(Reading time: 5 - 9 minutes)

2017 போட்டி சிறுகதை 115 - என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க - எஸ். ஜெயசுதா மனோஜ்குமார்

This is entry #115 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - எஸ். ஜெயசுதா மனோஜ்குமார்

Kabaddi

ழகான காலைப்பொழுது. சேவல் கூவியவுடன் மிவும் பரபரப்பாக வேகமாக படுக்கையை விட்டு எழுந்தாள் பொன்னம்மாள். உடனே தனது மகளை ஏலே வடிவு எழுந்திருடி. விடிந்து விட்டது பார். இப்போ எழுந்தா தான் நீ ராக்காயி அக்கா வீட்;டிற்கு போய் வேலை செய்ய சரியா இருக்கும். ராக்காயி அக்கா வீட்டுல பசங்களுக்கு இன்னைக்கு ஸ்கூல் உண்டு. சீக்கிரம் போடி என்று விரட்டினாள். வடிவு பொன்னம்மாளின் ஒரே மகள். பொன்னம்மாளின் கணவன் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் ஊரை விட்டு ஓடியவன் தான். இன்னும் வரவில்லை. பொன்னம்மாவிற்கு தன் கணவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா என்று கூட தெரியாது.

பிறகு பொன்னம்மாள் பச்சைக்குழந்தையை வளர்ப்பதற்காக வீட்டு வேலை செய்ய தொடங்கினாள். வடிவும் வளர்ந்து பத்தாம் வகுப்பை எட்டியிருந்தாள். வடிவு காலையில் அம்மாவுக்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளை செய்து விட்டு பள்ளிக்குச் செல்வாள். வடிவு படிப்பில் படு சுட்டி. படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் முதல் மாணவி வடிவுதான். அந்த ஊரில் உள்ள ஆசிரியை ஒருவர் வடிவை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அன்றும் வழக்கம்போல வடிவு வீட்டு வேலையை செய்துவிட்டு பள்ளிக்கு சென்றாள். அவள் வகுப்பிற்கு சென்றவுடன் அனைத்து மாணவிகளும் எழுந்து கைத்தட்டினர். வடிவு ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த வகுப்பாசிரியர் வடிவு கையில் ஒரு பூச்செண்டை கொடுத்து வாழ்த்துக்கள் வடிவு. சென்ற மாதம் அனைத்து பள்ளி சார்பாக கபடி போட்டி சென்னையில் நடந்ததல்லவா. அதில் உன் அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்ததாக நாம் மாநில அளவில் டெல்லி சென்று விளையாட இருக்கிறோம். உன்னை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் நம் பள்ளிக்கு வருகின்றனர். தயாராக இரு என்று கூறினார். உடனே மிகவும் மகிழ்ச்சியாக ஒரு நிமிசம் டீச்சர். நான் எங்க வீட்டுக்கு போய் எங்க அம்மாவ கூப்பிட்டு வர்றேன். அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டிற்கு சென்று அவளின் அம்மாவை கூப்பிட்டு வந்தாள்.

அதற்குள் பள்ளிக்கு பத்திரிக்கையாளர் வந்திருந்தனர். எப்பொழுதும் கேட்கும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது வடிவு எல்லோரும் நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுங்க. இதோ நிக்கிறாங்களே இவங்க தான் எங்க அம்மா. நான் பொம்பளை பிள்ளையா பிறந்தவுடன் என்னை எங்க அப்பா பார்க்க கூட வர்ராம ஓடிப்போயிட்டாரு. எங்க அம்மாதான் என்னை வீட்டு வேலை செய்து படிக்க வைக்கிறாங்க. அதோட எங்க ஆசிரியையும் என்னை பணம் கொடுத்து படிக்க வைக்கிறாங்க. நான் முதல்ல எங்க அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும். எங்க அம்மாவையும் என்னையும் பெரிசா படம்பிடிச்சு பேப்பர்ல போடுங்க. அப்பதான் எங்கியோ இருக்கிற எங்க அப்பாவுக்கு அறிவு வரும். அனைவருக்கும் மிகவும் நன்றி என்று கூறிவிட்டு அழுதுக்கொண்டே வகுப்பறைக்குள் சென்று விட்டாள். 

டுத்தநாள் காலையில் அனைத்து நாளிதழ்களிலும் வடிவு மற்றும் அவளின் அம்மாவின் படம் பெரிதாக போடப்பட்டிருந்தது. வடிவின் அம்மாவுக்கு பெருமை தாளவில்லை. அன்று மாலை பொன்னம்மாள் வீட்டு வேலைசெய்துக்கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு அம்புஜம் காதில் ஏதோ கூறிவிட்டு சென்றாள். உடனே பொன்னம்மாள் வேகமாக வீட்டிற்கு சென்றாள். அங்கே நின்றுக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல. இத்தனை நாள் வராமல் இருந்த பொன்னம்மாளின் கணவன் நின்றுக்கொண்டிருந்தான். பொன்னம்மா நல்லாயிருக்கியா? என்று கேட்டான். அதற்கு பொன்னம்மா ஏன்யா இப்படி செய்திட்ட என்று கேட்டாள்.

என்னை மன்னிச்சிரு பொன்னம்மா. எந்த பொம்பள புள்ளைய நான் வெறுத்து ஊரை விட்டு ஓடினேனோ அந்த பொம்பள புள்ளையும் உன்னையும் பத்தி பேப்பர்ல நேற்று பார்த்தேன் கூனி குறுகிட்டேன். என்னை மன்னிச்சிரு பொன்னம்மா?

முதல்ல வெளியே போங்க என்று கூறிக்கொண்டே வடிவு வீட்டின் உள்ளே வந்துக்கொண்டிருந்தாள். பிறகு இத்தனை நாள் இல்லாம இப்போ தான் மனைவி குழந்தை-ன்னு பாசம் வந்திச்சா. சே. என்ன கேவலமான பிறவி நீங்க. எங்க அம்மா எவ்வுளவு பாடுபட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காங்க தெரியுமா? உங்களுக்கு வெக்கமா இல்லை? எந்த முகத்தை வைச்சிகிட்டு வந்தீங்க.

இந்த பாவப்பட்ட அப்பாவை அப்படி சொல்லாதம்மா. என்னை மன்னிச்சிரும்மா.

சே. உங்களை மன்னிக்கிறதா? என் வாழ்க்கையில அப்படி ஒரு தப்பை நான் செய்யவே மாட்டேன். உங்களை உங்க அம்மா ஒருத்தருக்கு பெற்றிருந்தால் இனிமே இங்க வராதீங்க என்று கூறிவிட்டு சற்று தூரம் சென்று திரும்பி பார்த்து

“என் மூஞ்சியிலேயே ழுழிக்காதீங்க….” என்றாள் அவள்.

This is entry #115 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - எஸ். ஜெயசுதா மனோஜ்குமார்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.