(Reading time: 40 - 80 minutes)

இருட்டில் பயந்திருந்தவள் கையை தீடீரென பிடித்திழுக்கவும் அவள் கண்களில் நீர்தேங்கிவிட்டது. தமழ் என எண்ணி பிடித்த கை அவள் தோழி யாழினியுடையது என திடீரென தேரிந்த வெளிச்சம் காட்டி கொடுக்க அதிர்ச்சியில் நின்றிருந்தான் வீரன். யாழினிக்கும் அதே நிலைதான் என்றாலும் அவளை அதிகமாய் ஆட்கொண்டிருந்தது அச்சம். அங்கு வந்து சேர்ந்திருந்த அவள் அண்ணதான்காரணம். விசாரனை இன்றி தீர்ப்பு சொல்லும் ரகம் அவன். இருளிலில் தனியாக செல்லும் தன் தங்கையை கண்ட அவள் அண்ணன் பின் தொடர்ந்தான் வழியில் அவன் நண்பர்கள் இருவர் அவனை நிறுத்தி பேச்சு கோடுக்க அவன் பின்தோடரும் வேலை சற்றே தாமதமானது. அவன் கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட பாதிவழியிலேயே யாழினியை அவன் திருப்பி அழைத்துக்கொண்டு சென்றிருப்பான்.

யாழினியின் பாதுகாப்பு யாழினியின் சந்தோசம் யாழினியின் நிம்மதி … யாழினி அவளை முன்னிறுத்தியதே அவளின் குடும்பம். தாய் தகப்பன் இரு சகோதர்கள் கடைகுட்டியாய் யாடிpனி. பணம்..பாசம் மட்டுமல் கோவமும் கொஞ்சம் அதிகமாகவே புழங்கியது அந்த குடும்பத்தில். கோவமும் பாசமும் சேர்ந்து அறிவை மறைக்க சிந்தனைக்கு நேரம் ஒதுக்காமல் வீரனை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கோயிலுனுள்ளே சாமிதரிசனத்திற்காய் கூடியிருந்தவர்களுடன் தமிழும் நின்றிருந்தாள். இம்முறை முருகனுக்கு நன்றிசொல்லிக் கொண்டிருந்தாள். தன் ஆசைகளை செயலாக்கும் ஒருவனுக்கு தாய்க்கடுத்ததாய் அன்பு என்ற ஒன்றைமட்டுமே தன்மீது காட்டும் ஒருவனுக்கு தான் வாழ்க்கைத்துணையாய் செல்லவிருப்பதை எண்ணி எண்ணி உள்ளே முருகனை நன்றியில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் தமிழ்.  வெளியே வீரனை யாழினியின் அண்ணன் மண்ணில் புரட்டிக்கொண்டிருப்பது தெரியாமல்.

பூசை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் கண்களில் நடந்துகொண்டிருந்த சண்டை பட்டுவிட சிறிதுநேரத்திலேயே கூட்டம் கூடிவிட்டது. அங்கு விரைந்துவந்த தமிழுக்கு நடப்பதை புரிந்து கொள்ள முடியாமல் போனது. தமிழுக்கு நடந்துகொண்டிருக்கும் சண்டைக்கு விளக்கம்தேவைப்பட்டது. யாழினிக்கு வீரன் நடந்துகொண்டதற்கு விளக்கம் தேவைப்பட்டது. இவர்கள் இருவருக்கும்தான் காரணங்களும் விளக்கங்களும் தேவைப்பட்டது. கூடியிருந்த பலருக்கு அவை எதுவும் தேவைப்படவில்லை. கண்களில் கண்ணீருடன் யாழினி அவள் முன்னால் அவளது அண்ணன் வீரனை அடித்துக் கொண்டிருக்கின்றாம். இதுபோதாதா?

