(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - நியாயமான தீர்ப்பு - K.சௌந்தர்

Helping

ந்த அலுவலகத்தில் மேனேஜர் பதவிக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்தது. தலைமை அதிகாரி சோமசுந்தரம் கம்பீரமாக மையத்திலுள்ள நாற்காலியில் அமர்ந்திருக்க  சுற்றிலும் உள்ள நாற்காலிகளில் மற்ற அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். தலைமை குமாஸ்தா ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

மூன்று பேர் முடிந்த பிறகு உள்ளே வந்த தலைமை குமாஸ்தா "ஸார் அடுத்து வரவேண்டிய மிஸ்டர் இனியனைக் காணவில்லை. போனும் தொடர்பில் இல்லை ,இப்போ என்ன செய்யறது?” என்றார்.

சோமசுந்தரம் இனியனது மேலதிகாரியான நாராயணனைப் பார்த்தார். "உங்களுக்கு ஏதாவது இன்பர்மேஷர் வந்ததா?" என்றார்.

"நோ ஸார், எனக்கு எதுவும் இன்பர்ம் பண்ணலை" என்றவருக்கு போன மாதம் நடந்தது நினைவுக்கு வந்தது. கணக்கு வழக்கில் ஒரு பத்தாயிரம் துண்டு விழுந்தது. இனியனிடம் சொல்லி அட்ஜஸ்ட் பண்ணி கணக்கை எழுத சொன்னதற்கு அவன் ஒரேயடியாக மறுத்ததோடல்லாமல் சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்று ஒரு உபன்யாசமே செய்து விட்டான்.

வேறு வழியின்றி நாராயணன் தன் சொந்த பணத்திலிருந்து பத்தாயிரம் போட்டு கட்ட வேண்டியதாயிற்று. அவனைப் பழிவாங்கவென்று அப்போதே முடிவு செய்து விட்டார்.

அந்த அலுவலகத்தில் ஏதாவ்து பணியிடம் காலியானால் உள்ளே இருப்பவர்களையே நேர்காணல் செய்து நிரப்புவது வழக்கம். இப்போது இன்னொரு மேலளர் தேவைப் படுவதால் இந்த நேர்காணல் நடக்கிறது. இதில் எப்படியும் அவனைக் கலந்து கொள்ள   விடக்கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராமல்  அந்த சந்தர்ப்பம் இப்போது தானே அமைந்தது.

இனியன் மீதான பகையை இப்போது நிறைவேற்றிக்கொள்ள நினைத்து "அவன் எப்போதுமே இப்படிதான் ஸார். பங்சுவாலிட்டி  மருந்துக்கு  கூட கிடையாது. ஏதாவது நாம கேட்கப் போனா ரூல்ஸ் பேசுவான், அவனெல்லாம் இந்த பதவிக்கு  தகுதியில்லாத ஆள் ஸார். விடுங்க ஸார். அடுத்த வருஷம் வந்துக்கட்டும்" என்றார்.

"நோ நோ அப்படியெல்லாம் விட முடியாது. அவன் வரட்டும் விசாரிப்போம்” என்ற சோமசுந்தரம் மேற்கொண்டு மற்றவர்களை அழைத்தார்.

கிட்டத்தட்ட  நேர்காணல்  முடிந்து ஒருமணிநேரம் கழித்து தான்  வியர்வை  சொட்ட  சொட்ட  இனியன்  உள்ளே  வந்தான் .

“பாத்தீங்களா சார், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் எப்போ வந்து நிற்பதை? இவுங்களுக்கெல்லாம் ரொம்ப அலட்சியம் சார், இவனையெல்லாம் அந்த போஸ்ட்டுக்கு கன்சிடரே பண்ணாதீங்க” என்று சோமநாதன்  காதுக்கருகில் கிசு கிசுத்தார்  நாராயணன்.

சோமசுந்தரம் அதை கவனிக்காதது போல "என்ன மிஸ்டர் இனியன், நம்ம ஆபீஸ்ல இண்டர்வியூ நடக்குறது தெரிஞ்சும் இப்படி அசால்ட்டா வர்றீங்க?" என்றார்.

"ஐ ஆம் சாரி சார், காலைல  நா ஆபீஸ் வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட் சார். ஒரு கார் கவுந்து நாலுபேர் உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தாங்க. எல்லோரும் நின்னு வேடிக்கை பாத்தாங்களே தவிர உருப்படியா எதுவும் செய்யலை.  நான்தான் உடனே போயி ஆம்புலென்சுக்கு போன் பண்ணி எல்லோரையும் ஹாஸ்பிடல்ல சேத்தேன். நல்லவேளை. சரியான நேரத்துல ஹாஸ்பிடல்ல சேத்ததால எல்லோரையும் காப்பாத்த  முடிஞ்சுது.  அவுங்க  ரிலேஷன்சுக்கு தகவல் சொல்லி ஒருவழியா எல்லா பர்மாலிடீசும் முடிச்சிட்டு இப்போதான் வர்றேன். நாராயணன் சாருக்கு போனில் ட்ரை பண்ணேன், சுவிட்ச் ஆப் ன்னு வந்தது. அதான் நேரிலேயே சொல்லிக்கலாம்ன்னு வந்துட்டேன் சார்"  என்றான்.  

"என்னது எனக்கு நீங்க போன் பண்ணிங்களா? நானும் போனை காலைலேர்ந்து ஆன் பண்ணிதான்  வச்சிருக்கேன். இன்னும் சொல்லப்போனா உங்க போனைத்தான் நாங்க  எதிர்பார்த்தோம்னு கூட சொல்லலாம்.நா ஏன் சுவிட்ச் ஆப் செய்யப்போறேன்?  நீங்க  சொல்ற  எல்லாமே பொய்யின்னு இதிலேர்ந்து தெரியுது. உங்களுக்கு இன்டர்வியூவில ஆர்வமில்ல. அதனாலதான் இப்படி ஒரு நொண்டி சாக்கு சொல்றீங்க" என்றார் தயாராக காத்திருந்த நாராயணன்  .

"நோ சார், அப்படியெல்லாம் இல்லை. இப்போ கூட ரூல்ஸ் படி என்னை இண்டர்வியூ பண்ண முடியாதுன்னா விட்டுடுங்க. நா எதுவுமே கேக்க மாட்டேன்" என்றான் இனியன்.

அதற்குள்  நடந்த  விபத்தைப் பற்றி குறிப்பிட்ட  ஹாஸ்பிடலில்  இருந்து  கேட்டறிந்த  சோமசுந்தரம்  பேசினார்." மிஸ்டர்  இனியன் , நீங்க  சொல்ற மாதிரி ரூல்ஸ் எதுவும் இங்கே இல்லை.  விபத்து நடந்தது உண்மை தான். ஆனால் ஹாஸ்பிடலில் சேத்தது  நீங்கதானான்னு கன்பர்ம் பண்ண வேண்டி இருக்கு, அதனால, மிஸ்டர் நாராயணன் நீங்க இனியனைக்  கூட்டிக்கிட்டு போயி  கன்பர்ம் பண்ணிக்கிட்டு வந்துடுங்க. அவர் சொல்றது உண்மைன்னா நாளைக்கு காலைல அவருக்கு இண்டர்வியூ வச்சுடலாம்” என்றார்.

"யாருக்குத் தெரியும், இவரே கூட யாருகிட்டயாவது முன்னமே சொல்லி காசு கொடுத்து அங்கேதான் இருந்ததா சொல்ல சொல்லி ஏற்பாடு செய்திருந்தா என்ன செய்றது" என்று உரக்க யோசித்தார் நாராயணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.