(Reading time: 40 - 80 minutes)

விதிக்கு வீரன் மீதிருந்த மிச்சசொற்ற கருணை தன் கடைபார்வையைக்காட்டி தன் கடமையை முடித்துகொள்ள எண்ணியிருக்கவேண்டும் அதனால்தான் யாழினியின் ஒரு அண்ணன் கையில் மட்டுமேஅரிவாள் இருந்தது. மற்றவர்கள் கையில் தீபந்தங்களும் இடுப்பில் சொருகியிருந்த சின்ன சின்ன கத்திகளுமே இருந்தன. பள்ளத்தில் விழுந்துகிடந்த தன் சகோதரனை கைதூக்கிவிட யாழினியின் அடுத்த அண்ணன் பள்ளத்தில் பாய அவனைப்பிடித்து விழுந்துகிடந்தவன்மேல் தள்ளிவிட்டு அவர்கள்மேல் கால்வைத்து ஏறி பள்ளத்தைவிட்டு வெளியே வந்துவிட்டான் வீரன். வீரன் அறத்தை மட்டுமே நம்புவன் அவன் ஆயதம் ஏந்துவான் தங்களை எதிர்ப்பான் என தமிழின் அண்ணன்கள் எண்ணியிருக்கவில்லை. தவிரவும் தாங்கள் ஒன்பது பத்துப்பேர் அவன் ஒருவன். என்ன செய்துவிடமுடியும் என்ற எண்ணம்.

ஆயுதத்தின்துணையோடுதான் தன்பக்க நியாயத்தை கூறவேண்டிய சூழ்நிலை வீரனுக்கு. அன்று கோவிலில் தான் அவ்வளவு கெஞ்சியும் யாரும் தன் நியாயத்தை கேட்காமல்போனதால் இன்று அரிவாள் கொண்டு மிரட்டியாவது நடந்தவைகளைக்கூற நினைத்தான். நீண்டநேரமாக வீடுதிரும்பாத சேகரைத்தேடி வந்திலிருந்து இப்போது ஆட்கள்கூடி நிற்க தான் குற்றவாளிபோல் நிற்பதுவரை அனைத்தையும் கூறினான். அவன் கூறினான் ஆனால் அவன் கூறியதை நம்பத்தான் ஆட்களில்லாமல் போனது. நண்பன் மட்டுமாவது தன்னை நம்புவான் துணைநிற்பான் என பார்த்திருக்க அவன் காத்திருப்பை பொய்யாக்க காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி.

காலையிலேயே வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சேகர் எங்கோ சென்றுவிட மாலைவரை வீடுதிரும்பாத மகனை தேட அவனின் தாய் வீரனின் உதவியை நாடினார். அதன் தொடர்ச்சிதான் இப்போது வீரன் நடுக்காட்டிலே அரிவாள் ஏந்தி நிற்பதுவரை நடந்தவை அனைத்தும். ஆனால் வீரன் கைக்கு அரிவாள் போகும் அந்த நொடிக்கு முன்வரை நடந்தவைகள் அனைத்தும் வீரனை சிக்க வைக்க நடந்த சூழ்ச்சி. இவை அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த உதவியவன் வீரனின் நண்பன்.

அடுத்தவர்கள் வாய்திறக்கும்முன் முந்திக் கொண்டுபேசினான் சேகர். காலையிலேயே தான் பக்கத்துஊருக்கு சென்றுவிட்டதாகவும் மாலை ஊர்திரும்பியதும் காணமல்போன யாழினியை கண்டுபிடிக்க அவள் அண்ணன்களுக்கு உதவிசெய்யவே ஊரவர்களுடன் தானும் இணைந்து கொண்டு இப்போது இங்கு வந்தாக கூறினான். கூடவே யாழினி வீரனின் காதலி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொள்ளவதாகவும் இன்று அவர்களிருவரும் இங்கு சந்திக்கவிருப்பது தனக்கு தெரியும் என்றும் வரிசையாய் பொய்களை அடுக்கினான். அவன் கூறியபொய்கள் வீரனுக்கு அதிர்ச்சியென்றால் யாழினியின் அண்ணன்களுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பை இன்னுமாய் கூட்டியது. சேகர் வாய்முந்தியது வாங்கிய காசுக்கு விசுவாசமாய்இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமல்ல தன்னைக்காத்துகொள்ளவும்தான்.

