(Reading time: 40 - 80 minutes)

த்து நாட்கள் கடந்திருக்க ஒருமாலைNநரம் ஊரைவிட்டுதள்ளியிருந்த காட்டைநோக்கி சென்று கொண்டிருந்தான் வீரன். காட்டின் முகப்பில் சிறிய பற்றைகளும் கள்ளிச் செடிகளும் சிறயளவிலான பனைமரங்களுமாய் அவற்றுடன் சேர்த்து காட்டுமூங்கில்களுமாய் காட்சியளித்தது அந்த இடம். தரையில் அதிகம் குற்கள் இல்லை. ஆங்காங்கே நிலம் மனற்தரையாய்தான் காணப்பட்டது. வளைந்து சேல்லும் சிறியளவிலான ஒற்றையடிப்பாதை. அந்த ஒற்றையடிப்பாதை முடிவடையுமிடம்வரைதான் மனிதர்களின் நடமாட்டத்திற்கு எல்லை என தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஒற்றையடிப்பாதையைமட்டும்தான் ஊரிலுள்ளவர்கள் பயன்படுத்துவார்கள். காட்டிற்குள் செல்லவேண்டுமானால் அதுஒன்றே வழி என அறிப்பட்டிருந்தது. ஊரைவிட்டு தள்ளியிருந்த காடு என்பது தவிர அங்கு கொடியவிலங்குகள் இருக்கலாம் என்ற அச்சமும் மனிதநடமாட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க அங்கிருந்த மரங்கள் கோடாரிக்கு இரையாகமலிருந்தன.

நீண்டநேரமாக வீடுதிரும்பாத நண்பனைத்தேடி அலைந்துகொண்டிருந்தவன் ஊரைவிட்டுதள்ளியிருந்த அந்த காட்டை அடைந்திருந்தான். வீரனுக்கு நண்பன்னென்றால் அது சேகர் மட்டும்தான். ஆனால் சேகருக்கு ஊரிலுள்ள குடிகாரர்கள் அனைவரும் நண்பர்கள். சேகரும் சாரயத்திற்காக அவன் சேரும் கூட்டாளிகளும் அவனுடன் சேரும் கூட்டாளிகள் சிலருமாய் கூடும் இடம் இதுதான். நண்பனைத்திருத்தவும் முடியவில்லை அதேவேளை விலகிடவும் மனமில்லை வீரனுக்கு. நேற்றுமகூட குடித்துவிட்டு இதே காட்டின் முகப்பில்தாநே வீழ்ந்துகிடந்தான். போதையில் கையிலிருந்த சாரயத்தை வீரன்மேல் கொட்டிவிட்டு சேகர் விழுந்துவிடவும் அவனை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வீடு கொண்டு சேர்த்தான். கடந்த சில நாட்களாகவே தன்னையும் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி சாரயத்தை ஊற்றிவிட்டு சிரிப்பதும் அழுவதுமாய் சேகர் செய்தவை சில.. தன் சட்டைமேலிருந்து வந்த சாராயவாசம் தள்ளாடியபடியே நடந்தும்வந்தது இவர்களைக் கண்டவர்கள் முகம் சுளித்தது எல்லாம் வரிசையாய் நியாபகம் வர இன்றும் அதுபோல ஒன்றையே எதிர்பார்த்து இங்கு வந்திருந்தான் வீரன்.

