(Reading time: 40 - 80 minutes)

2017 போட்டி சிறுகதை 105 - நாளை வருவான் என் தலைவன் - நித்யா பத்மநாதன்

This is entry #105 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – காதல்

எழுத்தாளர் - நித்யா பத்மநாதன்

Parrot

திருவிழாக்கூட்டத்தில் தாயைத் தொலைத்துவிட்ட பிள்ளைபோல வாடியிருந்தது அவளின் முகம். அவள் தமிழழகி. தன் புடவை முந்தானை  நுனியினை விரலில் சுற்றுவதும் பின்பு எடுப்பதுமாய் இருந்தாள். அவன் மேல் இருந்த கோபம் மொத்தத்தையும் எங்கு கொட்டுவது என்று தெரியாமல் ஒரு சிணுங்கலுடன் தன் வலது காலைகொஞ்சமாய் மேலே தூக்கி பூமியில் ஓங்கி ஒரு உதை வைத்தாள். அவள் உதைக்கு பூமி அதிர்ந்திருந்தாலாவது அவள்மனம் கவர்ந்தவன்காதுகளில் அந்த அதிர்வு கேட்டு அவளைக் காண அவன் வந்திருப்பான். ஆனால்,அவள் உதைத்தது அவள் அருகிலேயே நின்றிருந்த தோழியின் கண்கலில் எதேச்சையாய் பட்டுவிட்டது. தமிழைப் பார்த்து சின்னதாய் முறைத்துவிட அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

தோழியின் முறைப்பிற்கு பயந்து அந்த நிமிடம் கண்களை மூடிய தமிழ் அடுத்த நொடியே ஒரு கண்ணை மட்டும் லேசாய்த் திறந்து எதிரே நின்றிருந்த ஆடவர் கூட்டத்தில் அவனைத் தேட ஆரம்பித்தாள். அந்தளவு பார்வை வட்டத்தில் அவன் சிக்கவில்லை என்றானதும் மெல்ல அடுத்த கண்ணையும்  திறந்து சுற்றிலும் கண்களை அலைபாயவிட்டாள். ஆனால், அவன் ஒருவன் மட்டும் அங்கில்லை, அவனில்லா இடத்தில் தனக்கு மட்டும் என்ன வேலை என்று நினைத்தவள் அருகிலிருந்த தோழியிடம் கூட சொல்லாமல் உள் மண்டபத்தை விட்டு வெளிவந்துவிட்டாள். அவள் வெளியே வருவதை கண்டவன் அவள்பார்வையில் படாமல் மறைந்துவிட்டான்.

அன்று அந்த முருகன் கோவிலின் கடைசி திருவிழா. அவளும் அவனும் தனித்தனியே பலமுறை வந்துசென்ற கோவில்தான் அது. ஆனால் இன்று இந்த திருவிழா காதலர்களாய் இணைந்தல்லவா காணவிருக்கிறார்கள்! தமிழ்- வீரன் இருவரது வாழ்நாள் முழுவதுமான நினைவுகளை மொத்தமாய் கொள்ளையடிக்க இருவருக்குமான சந்திப்பு நிகழக் காத்திருந்தது.

கோவிலில் இருந்த மரங்களின் கருணையில் சிலு சிலுவென மெல்லிய காற்று அந்த இடத்தினை குளிர்வித்து கொண்டிருந்தது.கோவிலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கற்பூரவாசம் நாசியைத் தொட்டது. ஆனால் அவற்றால்கூட அவள் மன்நிலையை மாற்றமுடியாமல் போனது. அந்த இடத்தை ஒளியால் நிறைத்திருக்க வேண்டிய மின்விளக்குகளும் நிலவும் கூட்தம் கடமையை சரிவர ஆற்றவில்லை. நிலவை கருமேகங்கள் மறைத்திருக்க மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறினால் விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்குகளின்  ஒளி மட்டுமே அந்த இடத்தில் கொஞ்சமாய் ஒளிபரப்பி கொண்டிருந்தன.

