(Reading time: 40 - 80 minutes)

ண்பன் துரோகியாகிவட்டான் என்பதை தவிர நடந்தவை நடப்பவை அனைத்தும் வீரனுக்கு குழப்பமாகவே இருந்தது. சேகர் ஏன் துரோகியானான் ? தமிழின் குடும்பத்துடன் எப்போதும் பகைமை பாராட்டும் யாழினியின் அண்ணன்கள் இன்று அவர்களுடன் இங்கு என்ன செய்கிறார்கள்? எல்லாவற்றிற்குமேலாக யாழினியின் மரணம்.. ? ஒன்றுக்கொன்று எங்கோ தொடர்பு படுவதுNபால இருந்தாலும் சரியாக புரியவில்லை வீரனுக்கு. சுற்றி இருப்பவர்கள் யாழினியின் உறவுகளும் வீரனின் எதிரிகளும் .அங்கு வீரனின் விளக்கம் எடுபட்டால்தான் ஆச்சரியம். தன் பக்க நியாயத்தை எப்படிகூறுவது என வீரன் சிந்தித்துகொண்டிருக்க அவனை சிந்திக்கவிட்டால் ஆபத்து தங்களுக்கே என புரிய வீரனை தாக்க தமிழின் அண்ணன்கள் பாய்ந்தனர்.

காயத்திலிருந்து இரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. வலியைப்பொறுத்தாகவேண்டிய கட்டாயம். முடிந்தவரை போராடினான். வீரன் தனி ஒருவன் அவர்கள் பலர். தனியாளாக எதுவரை போராட முடியுமோ போராடினான். முடியாமல் போகவும் அங்கிருந்து ஓடினான். அவன் உயிருடன் ஊர் போய் சேர்ந்தால்தான் தன்னுள் இருக்கும் பல கேள்விகளுக்குவிடை கிடைக்கும். தமிழைப் பற்றியும்  அறிய வேண்டும். அவளைக் கண்டு நடந்தவைகளைக் கூறவேண்டும். அவள் நம்புவாளா என்ற கேள்வி எழவில்லை வீரனுக்குள். அவள் அன்பு கேள்விகளுக்கப்பாற்பட்டது என வீரனுக்கு நன்கு தெரியும். தன் பின்னால் ஆபத்து துரத்துகிறது என வீரனுக்கு தெரியும் .அவர்களிடமிருந்து தப்பிப்பதாக எண்ணி காட்டின் வேறுஒருபக்கம் போய் மறைந்துவிட்டான் வீரன். இருட்டிலே ஓடியவன் ஏதோ ஒன்றில் மோதி மீண்டும் ஒருபள்ளம் நோக்கி சரிந்தான். வேறு ஊரில் அட்டகாசம் புரிந்த காட்டுயானைகள் சிலவற்றை பிடித்து சில தினங்களுக்கு முன்புதான் இந்த வனப்பகுதியில் கொண்டுவந்து விட்டருந்தார்கள். இப்போது வீரன் மோதியதும் யானைமேல்தான். மதம் கொண்டிருந்த யானை பிளிற ஆரம்பித்தது. வீரனைத்துரத்தி வந்தவர்கள் வீரன் சென்ற திசையிலேயே அவனைத்தேடிச் செல்ல அவர்கள் காதில் யானையின் பிளிறல் கேட்டது. பயத்திலேயே அவர்கள் காட்டைவிட்டு விரைவாக வெளியேறிவிட்டார்கள். யானையின் பிளிறல் சத்தத்திற்கு பயந்து அவற்றை பயம்காட்டுவதாக எண்ணி கையிலிருந்த தீ பந்தத்தை எறிந்துவிட காய்ந்திருந்த சருகுகளின் மீது அது விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ காட்டு மூங்கில்களில் பற்றிப்பரவ ஆரம்பித்தது. வீரன் உயிருடன் இருந்தாலும் யானைகள் அல்லது காட்டுத்தீ இரண்டில் எதோ ஒன்றில் வீரன் சிக்கி இறந்துவிடுவான் என நம்பினார்கள்.

ருக்குள்..

