(Reading time: 9 - 18 minutes)

னால் அதுவே உன் காதலை முதலில் யாமினிடம் சொன்னால் அவள் உன் மனதை தான் மாற்ற முயல்வாள். உமாவுக்கு ஏற்கெனவே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றும் அவள் மனதில் நீ இல்லை என்றும் ஒரு நண்பனாக தான் அவள் உன்னிடம் பழகினால் எனவே உன்னை மனதை மாற்றி கொள் என்று அறிவுறுத்துவாள்.

கௌதமிற்க்கு இந்த யோசனை முதலில் பிடிக்காவிட்டாலும் அவனுக்கும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். எப்படியும் உமா மனைவியான பிறகு இருவரிடம் மன்னிப்பு வேண்டிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஒன்றை மறந்துபோனான். இந்த நிகழ்வால் அவன் காதலும் நட்பும் முற்று பெறப்போகிறது என்று.

ன்று ஞாயிறுக்கிழமை. உமாவிற்கு காய்ச்சல் அதனால் யாமினியும் ரேகாவும் கடைவீதிக்கு சென்றனர்.

டிரிங்! டிரிங்!

சொல்லு கௌதம். என்ன ஞாயிறுக்கிழமை இவ்வளவு சீக்கிரம் எழுந்து இருக்க, ஆச்சரியமா  இருக்கு?

இல்ல யாமினி சும்மா தான். நீ எங்க இருக்க?

நானும் ரேகாவும் கொஞ்சம் பொருள் வாங்க கடைக்கு வந்தோம். நீ எங்க இருக்க?

நான் வீட்ல தான். உமா?

உமாவுக்கு கொஞ்சம் காய்ச்சல் அதனால் அவ வீட்ல இருக்கா. கௌதம் நான் உனக்கு அப்புறம் அழைக்கிறன்.

இது தான் சரியான சந்தர்ப்பம். இன்னிக்கே உமாவிடம் பேச வேண்டும்.

யாமினியின் வீட்டில் உமாவின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தான் கௌதம்.

யாமினி இல்லாத நேரம் ஏன் இவர் வந்தார்... ஒரு வேளை யாமினி வர சொல்லியிருப்பாளோ? என்று உமா எண்ணிக்கொண்டிருந்த வேளை,

உமா உன்னிடம் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும் அதான் யாமினி இல்லாத நேரமாய்ப் பார்த்து வந்தேன்.

என்னிடம் தனிமையில் பேச என்ன இருக்கு? நீங்க யாமினி வந்த பிறகு வாங்க என்று கௌதமை பார்த்துப் பயந்தவாறு கூறினாள்.

சரி நான் சொல்லிட்டு போய்டுறேன். நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கும் என்னை பிடிக்கும் என்று தெரியும். தயவுச் செய்து யோசித்து பதில் சொல்.

உமா முதலில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாள். பின்பு முயன்று தைரியமாக பேசத் தொடங்கினாள்.

இதுல யோசிக்க என்ன இருக்கு. எனக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகிவிட்டது. உங்களை நான் ஒரு நல்ல நண்பனா தான் பார்க்கிறேன். தயவுச் செய்து இனிமே இப்படி பேசிக்கொண்டு வராதீர்கள் என்று கதவை நோக்கி தன் கைகளைக் காட்டினாள்.

கௌதமிற்க்கு அவமானமாகவும் கோபமாகவும் இருந்தது. எப்படி என் காதலை நிராகரிக்கலாம் என்று எண்ணி தன் முடிவை செய்ல்ப்படுத்த முனைதான்.

சரி உமா நான் அப்புறமா வரேன். கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.

உமா சமையல் அறை நோக்கிச் சென்றாள். கௌதம் தன் கையில் தாலிக் கயிற்றை எடுத்துக் கொண்டு அவள் பின்னோடு சென்றான்.

ஏதோ உள்ளுணர்வு தோன்ற திரும்பிய உமா அப்படியே சம்பித்துப்போனாள்.

கௌதம் என்னப் பண்றீங்க…..

கௌதமை எப்படி தடுப்பது….. யாமினி வரும்வரைக்கும் தன்னை காத்து கொள்ளவேண்டும் என்று எண்ணினாள்.

ங்கு கடையில் தன் பையிலுள்ள பணத்தை எடுக்கும் பொழுதுதான் யாமினி உமாவின் மருந்தைப் பார்த்தாள்.

ஐயோ!!! இதை காலையில் உமாகிட்ட கொடுக்க மறந்துட்டேன். பாவம்!!! காய்ச்சல் அப்போ கண்டிப்பா இந்த மாத்திரையை அவ உட்கொள்ளவேண்டும். ரேகா உடனே நாம் வீட்டுக்கு போலாம். விரைந்துச் சென்று  தன் வண்டியை இயக்கினாள்.

யாமினி தன் சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்தாள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை உறையவைத்தது.

உமா தன் பலம் அனைத்தும் கொண்டு கௌதமை தடுத்துக் கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டு திரும்பிய கௌதம் அங்கு யாமினியை பார்த்தவுடன் உமாவை விட்டு விலகி நின்றான். அப்பொழுதான் உமா யாமினியைப் பார்த்தாள். பார்த்தவுடன் மயங்கிச் சரிந்தாள்.

யாமினியின் கண்களில் இருந்து கண்ணீரைப் பார்த்த ரேகா அவள் தோள்த் தொட்டாள்.

யாம்ஸ் சாப்பாடு கொண்டு வந்து இருக்கிறேன். கொஞ்சம் சாப்பிடு.

இல்ல ரேகா பசி இல்ல.

இப்போ மணி இரண்டு….. கொஞ்சமாவது சாப்பிடு….

உமாவைப் பரிசோதித்துவிட்டு வந்த அனு யாமினி நோக்கி வந்தாள்.

யாமினி…… அவள் இப்போ நலமாக உள்ளாள். மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்லலாம். ஆனால் அதிர்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

யாமினி அனுவிற்கு நன்றிக் கூறி விடைப் பெறும்பொழுது வந்தான் கௌதம். அவனை பார்த்தவுடன் அவளுக்கு கொலைச் செய்யும் அளவிற்கு கோபம் வந்தது.

யாம்ஸ்…… என்னை மன்னித்துவிடு. அதை கேட்க கூட எனக்கு தகுதி இல்ல. ஏதோ புத்திக் கொழும்பிப்போய் அப்படி பண்ணிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.