(Reading time: 8 - 15 minutes)

2017 போட்டி சிறுகதை 96 - சொல்லாத சொல்லெல்லாம் - வத்சலா

This is entry #96 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - வத்சலா

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

அவள் உமா!!! அவன் விஜய்!!!

வலித்தது அவளுக்கு!!!! ஆம் வலித்தது!!! அந்த வலி அருகில் இருக்கும், அருகில் அமர்ந்திருக்கும் விஜயையை பிடிக்கவில்லை என்பதால் இல்லை. அவனை மிகவும் பிடித்திருக்கிறது என்பதாலேயே!!!

இது காதல் திருமணம். இரண்டு குடும்பங்களையும் எதிர்த்துக்கொண்டு நடக்கும் காதல் திருமணம். இவர்கள் காதலை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை விட இரண்டு குடும்பங்களும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை..

ஒரு வேகத்தில் இருவரும் எடுத்துவிட்ட முடிவு இது. கோவிலில் நடக்கும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்தது எல்லாம் நண்பர்கள்.

அழுது கொண்டிருப்பார்களோ??? இரண்டு குடும்பத்து பெற்றவர்களும், பெரியவர்களும் அழுது கொண்டிருப்பார்களோ??? இந்த நினைவே உள்ளுக்குள் உறுத்திக்கொண்டிருக்க மனம் இந்த நிகழ்வுகளில் ஒன்றிப்போக மறுத்தது. அதனாலேயே கண்களில் கண்ணீர்.

பயமாக கூட இருந்தது அவளுக்கு. பெற்றவர்களின் கோபமும், வேதனையும் நம்மை நிம்மதியாக இருக்க விடுமா???

நண்பர்கள் புடைசூழ அவன் அவள் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்க பூ மழை பொழிய மகிழ்ச்சி ஆரவாரம் சூழ்ந்திருந்தது அங்கே.

அவள் சின்ன சிரிப்புடன் நிமிர அங்கே சற்றே தூரத்தில் நின்றிருந்தார் அவனது அம்மா சாவித்திரி!!! அவர் கண்கள் கலங்க, கன்னங்களை தொட்ட கண்ணீரை துடைத்துக்கொண்டார் அம்மா.

அவரது உணர்வுகள் உமாவுக்கு புரியாமல் இல்லை. எப்படி பட்ட அம்மாவாக இருந்தாலும் தனது மகனுக்கு இப்படி ஒரு திருமணம் நடப்பது வலிக்கவே செய்யும். அவள் எழ முயல்வதற்குள் சட்டென அங்கிருந்து விலகி சென்று விட்டிருந்தார் அவர்.

'உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்கம்மா யாரையும் திட்ட மாட்டாங்க. அப்படி எப்பவாவது மனசு வருத்தப்பட்டு யாரையாவது திட்டினாங்கன்னு வெச்சுக்கோ அது அப்படியே பலிச்சு போகும்..' முன்பு எப்போதோ விஜய் விளையாட்டுத்தனமாக சொன்னது இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது.

இரவின் தனிமையில் அவனிடம் கேட்டாள் உமா 'காலையிலே கோவிலுக்கு உங்க அம்மா வந்திருந்தாங்க பார்த்தீங்களா?

'ஆமாம்.. பார்த்தேன்....' குரலிலே எந்த பெரிய உணர்வும் இல்லாமல் சொன்னான் விஜய்.

'அழுதாங்க..'

'ம்.. அதுவும் தெரியும்..'

'எனக்கு பயமா இருக்கு விஜய்.. அவங்க ஏதாவது திட்டி சாபம் கொடுத்தா அது பலிக்கும்ன்னு நீங்க சொல்வீங்க இல்ல..'

'ஹேய்... லூசு மாதிரி பேசாதே.. என்னதான் கோபம் இருந்தாலும் எந்த பெத்தவங்களாவது பிள்ளைங்களுக்கு சாபம் கொடுப்பாங்களா? நாமதான் யாரும் வேண்டாம்னு தனியா வந்திட்டோம் இல்லையா. அவங்க நம்மை பத்தி நினைக்க கூட மாட்டாங்க. நீ மட்டும் ஏன் அவங்களை பத்தியே யோசிச்சிட்டு இருக்கே..ஃப்ரீயா விடு..' வெகு சுலபமாய் சொல்லிவிட்டான் அவன். ஆனால் அவளால்தான் இயலவில்லை.

தோ திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து இருக்கின்றன இப்போது!!!! இன்னமும் இரண்டு பெற்றவர்களும் நெருங்கி வரவில்லை. ஆனால் எந்த நிலையிலும் அவளை விட்டுக்கொடுத்ததில்லை விஜய்.

அவளை கையில் வைத்து என்ன? உயிருக்குள் வைத்து தாங்குகிறான் விஜய். எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது ஒரே ஒரு விஷயத்தை தவிர...

'அவர்களுக்கு குழந்தை வரம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை!!!'

அவளுடைய வறுப்புறுத்தலின் பெயரிலேயே வந்திருந்தான் மருத்துவமனைக்கு. அங்கே தான் அந்த குண்டை அவர்கள் இருவர் மீதும் தூக்கி போட்டார் டாக்டர். நொறுங்கி போனவளாக நடந்தாள் அவள். அவனது சமாதான வார்த்தைகள் அவள் காதில் ஏறியதாகவே தெரியவில்லை

அவர்கள் இருவரும் இருந்த மனநிலையில் அங்கே இருந்த அம்மா சாவித்ரியை பார்க்க தவறி இருந்தனர்.

'யாருக்கு என்ன? எதற்கு வந்திருக்கிறார்களாம் இவர்கள் இருவரும்? பல கேள்விகள் அம்மாவுக்குள்ளே எழுந்தது.

அவர்கள் சென்ற பிறகு நேரே மருத்துவரின் அறைக்குள் நுழைந்தார் அம்மா. அவர் அம்மாவுக்கு பழக்கமான மருத்துவர். அவர்கள் குடும்ப விவரங்களும் ஓரளவுக்கு தெரியும் மருத்துவருக்கு.

'என் பையனும், மருமகளும் எதுக்கு வந்திட்டு போனாங்க டாக்டர்?' டாக்டரிடம் கேட்டார் அம்மா.

'ரொம்ப நாளா குழந்தை இல்லை இல்லையாமா அவங்களுக்கு. அதனாலே சில டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. அதுக்கு ரிசல்ட் வந்திருக்கு..'

'ரிசல்டா? என்ன வந்திருக்கு? சீக்கிரம் குழந்தை பிறக்கும்தானே?' தவிப்புடன் கேட்டார் அம்மா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.