(Reading time: 40 - 80 minutes)

ருள் அப்பிக்கிடந்த காட்டிலே அதுவரை கேட்டுக் கொண்டிருந்த மூங்கிலின் சத்தம் தவிரவேறு ஏதோ சத்தமும் லேசாய் காற்றில் கலந்து வந்தது. தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த சத்தம் சிறுது நேரத்திலேயே அதிகமாய் கேட்க ஆரம்பித்தது. தீப்பந்தங்களும் கைவிளக்குகளுமாய் ஆட்கள் சிலர் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் தன்னை நெருங்கும்போதே முன்னால் வந்துகொண்டிருந்தவனை அடையாளம் கண்டான் வீரன். இவன் எப்படி இவர்களுடன் அதுவும் இந்தநேரத்தில் இந்த இடத்தில்?

அவர்களனைவரையும் அங்கு தலமைதாங்கி அழைத்து வந்தவன் சேகர். சேகரை தேடி அவன் வந்தால் அவன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு வந்துநின்றான். குடிபோதையில் விழுந்துகிடப்பான் என எதிர்பார்த்தால் அவன் நிதானத்தில் நின்றுகொண்டிருந்தான். சேகரை தேடியே வீரன் வந்திருந்தான் என்பதால் சேகரைக்கண்டதில் அவனுக்கு அதிர்ச்சி இல்லை. குழப்பம்தான் வந்தது. அவன் அழைத்துவந்தவர்களை பார்த்து. வந்தவர்கள் வீரன் நின்றிருந்த பள்ளத்தை சுற்றிவளைத்தனர். ஏதோ ஒன்று உறுத்த அப்பொழுதுதான் தன் காலடியில் கிடப்பதை வெளிச்சத்தில் கண்டான்.

தமிழ்…

வாய்விட்டே கூறினான் தன்னவள் பெயரை. இது இரண்டாவது அதிர்ச்சி.

தமி…ழி..ன்… தோழி யாழினி...

தமிழின் தோழி யாழினிதான் வீரனின் காலடியில் கிழிந்த கந்தையாய்க் கிடந்தது.

அவன் யாழினியை அடையாளப்படுத்தியவிதத்தைக்கவனித்து புரிந்துகொள்ள முயற்சி செய்திருந்தால்கூட அடுத்துவரப்போகும் பல பிரச்சனைகளை தடுத்திருக்கலாம். இந்தமுறை அவர்களின் கோவத்திற்கு தன் கையிலேயே ஆதாரம் வைத்திருந்தாள் யாழினி. அவள் இடது கையில் பச்சைகுத்தப்பட்டிருந்தது. “ சேகர்” என்ற பெயர். வீரனின் முழுப்பெயர் வீரசேகரன். தன்னவன் பேயரை பச்சை குத்திக்கோண்டு வரும்போதுதான் யாழினியை ஏமாற்றி கடத்தியது காட்டுக்குள் தூக்கிச் சென்றது பூவைக் கசக்கி புதைகுழியில் போட்டது எல்லாம். அன்றுபோல இன்றும் யாழினியின் அண்ணகள் சிந்திக்க மறக்க அதுவே அடுத்தடுத்த பிரச்சனைகளுக்குசெங்கம்பளவரவேற்பாய் அமைந்துவிட்டது. யாழினியை தமிழின் தோழியாய் மட்டுமே வீரன் தெரிந்துவைத்திருக்கிறான். அதுதவிர யாழினிக்கும் வீரனுக்கும் உறவு இல்லை என்பது புரிந்திருக்கும்.

சூழ்ந்து நின்றவர்களின் பார்வை மொத்தமும் வீரனை விசாரணை இன்றி தூக்கிலேற்றிக் கொண்டிருந்தன. அன்று தங்கையின் கண்ணீருக்காகவே வீரனைப் புரட்டி எடுத்தவன் யாழினியின் அண்ணன் இன்று அதே தங்கை அதேவீரன் காடியில் உயிரற்று கிடப்பதை கண்டால் சும்மாவாவிடுவான் ? வீரனை வெட்டி வீசியெறியும் எண்ணத்துடன் அவனை நோக்கி பாய்ந்தான். ஏந்தியவன் ஏவிய வேலையை அரிவாள் செய்தது!

ருக்குள்…

அந்த பெரியவீட்டின் சிறியஅறையில் கிடந்தாள் தமிழ். கடந்த பத்து நாட்களாகவே அவளின் இருப்பிடம் இந்த அறைதான். கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள். மெதுவாக கண்களை சுழலவிட்டவளுக்கு தான் இருக்குமிடம் எதுவெனபுரிந்தது. தான் விரைவாக செயல்படவேண்டிய நேரம் இதுவெனவும் புரிந்தது. எழுந்து கதவில் கைவைத்தாள். அது பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்துகோண்டு வெளியேஓடி வந்தாள். வீட்டில் யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை. வீரனைக்காண வேண்டும் அவனிடம் நடந்தவைகளைக் கூறவேண்டும் என ஓடினாள். நடுக்காட்டில் நடந்தவை எதுவும் அவள் அறிந்திருக்கவில்லை.

வெளியே வந்தவள் வீரனின் வீட்டைநோக்கி ஓடினாள். போகும் வழியில் அவள் கண்டவைகள் ஏதோ சரியில்லை என்பதை அவளுக்கு உணர்த்தின. ஆத்திரம் கொண்ட ஆடவர்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கி கொண்டிருந்தனர். சிலவீடுகள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன. மக்களின் கதறல் ஒலியும் தெளிவாகவே  கேட்டது. இருநாட்களில் என்ன நடந்திருக்கும் என அவள் தெரிந்துகொண்டாகவேண்டும். ஆனாலும் முதலில் வீரனைக்காணவேண்டும் அவன்மூலமாகக்கூட நடப்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தாள். வழியில் நின்றிருந்தவர்களிடம் அவர்களின் மனநிலை பற்றி தெரியாமல் வீரனைப்பற்றி விசாரித்தாள். வீரன் இறந்துவிட்டான் என்ற மரணச்செய்திதான் பதிலாய் கிடைத்தது. அதிர்ச்சியிலும் உடல் அயர்ச்சியிலும் இருந்தவளுக்கு இந்த செய்தி பேரிடியாய் இருந்தது. நின்றிருந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டாள்.

காட்டில்..

வீரனை வெட்ட பள்ளத்தில் பாய்ந்தவன் தரையில் கிடந்த கொடி ஒன்றில் கால் தடுக்கி கீழேவிழுந்துவிட்டான். அவன் விழும்போது கையிலிருந்த அரிவாள் நழுவி வீரனின் கழுத்தை வெட்டுவதற்கு பதில் அவனின் தோள்பட்டைக்கு கொஞ்சம் கீழிறங்கி கையில் வெட்டிவிட்டது. சிறியளவு வெட்டுதான் என்றாலும் அது ஆழமான வெட்டு. தசைபிளந்து கொண்டது. வெட்டப்பட்ட இடம் வலிதந்தாலும் உடனே சுதாகரித்துகோண்டு தன் காலடியில் கிடந்த அரிவாளை கையிலெடுத்து தன் முன்னின்றவர்களை எச்சரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.