யாழினியிடம் தவறாக நடக்கமுற்பட்டவனை அவளது அண்ணன் அடித்துக் கொண்டிருக்கின்றான் என சிலரும் யாழினியும் வீரனும் காதலர்கள் இன்று தனிமையில் சந்தித்தவேளை கையும்களவுமாக அவள் அண்ணனிடம் மாட்டிக் கொண்டார்கள் அதனால்தான் இந்த சண்டை என்றும் அவரவர் கற்பனைக்கு தோன்றியதை பேசிக்கொண்டிருந்தனர். ஆனாலும் வீரனை நன்கறிந்த சிலர் நடந்ததை கேட்டறிந்து வீரனயும் யாழினியின் அண்ணனையும் சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தனர். கண்ணீருடன் நிற்கும்தோழி மாறிமாறி அடித்துகொள்ளபவர்களில் ஒருவன் தன் மனம்கவர்ந்தவன் அடுத்தவன் தோழியின் அண்ணன். யாரை எதை சோல்லி சமாதானம் செய்வது ? வீரனின் மனம் கவர்ந்தவள் தான்தான் என்ற உண்மையை எல்லார்முன்னிலையிலும் சொல்லிவிட நினைத்த தமிழை அங்கிருந்து இழுத்து சென்றுவிட்டான் அவளின் அண்ணன். பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றால் பிரச்சனை தீராது என அங்கிருந்தவர்கள் எண்ண வீரனின் நியாயம் சொல்லப்படாமலேயே சண்டை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கோவிலில் யாழினிக்கேற்பட்ட அவமானத்தை பெரும் இழுக்காக எண்ணி எண்ணி கோவத்தில் கனன்று கொண்டிருந்தது அவள் குடும்பம். வீரன் வீடுதேடி வந்து சொன்ன சமாதானத்தையும் முழுவதுமாய் ஏற்கமுடியாமல் குழம்பிபோயிருந்தனர் அவர்கள். தமிழ் என்று நினைத்தே தான் யாழினியின் கையை பிடித்ததாக சொல்லியிருந்தான் வீரன். ஆனால் கோவிலின் உள்ளே தமிழ் நின்றிருந்ததை கண்டிருந்தானே யாழினியின் அடுத்த சகோதரன்.

மின்இணைப்பில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்துவிட்டு அப்போதுதான் கோவில் வாசலிற்கு வந்துசேர்ந்த யாழினியின் மூத்த அண்ணனே அவள் பின்னே சென்றவன். அவர்கள் வெளியேறவும் அடுத்தபக்கமாய் தமிழ் கோவிலின் உள்ளே வந்தசேர்ந்தாள். தமிழ் உள்ளே வரவும் அவள் பின்னே வந்து சேர்ந்தான் யாழினியின் இளைய அண்ணன். ஆக அவன் வரும்போது தமிழ் கோவிலினுள் இருந்தாள்.

தமிழிடம் விபரம் கேட்கவும் முடியாத நிலை. அந்த பிரச்சனைக்கு பிறகு தமிழ் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவள் அண்ணன்கள் மற்றும் தந்தையுடன் யாழினி குடும்பத்திற்கு சுமூகமான உறவு இல்லை. ஆகவே தமிழ் வெளியே வந்தால் மாத்திமே உண்மையை அறியலாம்.  “ என்ன நடந்தது என்ன நடந்தது’’ என மற்றவர்களிடம் கேட்க முடியாது.. தங்கையின் மானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் இதை அதிகம் அலசுவதும் சரியாகபடவில்லை. காரணம் காலம் தள்ளி வந்தஞானம் .கண்ணிலிருந்து மறைந்தது கருத்திலிருந்தும்மறைந்துவிடும் என்ற நம்பிக்கை தோன்ற அந்த பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக நினைக்காமலிருக்க முயன்றுகொண்டிருந்தார்கள் அதில் சம்பந்தப்பட்டவர்கள்களில் பலர். ஆனால் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கோண்டு வர காத்திருந்தது இதைவிட பெரியபிரச்சனை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.