முருகனை வள்ளோ தெய்வானை சமேதராய் காணும் நோக்கில் பலர் அங்கு கூடியிருந்தாலும் தமிழின் மனம் முருகனில் நிறையவில்லை. தன் மனம் கவர்ந்த வீரனை காணும் ஆவல் அவளை மொத்தமாய் தன் வசப்படுத்தியிருந்தது. கோவில் உள்ளே அவனைக் காணாததால் வெளியே வந்து அவனைத் தேட ஆரம்பித்தாள். அவள் கண்களிற்கு தெரிந்த ஆயிரம் தலைகளில் ஒரு தலைகூட அவள் தலவனுடையது இல்லை. சோகத்தையும் கோபத்தையும் மனதில் அப்படியே வைத்துக் கொண்டு அவனை தேட ஆரம்பித்தாள். விநாடிகள் ஒவ்வொன்றும் வேகமாய் கரைய தமிழின் கோபம் நேரத்தை விட வேகமாய் ஏறிக் கொண்டே சென்றது. வெண்மணலில்தன் பாதங்களை பதியவிட்டபடி நடந்து கொண்டிருந்தாள் தமிழ்.

நுனிவிரல்களில் தன் பட்டுபாவாடையைத் தூக்கிப்பிடித்தபடி ஓடிவந்த சிறுமி ஒருத்தி நடந்து சென்று கொண்டிருந்த தமிழின் மீது மோதிவிட்டாள்.அவளைக் கண்டதும் தமிழுக்கு தன் சிறுவயது நியாபகங்கள் நினைவில் வந்தன. உச்சியில் சிறு குடுமி கட்டி, அதற்கு அலங்காரமாய் சிறு பூமாலை, உடுத்தியிருந்த பச்சை நிற பட்டுபாவாடைக்கு பொருத்தமாய் கழுத்தல் பாசிமணிமாலை இப்படித்தான் தமிழையும் ஆசை ஆசையாய் அலங்கரித்து பார்ப்பது பூரித்து போவது அவளின் தாயின் வழக்கம். வெறும் நியாபகங்களாய் மட்டுமே நிழலாடும் தாய் நிஜத்திலிருந்தும் நினைக்க்கூட விரும்பாத்தந்தை, அண்ணன்கள்.தாயில்லாத ஏக்கம் கண்களில் நீராய் நிறைந்துவிட தன் நிலையைன் நொந்தபடி நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் பட்டது கடையில் தொங்கி கொண்டிருந்த அழகிய ஒரு சோடி பாதசரங்கள்.

கோபுர அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த மின் குமிழ்களின் ஒளியும் எதிர்ப்புறமாயிருந்த கடைகளில் போடப்பட்டிருந்த மின் குமிழ்களிலிருந்த வந்த ஒளியுமாய் பாதசரங்களில் பட்டுத்தெறிக்க அவற்றின் அழகு தமிழை ஈர்த்தது. பாதசரங்களின் அழகில் ஈர்க்கப்பட்டு கடையருகில் செல்ல வந்தது சோதனை.

வண்ணங்களின் அணிவகுப்பாய் சிவப்பு, பச்சை, நீலம் என அடுக்கிவைக்கப்பட்டிருந்த வளையல்களும் அவற்றின் அழகை காட்டி மயக்கின. கடையருகில் வந்தவளுக்கு வளையல்கள் வாங்குவதா இல்லை பாதசரம் வாங்குவதா என்ற குழப்பம்தான் மிஞ்சியது. குழப்பத்திலருந்தவளை கடைகாரனின் அதட்டல் குரல் சுயநினைவுக்கு கொண்டு வந்தது. எத்தனை இடர்களுக்கு நடுவில் அவன் இந்த இடத்தில் இன்று கடை போட்டுள்ளான். நியாயம் ? தருமம் என்று காலத்துக்குதவாத (அவனைப் பொறுத்தவரை) பேச்சுகளை பேசிய வீரனிடம் காலில் விழாத குறையாய் கெஞ்சியும் வேலைக்காமல்போக கடைசியில் ஏதேதோ செய்தல்லவா கடைபோட்டுள்ளான். வரிசையாய் நிறைந்திருந்த கடைகளில் இன்னும் சில கடைகளில் பாதசரங்களும் வளையல்களும் இடம்பிடித்திருக்க தன் வியாபாரம் நஷ்டமாகிவிடுமோ என்ற கடுப்பிலிருந்தவனிடம் வந்து எதையும் வாங்காமலும் இடத்தைவிட்டு நகராமலும் நின்றிருந்த தமிழைப்பார்த்து அதட்டிவிட்டான். ஏற்கனவே வீரனைக் காணாது தவித்திருந்த மனம் கடைகாரனின் அதட்டல் பேச்சுவேறு கேட்டுக் கொண்டு அமைதியாகவா இருக்கும்? கோபத்தீ கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.