(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 98 - ஏக்கம் - சித்ரா.வெ.

This is entry #98 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சித்ரா.வெ.

school Days

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலில் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த... நம்ம ராமாயி..!!

ஏனோ அப்படி சொல்ல தோன்றியது அவளுக்கு... ஏனென்றால் இப்போது இங்கு வந்திருப்பது பழைய ராமாயி அல்ல.. இப்போது திரைப்படத் துறையில் ஓரளவுக்கு பிரபலாமாகியிருக்கும் நகைச்சுவை நடிகை ரம்யா.. அவளை தெரியாதவர்கள் இங்கு இருக்க முடியாது... அவள் படித்த காலங்களில் இருந்த மாணவர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் நகைச்சுவை நடிகையான ரம்யாவை தெரியும்... ஆனால் ராமாயியை எத்தனை பேருக்கு தெரியும்... அதனால் தான் அவளின் பள்ளிக்கால தோழி அந்த பேரை கூறி தங்களின் பள்ளி நாட்களை நினைவுக் கூர்ந்தாள்...

அதற்குள் அருகில் இருந்தவனோ... "ஏய் கோமளா... இப்போ எதுக்கு அந்த பேரை சொல்ற... இங்க இருக்கற பழைய ஸ்டூடண்ட்ஸ்ல யாராவது பத்திரிக்கைக்காரங்களா இருந்தா... இதெல்லாம் பத்திரிக்கையில போட்ற போறாங்க.." என்றான்..

"ஹே... ஆமாம் சரவணா.. எனக்கு அது தோனவேயில்லை..." என்றாள்...

அதற்குள் தன் நண்பர்கள் வட்டாரத்தை தேடிய ரம்யாவோ... அவர்களை கண்டதும் அருகில் வந்தாள்...

"ஹே ரா.. சாரி, ரம்யா எப்படி இருக்க.." என்றாள் கோமளா..

"நான் நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க..." என்று அவளிடம் பேச ஆரம்பித்தவள், தன் நண்பர்கள் எல்லோரையும் விசாரித்தாள்..

இப்போது ஒரு நகைச்சுவை நடிகையான அவள் இந்த விழாவிற்கு வருவாளா..?? என்று நினைத்தவர்களுக்கெல்லாம், அவள் யாரையும் மறக்காமல் இப்போதும் எல்லோரிடமும் சகஜமாக பேசியதில் ஆச்சர்யம்... அவள் வகுப்பு நண்பர்கள் என்று இல்லாமல், எல்லோருமே அவளுடன் உரையாடினர்...

அந்த பள்ளி மேலாளரும் அவளிடம் வந்து பேசினார்...

"உனக்கு போன் பண்ணப்போ நீ வெளியூர்க்கு ஷூட்டிங் போனதா சொன்னாங்கம்மா... நீ வருவன்னு நான் எதிர்பார்க்கல... இல்லன்னா உன்னையும் சீப் கெஸ்ட் லிஸ்ட்ல சேர்த்திருப்பேன்... இப்பக் கூட என்னம்மா.. உனக்கும் ஸ்டேஜ்ல ஒரு சீட் அரேஞ் பண்றேன் வா.." என்றார்.

"அய்யோ பரவாயில்ல சார்... நான் என் ஃப்ரண்ட்ஸோடவே இருக்கேன்..." என்றாள்...

சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து எல்லோரும் வந்து படிக்கும், ஒரு பெரிய பள்ளி அது... அந்த பள்ளி தொடங்கி 50 வருடம் நிறைவுப் பெறுவதால் பழைய மாணவர்கள் அனைவரையும், கூப்பிட்டு பெரிய விழாவாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு தான் ரம்யா வந்திருந்தாள்... சில மணி நேரங்கள் தன் நண்பர்களோடு செலவிட்டவள், பின் கிளம்பினாள்... ஆனால் எவ்வளவு உற்சாகத்தோடு கிளம்பினாளோ.. அதெல்லாம் அங்கு சென்றதும் காணாமல் போயிருந்தது...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு... "அம்மா நான் அழகா இருக்கேனாம்மா.." சிறு வயதில் ராமாயி தன் அன்னையிடம் கேட்கும் போது... "உனக்கென்னடா.. நீ ரொம்ப அழகா இருக்க... " என்று தான் கூறுவார் அவளின் தாயார்.

"அம்மா நான் கருப்பா இருக்கேனே.." எனும் போது, "நீ கருப்பா இருந்தாலும் கலையா இருக்க.." என்பார். அவளின் தந்தையோ... "நீ எங்க தேவதை டா.." என்பார்.

இப்படி அவள் தோற்றத்தையோ... இல்லை அழகையோ பற்றி நினைத்து கவலைக் கொள்ளும் அளவுக்குஅவளை அவளின் பெற்றோர் விட்டதில்லை... அதேபோல் அவளின் புறத் தோற்றத்தைப் பற்றி கேளி செய்து அவளின் மனதை புண்படுத்தாத இன்னொரு இடம் என்று சொன்னால் அது அவளின் பள்ளி தான்...

சிறு வயதில் இருந்தே அந்த பள்ளியில் அவள் படிக்கிறாள்... கொஞ்சம் நீட்டு முகம், அட்டைக் கருப்பு இல்லையென்றாலும் கருப்பு நிறம் தான்.. இருந்தும் கலையான முகம்... ஆனால் அந்த நீள மூக்கு அவளின் அழகை கொஞ்சம் குறைவாக தான் காட்டும்... இதில் வழிய வழிய எண்ணெய் தடவி பின்னல் போட்டு அனுப்பிவிடுவார் அவளின் தாயார்...

இருந்தும் சிறுவயதிலிருந்தே அவளுக்குள் இருக்கும் அந்த நகைச்சுவை உணர்வும், அதன் மூலமாக வெளிப்படும் பேச்சாலும் அனைவரின் மனதையும் கவர்ந்து விடுவாள்... அதற்காகவே அவளுக்கு ஒரு நட்பு கூட்டம் இருக்கும்...அதன் மூலமாகவே ஆசிரியர்கள், மற்ற வகுப்பு மாணவர்கள் என்று எல்லோருக்கும் அவள் பரிச்சியமானவள்...

பருவ வயதை அடைந்த போது கூட... எத்தனையோ பேர் இவளிடம் காதல் கடிதம் கொடுத்து மற்றப் பெண்களிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள்... அப்போது கூட நம்மை யாரும் அப்படி நினைத்துப் பார்த்ததில்லையே என்று அவள் வருத்தப்பட்டதில்லை...

அவளுக்கு இணையாண வயதுடைய மாணவர்கள் எல்லாம் அவளுடைய நண்பர்கள்... அவர்களை வாடா, போடா என்று அழைப்பாள்... சீனியர்ஸ் எல்லோரையும் அண்ணா என்று அழைத்து காரியத்தை சாதித்துக் கொள்வாள்... அவளை விட சிறியவர்கள் எல்லாம் அக்கா, அக்கா என்று அவளை சுற்றி வருவார்கள்... இதில் யாரும் அவளை கேளி செய்ய வாய்ப்பே இல்லை... யாரைப் பார்த்தும் இவள் சலனப்பட்டதும் இல்லை...

மாணவர்களே இப்படியென்றால், மாணவிகளை பற்றி சொல்லவே தேவையில்லை... இப்படி எல்லோர் மனதிலும் ஒரு இனிமையான இடத்தை பிடித்தவள் தான் ராமாயி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.