(Reading time: 13 - 25 minutes)

"து உன் வாழ்க்கை டியூட்..இத அப்படியே விட்டுட சொல்றியா..??"

"விட சொல்லல.. இப்போதைக்கு வேண்டாம்னு சொல்றேன்.. இன்னைக்கு நைட் ஊருக்கு போயி பேசிக்கலாம்"

அவள் பேசியதை கேட்ட நவீக்கு ஆச்சர்யம் தான்.. வர்ணாவின் நிலையில் அவள் இருந்திருந்தால் இந்நேரம் அவனை அடித்தே கொன்றிருப்பாள்..

நேற்று நடந்தவைகளை எல்லாம் தன் பெற்றோர்களிடம் கூறி முடித்த வர்ணா,"அடுத்து என்னனு நீங்க தான் சொல்லணும்",என்றாள்.

"ஐயோ.. என்னங்க இவ.. என்னென்னமோ சொல்லறா..??எனக்கு ரொம்ப பயமா இருக்கு..",என்றார்.

"பதறாத பங்கஜம்..இதெல்லாம் இப்போவாவது தெரிஞ்சிதுனு சந்தாஷப்படு மா.. இரு நான் அஷ்வின்கிட்ட பேசி இங்க வர சொல்றேன்..அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணலாம்..",என்று முடித்தார்.

ன்று முழுவதும் ஒவ்வொருவரும் ஒரு ஒரு மனநிலையில் இருந்தனர்.. பத்துவோ இதை தன் மகன் எப்படி எடுத்துக் கொள்வான் என்ற யோசனையிலும் பங்கஜமோ இனி தன் மகளை யார் யார் என்ன பேசுவார்களோ என்ற கவலையில் இருந்தார்.

இவ்விருவரும் இப்படி இருக்க வர்ணாவோ தன் பாரங்களை தன் பெற்ற்வர்கள் மீது ஏற்றி விட்டு நிம்மதியாக உறங்கி போனாள்..

விடியலும் வந்தது.. தந்தை கூறிய செய்தியால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை சுதாரித்துக்கொண்டு தன் மனைவி சாவித்யாவுடன் விடியலில் வீடு வந்து சேர்ந்தான். அவர்கள் வந்தடைந்த நேரம் சாவித்யாவின் பெற்றோரும் வந்தடைந்தனர்.

க்களே வெயிட்..இப்போ எதுக்கு இவங்கெல்லாம் வந்திருக்காங்கனு பார்க்கறீங்களா..??  நைட்ல நம்ம வர்ணாவை பற்றி பேசிய ஆசாமியின் பெயர் சுரேஷ். சாவித்யாவின் அண்ணன்.. ராஜசேகர் மற்றும் சத்யவதியின் மகன்..

சுரேஷை பொறுத்தவரை தன்னை யாரும் கட்டுப்படுத்த கூடாது.. தான் சுதந்திரமாக இருக்க வேண்டும்.. அதனால் அதற்கு தகுந்தாற்போல் பெண்ணை பார்க்க சொன்னான்.. இவன் போடும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் பெண்ணாய் வர்ணா தோன்றியதால் அவளை தேர்ந்தெடுத்தார் அவன் அண்ணை சத்யவதி.

இது போதும் நினைக்கறேன்.. இப்போ கதைக்கு போலாம் வாங்க..

"வாங்க சம்பந்தி..", என்று வந்தவர்களை வரவேற்றனர் பத்துவும் பங்கஜமும் தங்களது உணர்வை மறைத்துக்கொண்டு.

பொதுப்படையாக தங்களது நலன்களை விசாரித்து கொண்டனர் பெரியவர்கள்..

"அண்ணா.. இன்னைக்கு ராத்திரி சுரேஷ் வந்திருவான்.. நம்ம நேரத்திலேயே மண்டபத்துக்கு போயிரலாம்ல..??", என்று கேட்டார் சத்யவதி.

இவர் கேட்டு முடித்தவுடன் அங்கே மயான அமைதி நிலவியது..அதை உடைத்தெறிந்த அஷ்வின்,"அத்தை.. இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்",என்றான்.

"எ..என்..என்ன மாப்பிள்ளை என்ன சொல்ரீங்க..??",என்று அதிர்ச்சி ஆனார் சத்யவதி.

"என்ன எதுன்னு கேட்காதீங்க சம்பந்தி.. என் பொண்ணுக்கும் உங்க பையனுக்கும் ஒத்து வராதுங்க..",என்றார் பத்து.

"இதை முன்னாடியே யோசிச்சிருக்க வேண்டியது தானே அண்ணா.. இப்போ சொல்ரீங்க..",என்றார் பொறுமை இழந்த சத்யவதி.

பெண்ணெடுத்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என நினைத்த பத்து காரணத்தை மறைக்க நினைத்தார்..சத்யவதி காரணம் என்னவென்று கேட்டு வற்புறுத்தவே அன்று நடந்தவைகளை கூறினார்.

அதை கேட்டு ஆத்திரமடைந்த சத்யவதி,"அண்ணா... என் பையன் இப்படியெல்லாம் பண்ண மாட்டான்.. நீங்க வேணும்னே அவன் மேல் பழி போடறீங்க",என்றார்.

"நான் எதுக்குமா தம்பி மேல பழிபோடனும்.. அவரு மேல எனக்கு என்னமா கோபம்.." ,பொறுமையாகவே கூறினார் அவர்.

"உங்க பொண்ணு மேல தான் ஏதோ தப்பிருக்கு.. அத மறைக்க தான் நீங்க என் பையன் மேல பழி போடறீங்க.. சரி என் பையன் தப்பானவங்கறதுக்கு என்ன ஆதாரம்",என்றார்.

அப்பொழுது அங்கு தோன்றிய நவீ ,"ஆதாரம் தானே சித்தி கேட்டிங்க.. இதோ இங்க பாருங்க ",என்றாள்.

தருணங்களை படம்பிடிப்பது நவீயின் பழக்கங்களுள் ஒன்று..அவ்வாறு தான் அன்று நடந்தவைகளை தனது அலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தவள் அதனை அவர்களிடம் காட்டினாள்..

அதனை பார்த்தும் சத்யவதி,"என்னதிது பிள்ளைகளை நடு ராத்திரில ஊர் மேய விட்டுட்டு.. எங்க வீட்டு புள்ளைங்க எல்லாம் இப்படி ஊர் சுத்த மாட்டாங்க.. கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாம் இப்படி இருக்க கூடாது.. சொல்லி வைங்க..",என்றார் சத்யவதி காட்டமாக பேச்சை மாற்றும் விதமாக..

அது வரை பொறுமையாக இருந்த பங்கஜம் தன் பிள்ளையின் நடத்தையை விமர்சனம் செய்ததால்,"பார்த்து பேசுங்க சம்பந்தி.. எங்ககிட்ட சொல்லிட்டு தான் வெளில போனாங்க.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.