கட்டைக்கு நாட்டுத் தக்காளி போல செவத்த இப்படி ஒரு பெண்ணா! ஊரே பேசிக்கொண்டது. “பெண்ணாய் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.. “ என்று அவளால் அழுக மட்டுமே முடிந்தது.

திருமணம் முடிந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக சாப்பிடப் போனார்கள். அவளால் சாப்பிட முடியல. தனியா நின்று கொண்டு  இருந்தாள். அவள்  கூட வேலை செய்யும் வயதான பாவாத்தா  பக்கத்தில் வந்தாள்.

ஏண்டி! “ உலகத்திலேயே  கொடுமைக்காரன்  துரியோதனை  கல்யாணம் கட்டிகிட்ட  மாதிரி  மாலையும் கழுத்துமா கண்ணைக் கசக்கிட்டு நின்னுட்டு இருக்க. நல்லா பேசரவனும் அழகானவனும் உத்தமனுக கிடையாது. ராமசாமி கோவக்காரன் தான். கொடுமைக்காரன்  இல்ல. தண்ணி, சிகரெட் ....  அப்படியின்னு  எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பொம்பளைகளை தப்பா ஏறெடுத்தும்  பார்ப்பதில்லை.    

மில்லில் வேலை செய்யும் முருகனுக்கு  உடம்பு முடியாதப்ப  பணமும் லீவும் கொடுத்து உதவி செஞ்சானே .  உனக்கு நெனப்பு இல்லையா? ரோஜா பூவை விட  அரளிப்பூ ஒசத்தினு  தெரிஞ்சுக்கோ “ என்றாள்.

“அடிக்கிற  கைதான்  அணைக்கும்

அணைக்கிற  கைதான்  அடிக்கும்

இனிக்கிற வாழ்வே கசக்கும்          

கசக்கிற  வாழ்வே  இனிக்கும்  “

என்ற பாட்டு கல்யாண மண்டபத்து மைக்கில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

This is entry #95 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - கற்பகம்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.