(Reading time: 6 - 12 minutes)

2017 போட்டி சிறுகதை 133 - கணவன் என்ற சொல்லுக்கு... - ஜெய்

This is entry #133 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ஜெய்

Men

யாருங்க அது கல்யாணம்லாம் சொர்கத்துல நிச்சயக்கப்படுதுன்னு சொன்ன புண்ணியவான்.... அவனை கூட்டிட்டு வாங்க நாலு கேள்வி நல்லா அவனைப் பார்த்து கேக்கணும்... சொர்கத்துல நிச்சயக்கப்படற திருமணம் மறு நாள்லேர்ந்து ஏன் இப்படி நரகத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுதுன்னு.....

அது எப்படித்தான் கல்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும் தேவதைகளா இருந்த பொண்ணுங்க, மறுநாள்ளேர்ந்து ராட்சசியா மாறுராங்களோ.  அப்படியே கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோ மாதிரி சுத்தற நம்மளை ஒரே நாள்ல ஜீரோவா மாத்திடறாங்களோ....

அதுவும் என்னவோ கணவன் போஸ்டிங்க்கு வந்துட்டாலே அவங்க எலி பிடிக்கற  வேலைலேர்ந்து ஏரோப்ளேன் ஓட்டற வேலை வரைக்கும் தெரியுமோ தெரியாதோ பார்த்தே ஆகணுங்கற நிலைமை.... அப்படி இல்லைன்னா என்னதான் வளர்த்தாங்களோ உங்கம்மா அப்படின்ற டயலாக் வரும்....

அப்பறம் இந்த பெண்ணியவாதிங்க பேசறது இருக்குப் பாருங்க அதைத்தான் தாங்க முடியலை... கணவர்கள்லாம் காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் குறட்டை விட்டு தூங்கறா மாதிரியும் இந்தப் பெண்கள் மட்டும் தூங்கி எந்திரச்சதுலேர்ந்து திரும்பத் தூங்கற வரை ஒரு நொடிக் கூட உக்காராத மாதிரியும்  பொங்கலோ பொங்கல்ன்னு பொங்கி எழறது என்ன நியாயம்ங்க.. ஆண்களுக்காக அப்படி ஒரு அமைப்பு இல்லாததால எங்களுக்காக பொங்கல் வைக்க  யாரும் இல்லாமப் போச்சு.... அதுதான் நானே நேரடியா வந்து உங்கக்கிட்ட புலம்பறேன்....

காலைல எந்திருச்சு பேப்பரை கையில எடுப்போம்.... அதுல ஒரு வரி கூட படிச்சு இருக்கமாட்டோம்... அதுக்குள்ள கிட்சன்ல இருந்து குரல் வந்துடும்.... ஏங்க இந்த டப்பா மூடித் திறக்க மாட்டேங்குது, அதைத் தொறந்து குடுங்களேன்.... இந்த ரெண்டு வெங்காயம் மட்டும் கொஞ்சம் கட் பண்ணிக் கொடுத்துடுங்களேன்.... குழந்தையை எழுப்பி பல் தேய்க்க வச்சுடுங்களேன்.... இப்படி வரிசையா வேலையா வரும்... இதுல எங்க இருந்து பேப்பர் படிக்க... ஓபன் பண்ணினத அப்படியே மூட வேண்டியதுதான்...

சரி இதெல்லாம் முடிச்சு நாம குளிச்சு பொழப்ப பாக்க போகலாம்ன்னு கிளம்பறப்போதான் மறுபடி voice message வரும்... ஏங்க அப்படியே குட்டிய குளிக்க வச்சுடுங்கன்னு....

