(Reading time: 40 - 80 minutes)

வன் முகம் பார்த்திருந்தவள் அவனைப் பற்றி என்ன சிந்தனையிலிருந்தாளோ அதை அவளுமே அறியவில்லை. ஆனால் வீரனின் மனம் தமிழ்மீது காதல் கொண்ட நொடியை அசைபோட்டது.

குளிப்பதற்காக ஆற்றங்கரை நோக்கி சென்று கொண்டிருந்த வீரன் தரையில் கிடந்த முள்ளை தவறுதலாக தன் கால்களில் ஏற்றிக் கோண்டான். அருகிலிருந்த வாயிற் கடப்பை பிடித்துக்கொண்டு முள்ளை அகற்றிவிட்டு நிமிர்ந்தவன் கண்கள் சென்று நின்றது அந்த வாயிற்கடப்பிற்கு சொந்தமான வீட்டு முற்றத்தில்.

முதல்நாள் மழையில் குளித்திருந்ததுக்கு அடையாளமாய் இலைகளிலும் பூக்களிலும் நீர்த்துளிகளை கொண்டு வீட்டு வாசலைவிட்டு சற்று தள்ளி அசையாது நின்றிருந்திருந்து அந்த செம்பருத்திமரம். எங்கிருந்தோ தேன்தேடி வந்த வண்டு மலர்ந்திருந்திருந்த மலரில் தேன்குடித்துவிட்டு பறந்துசெல்லும்போது இலைகளில் ஏற்பட்ட சின்ன சலசலப்பில் அவற்றின் மீதிருந்த நீர்த்துளிகள் கசிந்த அந்த நேரம் பார்த்து அங்கு வந்த தமிழின் முகம் அவற்றை ஏந்திக் கொண்டது. சற்றே உயரத்திலிருந்த பூவைப்பறிக்க மேலே அண்ணார்ந்து பார்த்து கையை உயர்த்தியவள் முகத்திலேயே நீர்த்துளிகள் விழுந்தன. அந்த நீர்த்துளிகள் அந்த குமரியினுள் மறைந்திருந்த குழந்தையை வெளிக்கொணர்ந்துவிட மரக்கிளைகளை இரு கைகளாலும் பிடித்து உலுக்கி நீர்த்துளிகளில் சிலிர்த்துக்கொண்டிருந்தாள்.  மஞ்சள் பூசிக் குளித்திருந்த அவளது கறுத்த முகத்திலிருந்த நீர்த்துளிகளில் காலைச்சூரியனின் கதிர்களும் பட்டுத்தெறிக்க முத்துக்கள் அங்கே தங்கள் மதிப்பை இழந்துகொண்டிருந்தன. பார்த்துக் கொண்டு நின்றிருந்த வீரனின் மனமோ அங்கே தமிழைக் குடியேற்றி தன் மதிப்பைக் கூட்டி கொண்டிருந்தது.

அன்றுதான் தமிழை முதன் முறையாக பார்த்தான் என்றில்லை. ஆனாலும் அன்று அவளின் அந்த செய்கை அவனை அவள் பக்கம் ஈர்த்தது. அதுதான் காதலா என்றால் விடை இல்லை ஆனால் அவள் மீது அவன் கொண்ட நேசம்தவிர வேறு எதுவும் காதலாகிவிடாது.

காதல் அந்த இராப்பொழுதை கொஞ்சம் கொஞ்சமாய் களவாடிக் கொண்டிருந்தது. தமிழும் வீரனும் நின்றிருந்த இடம் ஒரு மரத்தடியின் கீழ். ஆள் அரவம் மிகக்குறைவான இடம். கோவிலின் பின்புறம் அது. வீரனைத்தேடி வந்த தமிழும் தமிழைத்தேடி வந்த வீரனும் இருட்டில் கோவிலின் பின்புறம் வந்துவிட்டதை அறியவில்லை.

