(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 104 - காதலியா மனைவியா? - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

This is entry #104 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – காதலியா மனைவியா?

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Tears

மீனாட்சி தன் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த மஞ்சள் சரடை தொட்டுப்பார்த்தாள், உள்ளம் பூரித்தது, மனம் போல் வாழ்வு எத்தனை பேருக்கு அமையும்? அவள் அதிர்ஷ்டசாலி. அர்ஜூன் அவளுக்கு அத்தை மகன், சிறு வயதில் அவளோடு ஓடி ஆடித் திரிந்தவன். அவள் பெண்மை மலர்ந்து இத்தனை ஆண்டுகளில் அவனை நேரே சந்திப்பது அவர்களது திருமண நாள் இன்று தான். அவள் பால்ய வயது தோழனாக அவனை எண்ண முடியவில்லை, அவன் முகம் நிமிர்ந்து பார்க்க அவளுக்கு துணிவில்லை, ஓரக் கண்ணில் பார்த்தபோது அவன் முகத்தில் ஓர் இருக்கம். இயந்திரமாய் திருமண சடங்குகளை அவன் செய்தான், பாவம் பிரயாணக்களைப்பென தோனியது அவளுக்கு.

ஒரே மாதத்தில் முடிவு செய்து அர்ஜூன் வெளிநாட்டிலிருந்து திரும்பும் மறு நாள் கல்யாணத்தை நடத்தினாள் அர்ஜூனின் அம்மா வித்யா.  மீனா வித்யாவின் அண்ணன் மகள். அந்த உரிமையில் தான் அவளது வாழ்கையை சோதனை தராசில் வைத்தாள் வித்யா.

“அண்ணா மனுவுக்கு மூன்று மாதம், மசக்கை படுத்துது, அவள் தனியே யூ.எஸ் ல என்ன செய்வாள், அர்ஜூனுக்கு முப்பது முடிய போகுது, அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கனும்னு அவன் ஜாதகம் சொல்லுது, நான் என்ன செய்வேன் சொல்லு?”

வித்யா நெருக்கியபோதும், மீனாவின் அப்பா மிகவும் யோசித்தார். “வித்யா நாங்க அர்ஜூனைப் பார்த்து பல வருஷம் ஆச்சு, மாப்பிள்ளையை நேர்ல ஒரு முறை பார்த்துட்டா மனசுக்கு நிம்மதியா இருக்கும்!”

வித்யா பையிலிருந்து ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து அர்ஜூனின் புகைப்படங்களை காண்பித்தாள். கல்லூரி முடித்து வீடுதிரும்பியவள் நடுக்கட்டில் இருந்து நடப்பதைக் கவனித்தாள். அவளுடைய  உள்ளம் அர்ஜூனின் முகம் காண துள்ளியது. வித்யா கிளம்பும்போது அவள் கன்னத்தை தட்டிவிட்டு, “மீனா, நான் போனதரவை வந்தப்ப, அர்ஜூன் அத்தானைத் தவிர வேருயாரையும் நான் கல்யாணம் பன்னிக்க மாட்டேன்னு சொன்ன, இன்னிக்கு நான் முகூர்த்தம் குறிச்சுட்டேன்”  என்று கூறி புன்னகைத்துவிட்டுக் கிளம்பினாள். மிகுந்த மனக்குழப்பத்திலிருந்த அப்பாவையும் அம்மவையும் மீனா கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். திருமணம் முடிந்து அவளை அர்ஜூனின் வீட்டில் விட்டு மீனாவின் உறவினர்கள் கிளம்பினர். இரவு தனி அறையில் புதுமணத்தம்பதியர் சந்திப்பிற்கான அலங்காரத்தில் திழைத்திருந்தாள் அவள். “மீனா!” என்ற வித்யாவின் குரலுக்கு திரும்பினாள். அவளது கையில் பால் செம்பை கொடுத்தவள், “மீனா, இங்கப்பாரு நீ விருப்பப்பட்ட வாழ்கையை உன் கையில் கொடுத்துட்டேன், நீ சாமர்த்தியசாலி, பொறுமையா அவன் மனசை ஜெயிக்கனும், நாளைக்கு இரவு எனக்கு ஃப்ளைட், மனுவுக்காக நான் போய்தான் ஆகனும், இனி அர்ஜூன் உன் பொறுப்பு”.