இந்தக் சின்னக் குட்டிக்கு கூட தெரியும் போல நாம ஒண்ணும் அவ்ளோ வொர்த்தான பீஸ் இல்லைன்னு, அவங்க அம்மாக்கிட்ட குளிக்கும்போது மட்டும் அடம் பண்ணாம அமைதியா குளிக்கற குட்டி நம்மக்கண்டா மட்டும் சுனாமி வந்தாப்ல சுத்தி சுத்தி குளிக்குது... அதைக் குளிப்பாட்டி முடிக்கறதுக்குள்ள நாம தலைலேர்ந்து கால் வரைக்கும் நனைஞ்சுடறோம்... அப்பறம் எதுக்கு தனியா வேற குளிச்சுட்டு தண்ணி வேஸ்ட் பண்ணனும்ன்னு அப்படியே ஆபீஸ் கிளம்ப வேண்டியதுதான்...

இதெல்லாம் முடிஞ்சு தமிழனின் தேசிய உணவான பாறாங்கல்லை(அதுக்கு பேரு இட்லியாமாம்), உள்ளத் தள்ளிட்டு ஆபீஸ்க்கு போனா என்னவோ காலைல ஆபீஸ்க்கு, சாயங்காலம் வந்தா மாதிரி நம்ம மேலதிகாரிங்க பார்ப்பாங்க பாருங்க..... கல்யாணம் ஆனாலே மொத்த பக்கமும் மொத்து விழும் போல.... ஆவ்வ்வ்வ்

அடுத்து இந்தக் கல்யாணம் ஆன ஹஸ்பன்டுக்கெல்லாம் அவங்க கேக்காமயே வர்ற போஸ்ட் பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடென்ட்.... நீங்க ஏதோ கிராமத்துக்கு போலன்னு நினைச்சுடாதீங்க.... எல்லாம் வீட்டுக்குள்ள மட்டும்தான்... அம்மாவும், பொண்டாட்டியும் நம்மளை பஞ்சாயத்துத் தலைவர்ங்கற பேருல football ஆக்கி விளையாடுவாங்க பாருங்க.... என்ன இருந்தாலும் உங்களுக்கு எங்க வீடுன்னா தொக்குதான்னு பொண்டாட்டி சொல்லுவா.... உனக்கு நம்ம வீட்டு ஆளுங்களை எப்போ கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குன்னு அம்மா சொல்லுவாங்க... இதையெல்லாம் கேட்டா கடைசியா இந்தப் பக்கமும் இல்லாம அந்தப் பக்கமும் இல்லாம நாம ஏதானும் ஏலியன் பரம்பரைல வந்துட்டோமோன்னு ஒரு டவுட்டு வந்துடும்....

அடுத்தது பட்ஜெட் தாக்கல்.... நம்ம finance minister தாக்கல் பண்ற பட்ஜெட் கூட மொதல்ல  தகராறு பண்ணினாக்கூட கடைசில மக்களால ஏத்துக்கப்படும்.... ஆனா நாம குடும்பத்துக்காக போடற பட்ஜெட்டை படிச்சுக்கூட பார்க்காம உடனடியா ரிஜெக்ட் செய்துடுவாங்க.... எந்தப் பக்கம் அதிகமா முறை செய்தாலும் அடுத்த ஒரு வருஷத்துக்கு அடுத்த பக்கத்துல இருந்த அதிக அளவுல முறைப்பு கிடைக்கும்.

இதெல்லாம் கூட பரவாயில்லைங்க.... இந்தக் கடவுள் ஏன் ஆண்களை மட்டும் இப்படி ஒரு மறதிக்காரனா படைச்சான்னே தெரியலை.... அது என்னவோ அமெரிக்க ஜனாதிபதி என்னைக்கு பதவி ஏத்துக்கிட்டார்.... அஜித், விஜய் படம் என்னைக்கு ரிலீஸ் ஆகுது....  கிரிக்கெட் மேட்ச் தேதி இப்படி எல்லா விஷயமும் ஞாபகம் இருக்கு.... ஆனா இந்தப் பொண்டாட்டியோட பொறந்த நாள் மட்டும் மறந்து போய்டுது.... கணவர்கள் மூளையை மட்டும் இப்படி ஒரு டிஸைன்ல படைச்ச ஆண்டவனை என்ன சொல்ல... அன்னைக்கு விஷ் பண்ணாத கணவர்கள் நிலை அடுத்த ஒரு மாதத்திற்கு வர்தா புயல் தாக்கிய நிலைதான்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.