(Reading time: 5 - 10 minutes)

2017 போட்டி சிறுகதை 134 - மாய நதி.. - ப்ரதீபா

This is entry #134 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க / முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ப்ரதீபா

Couple

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

‘என்ன அவசரம் இப்போ என் கல்யாணத்துக்கு..!? அவங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நான் என்ன பொம்மையா.? அக்கா கடுதாசி எழுதி வெச்சிட்டு போய்டா...! இங்க நான் பலி ஆடா ஆகிட்டேன்...!!

என் ஆசை, கனவு எல்லாமே மனசோட நின்னுபோச்சு.. ஆத்தா.. மாரியாத்தா..

அதுலாம் கூட  பொறுத்துக்கலாம்... ஆனா அக்கா கல்யாணம் முடிஞ்சவுடனே எங்க தலைவரோட ‘தளபதி’ படத்துக்கு அப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி போகணும்னு நெனச்சேனே..  இங்க என்னையவே கல்யாண பொண்ணா உட்கார வச்சிட்டாங்களே.. இனிமே எப்படி போவேன்’னு  வாய்விட்டு புலம்பிட்டேன். அதுவும் எப்போ.. தாலி கட்றதுக்கு கொஞ்ச நிமிஷம் முன்னாடி. உங்க மாமா வேற டெரரா முகத்த வெச்சிட்டு உட்காந்து இருந்தார். உள்ளுக்குள்ள பயத்தோட லேசா திரும்பி பார்த்தா, சின்னதா.. ரொம்பவே சின்னதா சிரிச்ச மாதிரி இருந்துது.. எனக்கு தான் அப்படி தோணுதுனு நெனச்சி விட்டுட்டேன்..” என்று கண்களில் வெட்கக் கனவுடன் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டார் வசுந்தரா.

“அப்புறம் என்னம்மா ஆச்சு.. சிக்கரம் சொல்லுங்க.. ரிசெப்ஷனுக்கு நேரம் ஆச்சு.. ஹால்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க..”என்று ஆர்வத்துடன் பரபரத்தாள் அவரின் செல்ல மகள், ரஜினி.

“இரேன் மா... என்ன அவசரம் உனக்கு.. ரிசெப்ஷனுக்கு இன்னும் நேரம் இருக்கு.. அத்தைய டிஸ்டர்ப் பண்ணாத..”என்று பரிந்து வந்தான் ரஜினியின் புத்தம் புது கணவன் ப்ரிஹத்(brihath).

ஆம். நேற்று திருமணம் முடிந்த ரஜினி & ப்ரிஹத் தம்பதியினருக்கு இன்று பிள்ளை வீட்டில் நடத்தும் வரவேற்பு. ‘வெளியில் சென்று வருகிறோம்’ என்று மதியம் கூறிவிட்டு சென்ற ரஜினியின் தாய் தந்தை, வரவேற்பு தொடங்கும் சமயத்தில் தான் வந்ததில் அவர்களின் மகளுக்கு கோபம். அவளுக்கு தெரியாத என்ன அவர்கள் எங்கு சென்று வந்தார்கள் என்று.. இருந்தாலும் அவரின் வாய்மொழியாக கேட்க ஆசை. மாப்பிளைக்கும் தெரிய வேண்டும் அல்லவா அவர்களின் அன்பு.

கோபத்தில் கத்தத் தொடங்கிய ரஜினியை அவளின் கணவன் சமாதானப்படுத்த, இங்கு அவளின் தாயோ மாப்பிளைக்கு விளக்குகிறேன் என்றுவிட்டு தனது கடந்த கால நினைவலைக்குள் சென்றுவிட்டார்.

பிரஹத் ரஜினியை அடக்கிக்கொண்டு இருக்க, வசுந்தராவின் கணவர் கண்ணனோ, அவரை உலுக்கி நிகழ் காலத்துக்குள் கொண்டு வந்தார். இருவரின் மனமும் ஒரே நினைவுகளில் சுழண்டுகொண்டு இருக்க, சூழ்நிலை கருதி மனதை அடக்கினர். பிரியமான பார்வை பரிமாற்றத்துக்கு பிறகு மகளை கவனித்தால், அவளோ முறைத்துக்கொண்டு இருந்தாள், இவர்களை.

“நீங்க சொல்லுங்க மாமா...”என்று பிரஹத் கூற, கண்ணனோ “இல்ல பிரஹத். உங்க அத்தை சொன்னாதான் நல்லா இருக்கும்”என்று கூறி தனது மகளின் முறைப்பிலிருந்து தப்பித்தார்.

