(Reading time: 6 - 12 minutes)

தெல்லாத்தையும் தூக்கி சாப்பிடற விஷயம் ஒண்ணு இருக்கு... அதுதான் அந்நிய சக்தி ஊடுருவல்.... மாமியார், மாமனார், மச்சினர், மச்சினிச்சின்னு ஏகப்பட்ட சக்திகளோட ஊடுருவல்... இவங்கட்ட எப்படி நடதுக்கனும்ன்னே கடைசி வரை கணவர்களால் கண்டு பிடிக்க முடியாது... பேசாம அமைதியா இருந்தா மாப்பிள்ளை அழுத்தம் போலன்னு சொல்வாங்க... சரி பேசுவோம்ன்னு பேசினா, அது என்ன மாப்பிள்ளை எல்லா விஷயத்துலயும் மூக்கை நுழைக்கறார்ன்னு சொல்லுவாங்க... மிடில

பாருங்க இதெல்லாம் படிக்கும்போதே உங்களுக்கெல்லாம் திருமணமான ஆண்களோட நிலையைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வரலை... பொண்ணுகளுக்கெல்லாம் குக்கரி கிளாஸ் கல்யாணத்துக்கு முன்னாடி நடத்தறா மாதிரி கல்யாணத்துக்கு அப்பறம் வாழ்க்கையை எப்படி ஹான்டல் பண்ணனும்ன்னு யாராச்சும் கிளாஸ் எடுத்தா வருங்காலத்துல கல்யாணம் பண்ணிக்கப்போற ஆண்களுக்கு  நல்லா இருக்கும்.... கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் கனவுகளோட திருமண வாழ்க்கைக்குள்ள காலடி எடுத்து வச்சா கண்ட கனவு அத்தனையும் மாயாப் படம் மாதிரி திகிலாவே முடியுது....

ஆண்களே திருமண வாழ்க்கை சொர்க்கம்ன்னுதான் சொல்லுவாங்க... எதுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி அந்த சொர்க்கத்துல குடியிருக்கறவங்கக்கிட்ட கேட்டுட்டு அதுக்குள்ள குடி போலாமா வேணாமான்னு முடிவெடுங்க.... அதுக்குன்னு என்கிட்டே அது எப்படி இருக்கும்ன்னு கேள்வி கேக்க வந்துராதீங்க.  எங்க வீட்டுலயும் பூரி கட்டை, கரண்டி  எல்லாம் இருக்கு... அதை எப்படி use பண்ணனும்ன்னு என் மனைவி ஸ்பெஷல் ட்ரைனிங் வேற எடுத்து வச்சிருக்காங்க....

“என்னங்க லீவ் நாள்ல கூட கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணக்கூடாதா... எப்பப்பாரு அந்த கம்ப்யூட்டர்ல லொட்டு லொட்டுன்னு தட்டிட்டு  என்னதான் பண்ணுவீங்களோ தெரியலை”

ஆ வாய்ஸ் மெசேஜ் வந்துடுச்சு... இப்போதைக்கு என் புலம்பல்லேர்ந்து லாக்அவுட் ஆகிக்கறேன் மக்களே.... யாராச்சும் ஆண்கள் நல சங்கம் குறிப்பா கல்யாணம் ஆன ஆண்களுக்கு ஆரம்பிச்சீங்கன்னா உடனே ஒரு மெசேஜ் அனுப்புங்க.... நான் மெம்பெர் ஆகணும்.....

 

This is entry #133 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ஜெய்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.