வித்யாவின் பாதத்தை தொட்டு வணங்கியவள், மெதுவாக மாடி ஏறினாள்.

வித்யா வெளிநாடு கிளம்பி மாதம் ஒன்று முடிந்துவிட்டது.  அர்ஜூனிடம் எந்த மாற்றமும் இல்லை,  கேட்டால், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரும், அவ்வளவு தான்..ஒரு முறைகூட கணவனுக்காக நெருக்கத்தை காட்டவில்லை, ஏன் அவள் முகத்தைப் பார்ப்பதைக் கூட அவன் தவிர்த்தான், மீனா பொறுமை கடந்து அவனிடம் கேட்டபோதும் எந்த பதிலும் இல்லை. அவன் அலுவலகம் சென்றதும் அவன் மடிக்கணினியை உயிர்ப்பித்தாள், ஒளிபெற்றவுடன் அதன் திரையில் ஒரு வெளி நாட்டுப்பெண்ணின் புகைப்படமிருந்தது. மீனா ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்த்தாள். அவனது மின் அஞ்சலை திறந்தாள். மீனா அறிவுக்கூர்மையானப் பெண், அர்ஜூனின் விரல் அசைவிலேயே அவனது ஒவ்வொரு பாஸ் வோர்டுகளையும் அறிந்து வைத்திருந்தாள். விசயம் புரிந்தது.

அர்ஜூனும் ரீட்டாவும் வெளிநாட்டில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், காதலென்று இருவரும் வந்தபோது வித்யா அதை முழுமையாக மறுத்துவிட்டாள். மாறாக சொத்து நேரடியாக அர்ஜூனின் கைகளுக்கு எட்டாது, அவனது திருமணத்திற்கு பிறகு அதை அவன் மனைவிக்கும் அவள் விருப்பத்தின் பேரில் அது அர்ஜூனுக்கு போகும் என்றும், மேலும் அர்ஜூன் வெளிநாட்டு பெண்ணை மணக்கும் பட்சத்தில் சொத்து அவனுக்கு சேராது தர்ம சத்திரங்களுக்கு போகவும், உயிலை எழுத, ஆக சிக்கலான சொத்தை எழிதில் தன் பெயருக்கு மாற்றும் பொருட்டு அர்ஜூன் மீனாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான். கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருமாங்கல்யத்தை இருக்கி பிடித்தவாரே வெகுநேரம் அமர்ந்திருந்தாள் அவள்.  அர்ஜூன் வீட்டுக்கு வந்ததும் அவன் அறைக்கு சென்றவள்,

“அத்தான், உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்” மென்மையாக வந்தது வார்த்தைகள்.

“பணம் ஏதும் வேணுமா? கப்போர்டல இருக்கு” அவன் திரும்பாது பதிலளித்தான்.

“பணத்திற்காக நான் வரவில்லை, அதுக்கு உங்கக்கிட்ட நான் பெர்மிஷன் வாங்க தேவயில்லை”, என்றவளை கேள்வியாய் பார்த்தவன்,

“ஓ, அம்மா  எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா? , வெல் அப்ப எனக்கு வேலை மிச்சம், ஆமாண்டி பணத்துக்கு நீ எங்கிட்ட நிக்க வேண்டாம், ஏன்ன இப்ப சொத்து உன் பேர்ல தான் இருக்கு, ஆனா ஒரே வருஷம், உன்னை டிவர்ஸ் பன்னிட்டு, சொத்தை என் பேர்ல மாத்திருவேன்… அதுக்காக உன்னை அம்போன்னுலாம் விட்டுற மாட்டேன், ஜீவனாம்சமா நீ கேட்டதைக் கொடுக்கிறேன்.. !” அலட்சியமாக பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.