(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 103 -  அவசர முடிவினால் முறிந்த நட்பு - அனிதா தேவராஜ்

This is entry #103 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அனிதா தேவராஜ்

Slap

இது என்னுடைய முதல் கதை. என்னுடைய கதை ஆர்வத்துக்கு வழியமைத்து கொடுத்த chillzee குடும்பத்துக்கு என்னுடைய நன்றி!!!! இந்த கதையில் ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னியுங்கள்.

ளார்!!! என்ற சத்தம் அந்த மருத்துவமனையிலுள்ள பூங்கா எங்கும் எதிரொலித்தது. அங்கு இருந்த சிலர் அதிர்ச்சியுடனும் சிலர் சுவாரஸ்யமாகவும் பார்த்தனர். ஆனால் அதை எதையும் உணரும் நிலையில் இல்லை அங்கு இருந்த இருவர்.

ஒன்று அடிவாங்கிய கௌதம் இன்னொருவர் கௌதமை அடித்த யாமினி.

உன்னை எல்லாம் என் நண்பன் என்று சொல்லவே அசிங்கமா இருக்கு.

இன்னும் என்ன எல்லாம் திட்டு வாங்கி இருப்பானோ கௌதம். அதற்குள் இவர்களுடைய இன்னொரு தோழி ரேகா அவர்களை நோக்கி ஓடிவந்தாள்.

யாம்ஸ்….. உமா கண் முழிச்சுட்டா…..ரொம்ப அழுதுட்டு இருக்கா….. சீக்கிரம் வா என்று கௌதமை பார்த்து முறைத்துகொ ண்டே சொன்னாள். அவர்கள் மூவரும் உமா இருந்த அறை நோக்கி விரைந்தார்கள்.

யாமினியும் ரேகாவும் உள்ளே விரைந்து சென்று உமாவை பார்த்தார்கள். உமா இவர்களை பார்த்து கொஞ்சம் நிம்மதிக்கொண்டாள். அந்த நிம்மதி கௌதமயை காணும் வரையில் தான்.

என்னை விட்டு விடு என்று கதற ஆரம்பித்துவிட்டாள்.

கௌதம் தயவு செய்து சென்றுவிடு என்றாள் யாமினி.

கௌதம் தன் நிலையை எண்ணி வெளியே சென்றவுடன் மருத்துவர் (யாமினியின் பள்ளி தோழி) அனு அறைக்குள் நுழைத்தாள்.

உமாவுக்கு ஊசி போட்டு விட்டு யாமினியை நோக்கி வந்தாள்.

அனு… இப்போ உமாவுக்கு எப்படி இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவாயில்லை யாமினி. அதிக காய்ச்சல் மற்றும் கொஞ்சம் அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் பலவீனமா இருக்கா…. அவளுக்கு தேவை இப்பொழுது நல்ல உறக்கம். எல்லாம் சரியாயிடும்.

அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்துவிட்டாள். அவளுக்கு இப்போது தனிமை வேண்டும் என்று தோன்றியது ரேகாவுக்கு.

யாம்ஸ்…. நான் வீடுவரை சென்று வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டாள் ரேகா.

யாமினி அப்படியே கண்மூடினாள்.

யாமினி, கௌதம் இருவரும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள். ரேகாவும், உமாவும் அவளுக்கு கல்லூரி தோழிகள். இவர்கள் நால்வரும் ஒன்றாக சென்னையில் வேலை செய்கிறார்கள். பெண்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அவர்கள் நால்வரும் பொது இடத்தில் சந்தித்துக்கொள்வார்கள். தங்கள் வேலை அனுபவம் மற்றும் குடும்பம் பற்றி பகிர்ந்து, நன்றாக உண்டுவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றுவிடுவார்கள்.

இவர்களில் உமா அதிகம் பேச மாட்டாள், பயந்த சுபாவம் கொண்டவள். அவர்கள் இருவரையும்விட இவள் கொஞ்சம் வேறுபட்டுஉள்ளதால் கௌதம் அவளிடம் மயக்கம் கொண்டான். அதை காதல் என்று நம்பினான். இதை யாமினியிடம் கூற தவறிவிட்டான்.

இதற்கிடையில் உமாவிற்கு அவள் தந்தை ஒரு வரனை பார்த்து முடித்துவிட்டார். உமாவிற்கு அவள் தந்தை தான் உலகம். அவளுடைய தாய் இறந்த பிறகு தாயுமானவராக இருந்து அவளை ஆளாக்கினார். உமாவிற்கும் மாப்பிளையை பிடித்துவிட்டது. அவளுடைய நண்பர்கள் மிகவும் மகிழுச்சி அடைந்தனர்…… கௌதமை தவிர.

அன்று கௌதம் மிகவும் சோகமாக இருந்தான். அவன் பகுதியில் கூட வேலை செய்யும் கார்த்தி அவன் சோகத்தை கண்டு புன்முறுவல் ஒன்றை தவழவிட்டான். ஏனென்றால் குறுகிய காலத்தில் அவனுடைய பதிவியை கௌதம் பிடித்துவிட்டான். நண்பன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு கௌதமை நெருங்கினான்.

என்ன நண்பா ஒரே கவலையா இருக்க….. என்ன பிரச்சனை?

ஒன்னும்மில்லை கார்த்தி.

சும்மா சொல்லுடா….. அப்போதான் உன் கவலையை போக்க ஏதாவது வழி கிடைக்கும்.

கௌதமிற்க்கும் யார் கிட்டயாவது சொன்னா நல்லாயிருக்கும் என்று தவித்து கொண்டிருந்தான்.

கார்த்தி நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் டா என்று தொடங்கி அவன் காதலை கூறி முடிதான்.

எனக்கு இந்த காதலைப்பற்றி யாமினியிடம் சொல்வதற்கு தயக்கமாகவும் இருக்கு சொல்லாமலும் இருக்க முடியல…… இதுல உமாவிடம் எப்படி என் காதலை சொல்ல போகிறேன் என்றே புரியவில்லை.

யாமினி, கௌதம் நட்பை நன்கு அறிந்தவன் கார்த்தி. தான் சொல்ல போகும் யோசனையில் அவனுடைய நட்பும் காதலும் அழியவேண்டும் என்று ஆசைகொண்டான். (ஒரு கல்லில் இரண்டு மாங்காய்).  

எனக்கு ஒரு யோசனை கௌதம். உன் காதலை முதலில் உமாவிடம் சொல். ஏனென்றால் அவள் ரொம்ப அமைதியானவள், அப்புறம் பயந்த சுபாவம் கொண்டவள். ஒருவேளை உன் காதலை உமா மறுத்துவிட்டாள் அவளை மனைவியாக்கி கொள். அதற்கு அப்புறம் அவள் வேறுவழியில்லாமல் உன்னை கணவனாக ஏற்று கொள்வாள். உமாவே உன்னை கணவனாக ஏற்று கொண்டபிறகு யாமினியும் உன்னை மன்னித்துவிடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.