“நானே சொல்றேன் மாப்பிள்ளை.. கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நேரத்துல ‘வெளில போகணும், சிக்கரம்வா’னு சொல்லிட்டு இவர் பாட்டுக்கு வாசலுக்கு போய்ட்டாரு.. அந்த காலத்துல எல்லாம் மண்டபத்துல கல்யாணம் ரொம்ப பண்ண மாட்டாங்க. அவங்க அவங்க வீடே மண்டபம் மதிரிதான் இருக்கும்.. எங்க கல்யாணம் கூட வீட்ல தான் நடந்துது.  எங்க வீடு முழுக்க சொந்த பந்தம்.. நான் என்னன்னு சொல்லிடு வெளில போறது.. கடைசில ஏதேதோ சொல்லி மழுப்பி வெளிய போனா, சைக்கிளோட இவர் நிக்கராறு..”

“செம்ம மாமா.. அப்படி எங்க தான் கூட்டிட்டு போனீங்க அத்தைய.. அதுவும் கல்யாணமான உடனே..”என்று வினவிய பிரஹத்திற்கு பதில் கிடைத்தது அவனின் மனைவியிடமிருந்து.

“வேற எங்க.. அவங்க தலைவர் படத்துக்கு தான்..” என்றாள் அலுப்புடன்.

“வாவ்... என்ன அத்தை.. வில்லனா நெனச்சு நீங்க கல்யாணம் பண்ணிகிட்ட மாமா, உடனேயே ஹீரோ ஆகிட்டாரு போல.. கை குடுங்க மாமா.. செம ஸ்மார்ட் மாமா நீங்க.. தயை கூர்ந்து என்னை தங்களது சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்”என்று கூறி குனிந்த பிரஹத்தின் முதுகில்  பட்டென்று ஒன்று வைத்தாள், அவனின் சஹாதர்மினி.

“ஹோ மை மாதா...”என்று அலறிய பிரஹத்திருக்கு “யார்கிட்ட ட்ரைனிங் எடுத்தாலும் சரி.. உன் பருப்பு வேகாது டார்லிங்” என்று பதில் அளித்தாள்.

“ஆமாம் பிரஹத்.. அவ்வளவு பெரிய சங்கடமான சூழ்நிலைலயும் தனக்கு நடந்தத நெனச்சு கவலை படாம, தலைவர் படம் பார்க்க முடியலன்னு வருத்தப்பட்ட இந்த உன்னத ஜீவனுக்காக எதையும் செய்யலாம்னு தோணிச்சு. அதான்”என்று கூறி தனது மனைவியை பார்த்து கண் அடித்தார், கண்ணன்.

“அதுமட்டும் இல்லை மாப்பிள்ளை.. அவருக்கும் தலைவரோட படம்லாம் முதல் நாளே பர்த்துடனும். அவர் மட்டும் போக நெனச்ச படத்துக்கு, என்னையும் கூட்டிட்டு போனாரு. அவ்வளவுதான்.” என்றார் வசுந்தரா.

“ஒஹோ.. அப்போ இன்னிக்கு கூட நீங்க காபாலி படம் முதல் நாள் ஷோக்கு தான் போயிட்டு வரீங்களா....!!! அத்தை.. மாமா... ஜக ஜாலக் கில்லாடி தான் நீங்க ரெண்டு பெரும். கலக்குங்க..” என்று கை குலுக்கினான் அவர்கள் இருவரிடமும். குலுக்கிய கைகளை பிரித்து விட்டாள் நமது ரஜினி.

“ஆனா அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் போவாங்க.. என்னை கூட்டிட்டு போனதே இல்ல... வேறொரு நாள்தான் போவோம்.. கேட்டா கூட்டம் நெரிசல்னு பதில் கிடைக்கும்” என்று குறைபட்டுக்கொண்டாள்.

“இப்போ புரியுது அத்தை.. ரஜினி படத்தால ஒன்னு சேர்ந்த நீங்க, உங்க பொண்ணுக்கும் ‘ரஜினி’னு பேர் வெச்சதோட வரலாறு... ஆனா இந்த மேடமோ, ரஜினின்னா ‘நிலவு’ன்னு அர்த்தம்னு சீன் போட்டாங்க... ஹா ஹா ஹா....” என்று பிரஹத் கைக்கொட்டி சிரிக்க... ரஜினி அவனை துரத்த.. அப்படியே பால்கனிக்கு ஓடிவிட்டார்கள் இருவரும்.

திரும்பிவந்தவனிடம் என்னவாயிற்று என்று வினவ, “என்னை வெச்சு செஞ்சிட்டா அத்தை உங்க பொண்ணு.. எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

This is entry #134 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க / முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ப்ரதீபா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.