நீண்டநேரமாய் நடந்து கொண்டிருந்த பார்வைப் பரிமாற்றத்தை கிளி முடிவுக்கு கொண்டுவந்தது. தன் சிறகுகளை அடித்துக் கொண்டு அது பறந்துவிட்டது. அந்த சத்தம்தான் தமிழையும் வீரனையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. தன்னவளாய் தமிழ் உணர்ந்த தருணத்தை அசைபோட்டுக் கொண்டிருந்த வீரனும் வீரனின் கண்களில் தெரிந்த காதலில் தன்நிலை மறந்திருந்த தமிழும் ஒருசேர சுயநினைவிற்கு வந்தனர். தன்நிலை உணர்ந்த தமிழ் வெட்கத்தில் ஓட அவளைப் பிடிக்க வீரனும் அவள் பின்னே ஓடினான். காதல் கொண்ட மனம் சுற்றுச்சூழல் அறியாதா இல்லை நின்றிருந்த சூழலே காதலைப் பறைசாற்றுவது என்பதாலா தமிழ் வீரன் இருவரும் இடம்மறந்திருந்தனர். தன் காதுகளில் கேட்ட பாதசரத்தின் ஒலியைவைத்து பெண்ணவள் கையைப்பிடித்து நிறுத்தினான்.

ன்னருகே நின்றிருந்த தமிழை நீண்ட நேரமாய் காணாது தவிர்திருந்தாள் யாழினி. யாழினி தமிழின் உயிர்த்தோழி.கோவிலின் உள்ளே அவள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் தமிழ் எங்காவது வெளியே சென்றிருப்பாள் சிறுதுநேரத்தில் எப்படியும் தன்னைத்தேடிவந்துவிடுவாள் என்று காத்திருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு தோழியைத்தேடி தனியாக வெளிவீதிக்கு வந்துவிட்டாள். யாரிடமும் தமிழைப் பற்றி விசாரிக்கமுடியாத நிலை. ஆக தானே தேடுவது என்ற முடிவில் நீண்டு சேன்ற பாதைவழியே அவளும் சென்று கொண்டிருந்தாள். மின் துண்டிப்பு இன்னமும் சரி செய்யப்படாமலிருக்க இருட்டில் தனியே சென்று கொண்டிருந்தாள்.

தன்நிலை உணர்ந்த தமிழ் வெட்கத்தில் ஓட அவளைப்பிடிக்க பாதசரத்தின் ஒலி கேட்ட திசையில் வீரன் ஓடினான். ஆனால் அவன் ஓடியது தவறான வழியில். சிறுது தூரமே ஓடிய தமிழ் ஓட்டத்தை நிறத்தி நின்றுகொள்ள இருட்டிலே அவள் நிற்பதை உணராமல் வீரன் ஓடிவிட்டான். தமிழ் இருட்டிலே தனித்துவிடப்பட வீரன் எங்கோ சென்றுவிட்டிருந்தான். தமிழைத்தேடி கொண்டுவந்த யாழினி இருள் அதிகாமாயிருப்பதை கண்டு திரும்பி ஓட சரியாய் அந்த நேரம்பார்த்து வீரன் அவளின் கையை இழுத்துபிடித்து நிறுத்தினான். தமிழ் ஓட்டத்தை நிறுத்தவும் யாழினி ஓட ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. யாழினியின் பாதசரத்திலிருந்து வந்த வீரன் கேட்ட ஒலி!

அத்தனை நேரம் இல்லாமலிருந்த வெளிச்சம் இன்னும் சிறுதநேரம் கழித்தே வந்திருக்கலாம். ஆனால் வீரனை விரட்டுவதில் விதிக்கு அப்படி என்ன சந்தோஷமோ தவறான நேரத்தில் சரியாய் மின்னோளியாய் ஒளிர்ந்து தொலைத்தது. தங்கையை தேடிக்கொண்டு நண்பர்களுடன் அவ்விடம் வந்த யாழினியின் அண்ணன் கண்களில் வீரனின் செய்கை பட அடுத்தடுத்து நடந்தவைகள் எல்லாம் காட்ச்சிப்பிழையின் கைகாரியங்கள்.

அவள் அறிவாள் வீரனின் ஒழுக்கம் பற்றியும் அவன் தமிழின் காதலன் என்றும். ஆனால் இன்று வீரன் தன்னிடம் நடந்து கொண்டதற்கு விளக்கம் அவளுக்கு விளங்கவில்லை. நடந்தவைகளை விளக்கிச் சொல்லவோ  ஏன் நடந்ததை நடந்தபடி கூறக்கூட அவளால் முடியாத நிலை. வாய்ப்பேச முடியாத காதுகேட்காத பெண் அவள். சைகையால் கூறினாலும் பயனில்லை என்ற நிலை. அதனால்தான் வீரன் தமிழை அழைத்தபடி தன் கையைப்பிடித்ததை அவள் அறிந்திருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.