(Reading time: 8 - 15 minutes)

'கொஞ்சம் கஷ்டம்தாமா. ரெண்டு ட்யூப்பும் பிளாக் ஆகி இருக்கு உங்க மருமகளுக்கு.. இது மாதிரி இருக்கறவங்களுக்கு நார்மலா பிறக்குறது ரொம்ப கஷ்டம். பார்க்கலாம். என் அனுபவத்திலே இது மாதிரி  ஒண்ணு ரெண்டு கேஸ்லே  அதிசயமா தன்னாலே பிறக்கவும் செஞ்சிருக்கு... கடவுளை  நம்புவோம்...' முடித்துவிட்டார் டாக்டர்.

கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது அம்மாவின் கண்களில்.

ரண்டு நாட்கள் கடந்திருக்க அவர்கள் திருமணம் நடந்த அதே கோவிலில் அமர்ந்திருந்தனர் விஜய்யும் உமாவும்.

'நாம நம்ம பெத்தவங்க மனசை ரொம்ப வேதனை பட வெச்சிருக்கோம் விஜய். அதான் இப்படி எல்லாம் நடக்குது.. ஒரு தடவை அவங்களை போய் பார்த்திட்டு வரலாம்னு சொன்னாலும் நீங்க கேட்க மாட்டேங்கறீங்க..' புலம்பிக்கொண்டிருந்தாள் உமா.

'எதுக்கு??? அவங்ககிட்டே போய் இன்னமும் ரெண்டு திட்டு வாங்கி தலையிலே போட்டுட்டு வரவா??? சும்மா இரு...' சொல்லிக்கொண்டே அவன் திரும்ப கோவில் பிரகாரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தார் சாவித்திரி.

'விஜய் உங்க அம்மா..' கூவினாள் உமா.

'தெரியுது. உட்காரு.. வேணும்னா அவங்க வந்து பேசட்டும்..'

'இல்ல நான் போய் பேசப்போறேன்..' அவன் பதிலுக்கு நில்லாமல் அம்மாவை நோக்கி ஓடினாள் உமா. அவன் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அவளை பார்த்ததும் நின்றே விட்டார் அம்மா.

'அத்தை... எப்படி இருக்கீங்க..' புன்னகையுடன் கேட்டாள் உமா. அவளை பார்த்தவுடன் அந்த டாக்டரின் வார்த்தைகள்தான் அம்மாவின் நினைவில் வந்தன.

'இறைவா.. என் குழந்தைகளுக்கு ஒரு குழந்தையை கொடுத்துவிடேன்..' வேண்டியது .அம்மாவின் மனம்.

ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அம்மா. பதில் எதுவும் சொல்லவில்லை அவர்.

'அத்தை எப்படி இருக்கீங்க..' என்றாள் மறுபடியுமாக.

'என்ன அத்தை... சொத்தை.... உன்னை பார்த்தா கோவமா வருது எனக்கு.. இது கோவில் இங்கே வெச்சு.. எதாவது திட்டிட போறேன்.. அப்புறம் அது பலிச்சு போகும்..

'பரவாயில்லை திட்டுங்க.. பலிச்சா பலிச்சிட்டு போகட்டும்.. அப்படியாவது உங்க மனசு ஆறி போனா சரிதான்..'

'ஆறாது....என் மனசு எப்பவும் ஆறாது...என் பையனை கூட்டிட்டு போயிட்டே இல்ல நீ  'என்றார் அவர் அவள் முகம் பார்த்துக்கொண்டே 'பிறப்பான். உனக்கும் ஒரு பையன் பிறந்து வளர்ந்து பெரியவனாகி லவ் மேரேஜ் பண்ணிப்பான் அப்போ என் மனசு புரியும் உனக்கு..' கோபம் பொங்கும் குரலில் சொல்லிவிட்டு அவர் நடக்க கண்களில் நீர் சேர்ந்துக்கொள்ள நின்றிருந்தாள் உமா.

சில அடிகள் நடந்த பிறகு அவர் சொன்ன வார்த்தைகளை ஒரு முறை அசைப்போட்டு பார்ப்பதைப்போல் நின்றார் அம்மா. ஒரு தீர்கமான மூச்சுடன் ஒரு முறை உமாவை பார்த்துவிட்டு திரும்பி நடந்தார் அவர்.

'சொன்னேன் இல்ல..' என்றான் அவன் 'நீயா போய் வாங்கி கட்டிக்கிட்டு வந்து அழுதா என்ன அர்த்தம். எப்பவும் உனக்கு நான்தான். எனக்கு நீதான். அதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ..'

நான்கு ஐந்து மாதங்கள் கடந்திருந்த நிலை...

சற்றே மேடிட்ட வயிறுடன் தனது வீட்டில் அமர்ந்து டி.வி.யை திருப்பிக்கொண்டிருந்தாள் உமா.

'டாக்டரே சற்று வியந்துதான் போனார். எப்படி இதுன்னு புரியவே இல்லை. யூ ஆர் ப்ரெக்னன்ட் உமா. நிஜமாவே காட் இஸ் கிரேட்...' கடந்த நான்கு மாதங்களாக சந்தோஷ ஊஞ்சலில் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றனர் கணவனும் மனைவியும்.

ஏதேதோ எண்ண ஓட்டங்களுடன் அமர்ந்திருந்தவளின் நினைவில் திடீரென அந்த வார்த்தைகள் வந்தன!!! அவனது அம்மா சாவித்திரியின் வார்த்தைகள்!!!

'பிறப்பான். உனக்கும் ஒரு பையன் பிறந்து லவ் மேரேஜ் பண்ணிப்பான் அப்போ புரியும் உனக்கு..' திடுக்கென அவளுக்குள்ளே ஒரு சந்தோஷ பிரவாகம் இது என்ன மாயம்??? அவர் கொடுத்த சாபம் பலித்து விட்டதா என்ன??? அதனால்தான் எனக்கு ஒரு மகன் பிறக்க போகிறானோ???

இது வரமா??? சாபமா??? வரமான சாபமா??? அன்று இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு சென்றாரே அத்தை!!!! இது பலிக்கட்டும் என்றுதான் அப்படி சொன்னாரோ???

தினமும் அவர் கோவிலுக்கு வரும் நேரம் தெரியும் அவளுக்கு. சரியாக அந்த நேரத்தில் கோவிலில் நின்றிருந்தாள் உமா. சாவித்திரி வர மெல்ல நடந்து அவர் முன்னால் சென்று நின்றாள் அவள்.

அவளையும் அவளது மேடிட்ட வயிற்றையும் பார்த்த அம்மாவின் முகத்தில் புன்னகை ஓட்டம். இவள் கண்களில் நேரேற்றம்.

'தேங்க்ஸ் அத்தை...' என்றாள் மெதுவாக 'உங்க சாபம் பலிச்சு போச்சு..' மருமகளின் கண்ணீரை துடைத்து அவளை தனது தோளில் சாய்த்துக்கொண்டார் அத்தை. 'இறைவா உனக்கு பல கோடி நன்றிகள்...'

'என் சாபம் பலிச்சு போச்சா. அச்சச்சோ... அப்போ உன் பையனும் லவ் மேரேஜ் தானே பண்ணிப்பான்..' அத்தை சிரிக்க

'பண்ணிகிட்டா பண்ணிட்டு போகட்டும்..' என்றாள் உமா அத்தையின் சிரிப்பில் இணைந்துக்கொண்டபடியே!!!!

 

This is entry #96 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - வத்சலா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.