(Reading time: 40 - 80 minutes)

ருக்குள்..

ஒருவாறு வீரன் ஊரை அடையும்போது பொழுது புலர்ந்திருந்தது. வீடுகள் கொழுத்தப்பட்டு மக்கள் அழுகுரல் கேட்டது. காரணம் புரிபடவில்லை. ஏற்கனவே மண்டையை குடைந்து கொண்டிருந்த கேள்விகளுடன் இதுவும் சேர்ந்து கொள்ள விடைதே தமிழைத் தேடினான். செம்மண்தரையில் ஒரு பனைமரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள் தமிழ். அவளருகில் வந்துநின்றான் வீரன். தன் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை எண்ணி கொஞ்சமாய் மகிழ்ந்தாள். வீரனின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்தது தமிழிடமிருந்து. நடந்ததை விளக்கி உண்மைகளை புரியவைக்கிNறன் என புறப்பட்ட வீரனை தடுத்தாள் தமிழ். வீரன் வாழ்ந்த இடம் என்ற ஒரே காரணத்திற்காக நியாயமின்றி ஊர்முழுவதும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. யாழினியின் உறவுகள் தங்கள் வேதனையை கண்ணீரில் காட்ட அவர்களின் வேதனையில் பங்கு கொள்வதாக காட்டிக்கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஊரையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழின் உறவுகள். இந்த நேரம் வீரன் அவர்களின் முன்நின்றால் அவனை மொத்தமாய் அழித்துவிடுவார்கள் என்பதில் தமிழ் தெளிந்திருந்தாள். அவள் தெளிவில் ஒரு முடிவும் பிறந்திருந்தது.

அது வீரனைக்கட்டாயப்படுத்தி ஊரைவிட்டு அனுப்பிவைப்பது.

“வீரனை அழிக்கத்துடிப்பவர்கள் கூலிப்படைகள் இல்லையே எதிர்த்து நிற்கவும் அவர்களை இவன் வெற்றி கொள்ளவும்.பேராசையை குருதியிலும் மூளையிலுமாய் வேரியாய் ஏற்றி வைத்திருப்பவர்கள். அவர்களிடம் அவன் சிக்குவதைக்காட்டிலும் முட்டாள்தனம் வேறில்லை. எதிரிகளை அழிக்க அவர்களை விட பலம் உள்ளபோது மோதுவதுதான் சிறந்த முடிவாய் இருக்கும்” என நம்பினாள். கோழைப்போல ஓடிஒளிய மறுத்தவனை காரணங்களை அடுக்கி சம்மதிக்க வைத்தாள். அவன் உயிரோடிருக்கும் செய்தி இந்நேரத்திற்கு அவனை எதிரியாய் நினைப்பவர்களுக்கும் அவனுக்கு துரோகமிழைத்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். சூழ்ச்சி செய்து வீரனை தனியாக்கியதே அவனை அழிக்கத்தானே. அவர்களிடம் வீரன் சிக்கக்கூடாது.ஆனால் அவன் உயிரோடிருந்தால் என்றாவது ஒரு நாள் நியாயம் தேடி வருவான் என்ற பயத்தில் தவறுகள் தொடராமலிருக்கும் என தமிழ் எண்ணினாள். தன்னையும் உடன் அழைத்த வீரனுடன் செல்ல மறுத்துவிட்டாள். அவள் அவனுடன் சென்றுவிட்டால் அவன் அவளைக்காக்கவே போராடவேண்டியிருக்கும். அந்த போராட்டம் அவனை கோழையாக்கும். அது தவிர அவள் இங்கு இருக்க வேண்டும் துரோகத்தின் சாட்சியாய் அவள் உயிருடன் நடமாட வேண்டும். செத்துவிட்ட அவர்களின் மனசாட்சி என்றாவது உயிர்த்தெழுந்தால் அதுவே அவர்களை கொல்லும். தமிழ் சென்றுவிட்டால் அவர்களின் மண்ணாசையும் வென்றுவிடும். குறைந்தது அந்த ஆசையையாவது நிராசையாக்க வேண்டும். தமிழ் உயிருக்கு ஆபத்து என்றால் ஒளிந்திருப்பவன் வெளியேவருவான். அவன் வரும்போது பலத்தைகூட்டிக் கொண்டே வெளிவருவான். அவர்களின் அந்த பயமே தமிழை அவர்களிடமிருந்து காத்துவைக்கும்.