நண்பனைத்தேடி வந்தவனை வரவேற்க காத்திருந்தது நயவஞ்சகம். காட்டின் முகப்பில் சில வெற்று போத்தல்கள்தான் கண்ணில் பட்டன. சேகரோ அவன் கூட்டாளிகளோ அங்கு இல்லை. காட்டினுள் ஏதோ சலசலப்பு கேட்க ஒருவேளை அங்கிருக்கலாம் என எண்ணி உள்ளே சென்றான். அது ஆட்கள்புழுக்கம் அதிகம் அற்றகாடு என்ற உண்மை அவனுக்கு நியாபகத்திலிருந்தாலும் நண்பனைத்தேட வேண்டுமே ஆக காட்டினுள் சென்றான். முன்பகுதிபோல் இல்லை காட்டின் உள்பகுதி. அகன்ற நீண்ட வனப்பகுதி அது. நீண்டதும் அகன்றதுமான மரங்கள் நெருக்க நெருக்கமாய் காணப்பட்டன. உயர்ந்து ஓங்கிய மரங்களுடன் சேர்த்து காட்டுமூங்கில்களும் காணப்பட்டன. மூங்கில்களில் உரசிய காற்றின் ஒலி இரவுப்பொழுதின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. காட்டிள் செல்லச்செல்ல ஆங்காங்கேயிருந்த முட்செடிகள் வீரனின் கையை கிழித்தன. கைலி அணிந்திருந்ததால் கால்களில் பெரிதாக எந்த கீறலும் இல்லை. ஆனால் என்றும்போல் இன்றும் மேற்சட்டையின் கையை மடித்தே விட்டிருந்தான். முகத்தில் முட்செடிகள் கீறிவிடாலிருக்க அவற்றை ஒருகையால் தள்ளிவிட அவை கையை கிழித்துவிட்டன. சாதாரணமாகப் பார்த்தால் நகக்கீறல்கள்போன்றே தெரியும் முட்கீறல்கள் அவை.

கையில் இருந்தது சிறிய கைமின்கலம் (டார்ச்லைட் ) மாத்திரமே. அந்த அடர்ந்த காட்டுக்குள் பகலில் சென்றாலே வெளிச்சம் குறைவாகத்தான் கிடைக்கும். நீண்ட மரங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கோண்டு நிற்பதுபோல்  அவற்றின் மேற்பரப்பு மூடியே இருக்கும். வீரன் இப்போது காட்டுக்குள் இருக்கும் நேரமோ முன்இரவுப்பொழுது. ஒளியின்தேவை மிகவும் அவசியமான நேரம் அது. நேரம் ஆக ஆக ஒளியின்தேவை கூடுமே தவிர குறைப்போவதில்லை. கையிலிருக்கும் கைமின்கலம் எப்போதுவேண்டுமானாலும் தன் சக்தி முழுவதும் தீர்ந்துபோய் அணைந்திவிட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் அங்கிருந்து புறப்பட்டான். இத்தனை நேரம் தேடியும் கிடைக்காதவனை இனி எங்கு தேடுவதேன்ற யோசனையிலேயே சென்றவன் ஒரு பெரிய மரத்தை கடந்திருக்க அடுத்த நொடி வீரனை யாரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டனர். அதுதான் அன்றைய நாளுக்கான முதல் அதிர்ச்சி.

தள்ளப்பட்டவன் விழும்போதே யாரோ வேகமாக ஓடும் சத்தம் கேட்டது. வீரன் விழுந்தது ஒரு பள்ளத்தில். ஆனால் அடி எதுவும் படாமல் பள்ளத்திலிருந்த ஏதோ ஒன்று அவனைக் காப்பாற்றியது. விழுந்தவேகத்தில் கைமின்கலம் தன் செயற்பாட்டை நிறுத்தியிருக்க வீரன் இருட்டிலேயே அந்த பள்ளத்தில் கிடந்தான். பள்ளத்தில் தான் வீழுந்தபோது அடியிலிருந்து தன்னைக் காத்த ஒன்றை என்னவென்று ஆராயத்தொடங்கினான். இருட்டில் தட்டதடுமாறி தடவிப் பார்க்க அவனுக்கு புரிந்தவரை அது ஏதோ மனித உடல்போல் தெரிய வீரனையு விட்டுவைக்கவில்லை பயம். ஆனாலும் உறுதியாகத்தெரியாமல் குழப்பவோ பயப்படவோ அவன் தயாராயில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.