வீரன் இறந்துவிட்டான் என்பதை தமிடிhல் நம்பமுயெவில்லை. தன் காதலுக்கு அவ்வளவுதான் ஆயுளா? வந்த எண்ணம் வந்த வேகத்திலேயே மறைந்துவிட வீரன் உயிருடன் வருவான் என நம்ப தொடங்கினாள். அவன் பெயரை மட்டுமே திரும்ப திரும்ப உருபோட்டுக்கொண்டிருந்தாள். அவன் வருவான் வரவேண்டும்.. கால்போனபோக்கில் நடந்தபடி நடந்தவைகளை நியாபகத்ததிற்கு கொண்டுவந்து தன் கேள்விகளுக்கு விடைத்தேடிப்பார்த்தாள்.

அன்று கோவிலிலிருந்து தமிழை இழுத்துக் கொண்டுவந்த அவள் அண்ணன் எதுவும் சொல்லாமலேயே அவளை வீட்டுச் சிறையில் வைத்தான். காரணம் கேட்டும் யாரும் சொல்லவில்லை. தன்னை வெளியே விடும்படி கேட்டு அடம்பிடித்து கடந்த இருநாட்களாக பட்டினி கிடந்தாள். நேற்று இரவு குடிபோதையிலிருந்த அவள் அண்ணனொருவன் தந்தையிடம் தன் வீரதீரச் செயலைப்பற்றி பெருமையாக பேசி மகிழ்ந்துகொண்டிருக்கும்போதே தமிழ் எல்லாவற்றையும் கேட்டிருந்தாள். ஆத்திரம் ஒருபக்கம் அதிர்ச்சி மறுபக்கம். இரண்டையும்விட வீரனையும் யாழினியையும் காப்பாற்றவேண்டுமே என்ற அவசரம்வேறு. வீட்டிலிருந்து வெளியேறத் துடித்தவளுக்கு முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டுநாட்களாக பட்டினிபோரட்டம் நடத்தியவள் பசிமயக்கத்தில் தன் அறையிலேயே சரிந்தாள்.

குடும்பம் என்றவிடயத்தில் ஒருவகையில் யாழினி கொடுத்துவைத்தவள் அவளுக்காக துடிக்கும் அண்ணன்கள் உறவுகள். தமிழுக்கோ அந்த கொடுப்பனை இல்லை. தமிழின் அண்ணன்கள் மற்றும் தந்தையைப் பொறுத்தவரை அவள் தங்கள் குடும்பத்திற்கான வெறும் அடையாளம். அவள் அந்த வீட்டிலிருக்கும்வரைதான் அவர்களால் சுகபோகமாக வாழமுடியும். தாய்வழி சொத்து என்பதால் குடும்பத்தின் ஒரே பெண்பிள்ளையான தமிழுக்குதான் சொத்தின் பெரும்பங்கு. மீதி உள்ளவைதான் அவள் அண்ணன்கள் மூவருக்கும். தாயின் நினைவாக உள்ளதை தாய் தனக்கென்று கொடுத்ததை அண்ணன்களிடம் கொடுத்துவிட அவள் விரும்பவில்லை. காரணம் மண், பொன் மீது கொண்ட ஆசை அல்ல . அது அவள் உரிமை. அதை விட்டுவிட அவள் விரும்பவில்லை. அவளுடையதை அவளிடம்விட்டுவிட அவள் அண்ணன்களும் தந்தையும் விரும்பவில்லை. இது ஊர் அறிந்த கதை. தமிழுக்கொரு பிரச்சனை என்றால் ஊரில் பலரும் பலவிதமான கேள்விகேட்டு குடைவார்கள். புதிதாக வீரனுடன் அவள் காதல். தமிழ் மீது அன்பைமட்டுமே காட்டும் அவன் அவளுக்கு அநீதி என்றால் வேடிக்கை பார்க்கமாட்டான். ஆக தமிழை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சுயநலம் எடுத்துவந்த மனித உருவங்கள் தமிழின் குடும்ப அங்கத்தவர்கள். அவர்கள் கொண்ட பேராசையின் விளைவு இத்தனை பிரச்சனைகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.