(Reading time: 13 - 25 minutes)

"ன்னடி இந்த கோலம்",என்று பதைபதைத்த படியே அவளிடம் விரைந்தார்.

"அத்தை.. அந்த கதையை நான் சொல்றேன்...", அப்பொழுது தான் வர்ணாவின் அருகில் நின்று கொண்டிருந்த நவீராவை கண்டவர் அலறிவிட்டார். 

இருக்காதா பின்ன மூஞ்சி முழுவதும் சிவப்பும் கருப்புமாக சாயம் அப்பியிருக்க நெற்றியில் இருக்கும் சாயம் அவள் பற்களிலும் சிறிது படிந்திருக்க ட்விலைட் படத்தில் வரும் பெல்லா போல் இருந்தவர்கள் ஈவில் டெட் படத்தில் வரும் பேய் போல் இருந்தால் அலறாமல் என்ன செய்வார்.

நீலகிரி எக்ஸ்பிரஸில் காலை ஐந்து மணிக்கே கோவை வந்தடைந்த வர்ணாவும் நவீயும் ஒரு ஆட்டோ பிடித்து தங்கள் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

"ட்யூட்.. எனக்கு பசிக்குது.. நம்ம போஸ் அண்ணன் கடைல டீயை குடிச்சிட்டு போலாமா..??",பாவம் போல் தன் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள் நவீ..

ச்சே எனக்கிருந்த டென்ஷன்ல நவீ மறந்துட்டேனே என்று நினைத்தவள் ஆட்டோ டிரைவரிடம்," ****** கடைல நிறுத்துங்க அண்ணா",என்றாள்.

ஆட்டோ நின்றதோ இல்லையோ பசி தாங்காமல் கடை நோக்கி ஓடியவள் எதிரில் இருந்த ஏணியையும் அதில் தொங்கிக்கொண்டிருந்த பெயிண்ட் டப்பாவையும் கவனிக்க தவறிவிட்டாள்..

விளைவு உடல் முழுவதிலும் பெயிண்ட் அபிஷேகம் கூடவே அவளை தூக்க வந்த வர்ணாவின் மீதும் வர்ணஜாலங்கள்.

வாய் வலிக்க தங்களது நிலைக்கான காரணத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி டயர்டான நவீ இடியாப்பத்தை பார்சல் செய்துகொண்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்...

அவளது வேலையை முடிப்பதற்குள் அவர்களை பற்றி ஒரு சிறு இன்ட்ரோ..

ர்ணா.. பத்மநாபன் மற்றும் பங்கஜத்தின் ஒரே பெண்.. அஷ்வினின் ஒரே தங்கை.. அஷ்வினின் மனைவி சாவித்யா.. இருவரும் இப்பொழுது பெங்களூரில் இருக்கிறார்கள்.

பத்மநாபனின் தங்கை சுபத்ராவின் பெண் தான் நம்ம வாலு நவீ.. நவீயின் தந்தை தனஜெயன்..

வந்ததிலிருந்து ஏதோ யோசித்து கொண்டிருந்த மகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தார் பத்து.. ஏதோ விஷயம் என்றுணர்ந்தவர் எதுவாக இருந்தாலும் அவளே தொடங்கட்டும் என்று காத்திருந்தார்.

"அப்பா அம்மா இங்க வாங்களேன். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.."

"சொல்லுமா",என்று வந்து சேர்ந்தனர் இருவரும்.

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாமா..",என்றாள் வர்ணா தீர்க்கமாக.

"ஏண்டி.. என்னடி பிரச்சனை உனக்கு? ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற..?? நிச்சயத்துக்கு முன்னாடி கல்யாணம் நின்னுச்சுனா ஊர்ல எத்தனை பேர் எத்தனை பேசுவார்களோ?? ஏன் உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலையா..?? இத நீ முன்னாடியே சொல்லியிருக்கனும்ல..?? இப்போ வந்து சொல்ற..",என்று பட படத்தார்  பங்கஜம்.

"பங்கஜம் கொஞ்சம் பொறுமையா இரு.. அவ இன்னும் என்ன நடந்துச்சுனு சொல்லவே இல்லை",என்றவர் வர்ணாவை நோக்கி,"என்னடா நடந்துச்சு..?? ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற..??"

வர்ணா திருமணம் வேண்டாம் என்று சொன்னவுடன் அதிர்ந்து தான் போயினர் இருவரும்.. எப்பொழுதும் பொறுமையாய் எல்லா பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பத்துவிற்கு தன் மகள் காரணமில்லாமல் எதையும் தீர்மானமாக கூறமாட்டாள் என்பதை உறுதியாக நம்பியவர்  பங்கஜத்தை அதட்டிவிட்டு பொறுமையாக அவளிடம் என்ன நடந்தது என கேட்க விழைந்தார்.

வர்ணாவும் நேற்று இரவு நடந்ததை அவர்களிடம் கூற ஆரம்பித்தாள்.

"பொண்ணு பேரு வர்ணாடா... ",என்று அவன் தொடங்கிய போதே ரோட்டை கடந்த வர்ணாவும் நவீயும் அடுத்து அவன் பேசியதை கேட்டு சிலையாக சமைந்தனர்..

".............மச்சி.. அந்த பொண்ணு இங்கிருக்கிற ஒரு கம்பனீல தான் வேல பாக்கறா.. கல்யாணத்துக்கு அப்புறம் மொதோ அவ வேலைக்கு போறத கட் பண்ணனும். அப்போ தான் அவ என்ன டிப்பெண்ட் பண்ணி இருப்பா.. அவ வீட்டு ஆளுங்க மேல ரொம்ப பாசமாமா டா.. அதனால நான் குடிக்கறத அவ வீட்டுல சொல்லவும் மாட்டா அதையே சாக்கா வைத்து அவ பஞ்சாயத்தை இழுத்து விட மாட்டான்னு நினைக்கிறேன்.."

"......."

"இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறாயா.. இதெல்லாம் கலக்ட் பண்ண தான் என் தங்கச்சியிம் எங்க அம்மாவும் இருக்காங்களே.. பொண்ண பத்தி தெரிஞ்சிக்கோனு எங்க அம்மாவும் தங்கச்சியும் டீடெயில்ஸ் கொடுத்தாங்க", என்று உளறிக் கொண்டிருந்தான்.

இதை எல்லாம் மறைவிலிருந்து கேட்ட நவீ அவனை அடிக்க கல்லை பொறுக்க ஆரம்பித்தாள்...

அதனை தடுத்த வர்ணா,"வா ஹாஸ்டலுக்கு போகலாம்", என்றாள்.

"அவன் பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு சும்மா வர சொல்றியா நீ..??",என கோபமாக கேட்டாள் அவள்.

"இப்போ அவன் இருக்கற நிலைமையில் நம்ம என்ன பேசுனாலும் அவன் மண்டையில ஏறாது.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.