காலையிலேயே வீட்டிலிருந்து சொல்லிக்கோள்ளாமல் கிளம்பியவன் ஆங்காங்கே சுற்றிவிட்டு யாழினியின் ஊருக்கு சென்றான். யாழினி வீட்டைவிட்டு வெளியேறும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வெளியே வந்ததும் ஏதேதோ பேசி ஏமாற்றி காடுவரை கூட்டிவந்துவிட்டான். தன்னை நீண்ட நேரம் காணாவிட்டால் தன்தாய் நிச்சயம் வீரனின் உதவியை நாடுவார். அவன் தன்னைத்தேடிக் கொண்டு வழக்கமாய் தான் இருக்குமிடம் என எதிர்பார்த்து இங்கு வருவான் அப்போது அவனை சிக்கவைக்கலாம் என திட்டம் தீட்டியிருந்தான். இந்த திட்டத்திற்கு வலுசேர்க்கதான் முன்தினம் வீரனையும் குடிகாரனாய் காட்சிப்படுத்திய சதி. வீரனின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டால் யாழினியின் கொலையின்போது அடுத்தவரை நம்பவைக்க இலகுவாய் இருக்குமே..

துரோகத்தின் வலி எப்படி இருக்கும் என்பதை முதன் முதலாக அப்போதுதான் உணர்ந்தான் வீரன். ஆனால் அன்று கோவிலிலேயே சேகருக்குள் ஒளிந்திருந்த துரோகி வெளிவந்துவிட்டான் என்பதை அங்கு நின்றிருந்த தமிழின் அண்ணன்கள் அறிந்திருந்தார்கள். வெளிக்கொணர்ந்ததே அவர்கள்தானே! தமிழைப்பின் தொடர்ந்த கண்கள் அவளின் அண்களிடம் காசுக்கு விலைபோயிருந்த சேகருடையது. தமிழ் வீரனை இருவரும் கோவிலின் பின்புறம் செல்வதைக் கண்டதும் தமிழின் அண்ணன்களிடம் போட்டுக்கொடுக்க நினைக்க தமிழைத்தேடி யாழினி வருவதைக்காணவும் தமிழின் அண்ணன்களுடன் இணைந்து சதி செய்துவிட்டான். வீரனை எதிலாவது சிக்க வைக்க காத்திருந்தவன் இருட்டில் தனியாக நின்றிருந்த தமழிடம் பக்குவமாய் பேசி ஏமாற்றி கோவிலின் உள் அனுப்பிவைத்துவிட்டான். யாழினி இருட்டிலே தனியாக வீரனுடன் நிற்பதை அவள் அண்ணன் கண்டாலே கொதித்தெழுவான் இருவருக்கும் சண்டை வரும் அதை வைத்தே வீரனை அழித்துவிடலாம் என்பதே திட்டம். வீரன் யாழினியின் கையைப்பிடித்தது அவள் கண்ணீரோடு நின்றது எல்லாம் திட்டத்தில் இல்லை ஆனாலும் நடந்தவைகள் கயவர்களுக்கு சாதகமாய் அமைந்துவிட்டன. செயற்படுத்துவது மட்டும்தான் சேகரின் வேலை திட்டம் போடுவது தமிழின் அண்ணன்கள்.

காட்டுக்குள் செல்ல பிறர் அறியாத இன்னுமோரு வழி சேகர் அறிந்துவைத்திருந்தான். சரியாக சொல்வதானால் அதை அவன் உருவாக்கி வைத்திருந்தான். காட்டின் ஒருபுறம் சில அரியவகைச் செடிகள் இருந்தன. அவற்றின் வாசம் மற்ற செடிகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அவை மூலிகை செடிகள். அவற்றை பிடுங்கி வெளியிடங்களில் திருட்டுத்தனமாய் விற்பது சேகரின் வேலை. சாதாரண பற்றைகள் போலகாட்சியளிப்பதனால் பெரிதாக அவற்றை யாரும் கவனிப்பதில்லை. இந்தமூலிகைச்செடிகளைப் பற்றி எப்படி அறிந்தவன் அதை திருட்டுத்தனமாக விற்பனை செய்தான். இந்த திருட்டில் தமழின் அண்ணன்களும் கூட்டாளிகள். தங்களின் இதை வீரன் அறிந்தால் நிச்சயம் இதற்கும் பிரச்சனை செய்வான். அவன் அறயும் முன்னே அவனை அழித்தாக வேண்டும். அவன் இருப்பு அவர்களுக்குதான் பிரச்சனை. வீரனால் தனக்கும் பிரச்சனை வரக்கூடும் தன் வருமானம் பாதிக்கபடும். பிரச்சனையைத்தீர்க்க தாங்கள் திருந்துவதைக்காட்டிலும் வீரனை அழிப்பதை நல்லமுடிவாக நினைத்துவிட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.