சுற்றியும் தீ. மனைகளும் மக்களுமாய் எரிந்துகொண்டிருக்க கண்ணீருடன் நின்றிருந்தாள் தமிழ். வீரனை அனுப்பிவைத்துவிட்டாள். அவள் கண்ணீருக்கு காரணம் அவள் முடிவு ஒன்றுதான். செயலாக்கிவிட்ட முடிவை அவள் நினைத்தால்கூட மாற்றியமைக்க முடியாத நிலை. அது ஒன்றுதான் சரியான முடிவு என்பதற்கில்லை ஆனால் வேறு எந்த முடிவும் அந்த பிரச்சனைக்கு தீர்வாய் அமையாது என அவள் நினைத்தாள். தமிழ் காட்டும் பாதை தன் வழி என்ற முடிவிலிருந்த வீரன் வென்றுவிட்டான். சூழ்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தன் காதலையும் கண்மறைந்து போய்விட்ட காதலனையும் எண்ணியவளுக்கு அழுகைக்கு பதில் இம்முறை துணிச்சல் பிறந்தது. தான் சிந்தும் ஒவ்வோரு கண்ணீர்துளியும் வீரன் இவளுக்காய் சிந்திய ரத்த துளிகளை களங்கப்படுத்துவதுபோல் ஆகிவிடுமே. ஆக நடப்பதை ஏற்கத் தயாரானாள் நடந்தவைகளை எண்ணி. வீரன் எப்படியும் ஒருநாள் தன்னைத்தேடி திரும்பிவருவான் அன்று உண்மைகள் எல்லோருக்கும் புரியும். அவனுடன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழலாம் என கனவு கண்டுகொண்டிருந்தாள் தமிழ். கால்போனபோக்கில் போய்க்கொண்டிருந்த வீரனின் உடம்பிலிருந்து இரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது….

சில வருடங்களின் பின்..

தமிழ்… தமிழ் …

வீரன் .. வீரன்..

சற்றே சரிந்தாற்போல இருந்தாலும் .உயிருடன் நின்றிருந்தது அந்த மரம். அதன் கிளையில் நின்றிருந்த கிளியின் வார்த்தைகள் அவை. ஒருநாளுக்கு பலமுறை இந்தபெயர்களை உச்சரிக்கும் அந்த கிளி. கிளியின் வாய்மொழியாக தங்கள் பெயரைக்கேட்பதில் அவளுக்கு அவ்வளுவு ஆசை. கேட்டுக்கேட்டு மகிழ்வாள். வீரனின் காதல் பரிசாய்க் கிடைத்த கிளிதான் இன்றுவரை தமிழுக்கு துணையாய் இருக்கும் ஒரே ஜீவன். தன்னவனை நினைவுபடுத்தும் எதையும் காதல்கொண்டமனம் இழக்கவிரும்பாதே! அவனின் காதல் பரிசுகளான பாதசரம், வளையல் உயிருள்ள இந்த கிளி எல்லாம் அவளிடம் பாதுகாப்பாய் இருக்கின்றன. கொடுத்த பொருட்கள் இருக்கின்றன. ஆனால் கொடுத்தவன்.. ? “ நாளை வருவான் என் தலைவன்” என்ற நம்பிக்கையில் உள்ளான்.

This is entry #105 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – காதல்

எழுத்தாளர் - நித்யா பத்மநாதன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.