(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 97 - பெண்ணுக்கு பெண் எதிரியோ...??? - வசுமதி

This is entry #97 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - வசுமதி

 Women stand up

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.... என்று முடிந்த அந்த கதையை படித்து முடிக்கும் போதே நெஞ்சு பிசைய ஆரம்பித்தது...

"லூஸு ட்யூட்.. எந்த கதையை படிச்சிட்டு இப்படி கண்ணுல தண்ணி வெச்சுட்டு உக்கார்ந்து இருக்கற..?" ,என்று அங்கு வந்த அவளது தோழி நவீரா கேட்டாள்.

அப்பொழுது தான் தான் அழுது கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த வர்ணா,"இந்த கதைய படிச்சு பாரு ட்யூட்.. நீயும் அழுவ.. இந்த கதையை அவ்ளோ உணர்வு பூர்வமா எழுதி இருக்காங்க அந்த எழுத்தாளர்.."

"போ ட்யூட்.. நீயே உன் கதையை கட்டிக்கிட்டு அழு.. இப்போ நம்ம பீச்க்கு போறோம் சூட்டோட சூடா ரெண்டு மிளகாய் பஜ்ஜி, சுண்டல் சாப்படறோம் ... அப்படியே கையேந்தி பவன்ல முட்டை பரோட்டா சாப்பிட்டு விட்டு ரூம்க்கு ரிட்டர்ன் ஆகரோம்..."

"சுருக்கமா கொட்டிக்கிறதுக்கு வெளில போறோம்னு சொல்லு..."

"என் மைண்ட் வாயிசை கச்சிதமாக பிடித்துக் கொண்டீர்கள் என் மங்குனி அமைச்சரே.. இப்பொழுது நாம் கிளம்புவோமா..??"

"நீ முடிவு பண்ணிட்டா மத்தவா முடியும்",என்ற வர்ணாவை பார்த்து கண்ணடித்துவிட்டு சிரிக்க ஆரம்பித்தாள் நவீ..

மாலை… கதிரவனின் கதிர்கள் வானில் பல வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. கடல் அன்னையானவள் தனது புதல்வனை தன் மடியில் ஏந்தவும் புதல்வியை விண்ணில் பறக்கவிடவும் காத்துக் கொண்டிருந்தாள்..

அந்த வர்ணஜாலங்களை எல்லாம் ரசித்த வண்ணம் தனது  கால்களை அலைகளில் அலையவிட்டுக் கொண்டும் நவீயின் மொக்கைகளை காதில் வாங்கி கொண்டும் இருந்தாள் வர்ணா..

"நவீ.. இந்த கடல பார்த்தா உனக்கு என்ன தோணுது..??"

"கடல்கரைல மீனு இன்னைக்கு ப்ரெஷா இல்ல டி... அதுனால கடலுக்குள்ள போயி பிரெஷா மீன் பிடிச்சு சுட சுட சாப்பிடனும்னு தோணுது.."

இதை கேட்டு கடுப்படைந்த வர்ணா பத்திரகாளியாக மாறி அவளை முறைக்க ஆரம்பித்தாள்.

அதை கண்டு அவளிடம் சரணடைந்த நவீ,"பின்ன என்ன ட்யூட்.. நீ என்ன புது கதையா சொல்லப்போற..?? வழக்கம் போல  சூரியன், கடல், வர்ணஜாலம் etc etc தானே..?? "

"போ ட்யூட்.. உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே  தெரியல.."

"என்ன ட்யூட் நீ.. என்ன பார்த்து இப்படி கேட்டுட்ட..?? என்ன பொறுத்தவரைக்கும் வாழ்க்கை  அப்படீங்கறது வாழ இலைல இருக்கற ரசம் மாதிரி..எங்கிட்டு ஓடுதுனே தெரியாது.. ஆனா அது ஓடுற பக்கம் நம்ம கையும் போகணும்.. அப்படி போனா தான் நம்மால் அதை ருசிக்கவோ ரசிக்கவோ முடியும்.."

"ஹா ஹா ஹா.. போதும் சாமி உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.. இருட்டுது.. உன் முட்ட பரோட்டா தீர்ந்திட போகுது போலாம் வா.."

ரவு உணவிற்கு பிறகு இருவரும் தங்கள் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.. எதர்ச்சையாக திரும்பியபோது தான் வர்ணாவின் கண்களில் சிக்கினான் அவன்..

ஒரு நிமிடம் இவன் இங்கே என்று யோசித்த அவள் மனம் அவன் தள்ளாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தது.. 

"பரோட்டானா அது நம்ம விருது நகர் பண் பரோட்டா தான் ட்யூட்..செம்ம டேஸ்ட்டு.. யம்மி..",என்று தான் சாப்பிட்ட பரோட்டாவை பற்றி நடு ரோட்டில் பிரசங்கம் நடத்திக் கொண்டிருந்தவள் வர்ணாவின் கவனம் தன்னிடம் இல்லை என்பதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்டாள்..

"ட்யூட்.. என்ன ட்யூட் நீ.. நா பேசிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு எங்கேயோ பராக்கு பார்த்துட்டு இருக்க..??"

இன்னும் அவனை அந்நிலையில் கண்ட அதிர்ச்சி நீங்காததால் தன் கையை மட்டும் அவனை நோக்கி காட்டினாள்.

"ஏய்.. அது அண்ணன் தானே.. அவரு வருவாருன்னு ஏன் ட்யூட் சொல்லவே இல்ல..?? வா ட்யூட்.. வா வா அண்ணாக்கிட்ட போயி பேசிட்டு வரலாம்.",என்று வர்ணாவை இழுக்க ஆரம்பித்தாள் நவீ..

"முன்னாடியே அண்ணன் வராருனு சொல்லி இருந்தா மூணு பேரும் சேர்ந்து டின்னர் போயிருக்கலாம்ல??",என்றபடியே ரோட்டை கடக்க ஆரம்பித்தாள் நவீ..

நவீரவின் இழுப்பிற்கு வளைந்து கொடுத்த வர்ணாவும் அவளுடன் ரோட்டை கடக்க ஆரம்பித்தாள்..

அவனை நெருங்க நெருங்க வர்ணாவின் மனதில் பி பியும் கண்களில் தீப்பொறியும் பறக்க ஆரம்பித்தது.. காரணம் அவன் அவன் நண்பனிடம் கூறிய வார்த்தைகள்..

விடிய காலையில் அடித்த காலிங் பெல் சத்தத்தில் விழித்த பங்கஜம் யார் இந்த நேரத்தில் என புலம்பிய படியே வாசல் நோக்கி விரைந்தார். கதவை திறந்தவர் மகளை அந்த நேரத்திலும் அந்த கோலத்திலும் எதிர்பாராதவர் சற்று திகைத்து தான் போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.