(Reading time: 11 - 22 minutes)

சிறுகதை - அன்பான ராட்சசியே - K.சௌந்தர்

Husband - Wife

லுவலக கடிகாரம் ஆறு மணியடித்து ஓய்ந்தது. மெல்ல சீட்டை விட்டு எழுந்த அர்ஜுன் இன்னும் கணினியிலேயே மூழ்கியிருந்த நிதினை வியப்புடன் பார்த்தான். "ஊய்.. இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலே , ஒருவேளை பார்ட்டிக்கு நீயும் வரப்போறியா என்ன? உன் வீட்டுல பர்மிஷன் கிடைச்சுதா? என்றான்.

அவர்கள் அலுவலக நண்பர் ப்ரமோஷனை முன்னிட்டு எல்லா ஆண் ஊழியர்களுக்கும் அன்று இரவு ட்ரிங்க்ஸ் பார்ட்டி கொடுப்பதாக இருந்தார்.

நிதினுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. நிதினின் திருமணத்துக்கு முன் இருவரும் பார்ட்டிகளுக்கு போவது வழக்கம் , ஆனால் திருமணத்துக்குப் பின் நிதின் இதுபோன்ற பார்ட்டிகளுக்கு செல்வதை அவன் மனைவி அனுமதிப்பதில்லை.

"என்னடா ..ரொம்பதான் கலாய்க்கறே ? நா பார்ட்டிக்கு போக யார்கிட்டே பர்மிஷன் கேக்கணும் ?" என்றபடி அர்ஜுனை முறைத்தான் நிதின்.

“ஓ அந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா , அப்போ உனக்கு உன்னோட வொய்ப் கிட்டே பயமில்லைன்றே , நம்பிட்டேன் “ என்று அவன் சொல்லவும் நிதினின் செல்போன் சிணுங்கியது.

"பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை.." என்று மொபைல் இசைக்க அந்தப் பாட்டே அழைப்பது யார் என்பதை உணர்த்திவிட வேண்டா வெறுப்புடன் எடுத்தான் நிதின். " “சொல்லு , இப்போ எதுக்கு கால் பண்ணி தொல்லை பண்றே" என்றான்.

"இல்ல , மணி ஆறாச்சே கிளம்பிட்டீங்களான்னு கேக்கத்தான் " என்று எதிர் முனையிலிருந்து  அவன் மனைவி நந்தினியின் குரல் கேட்டது.

"இதைப் பாரு , ஆறுமணியடிச்ச உடனே டாண்ணு யாரும் அதுவும் நா கிளம்ப முடியாது. அதனால போன் பண்ணி இம்சை பண்ணாதே. போன வை" என்று அவள் பதிலை எதிர்பாராமல் போனை வைத்தான் நிதின்.

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தான் அர்ஜுன்." என்ன மச்சி, அப்போ இன்னிக்கி நைட் பார்ட்டி அவ்ளோதானா, இப்போவே கால் பண்ண  ஆரம்பிச்சிட்டாங்க.  , நான்தான் அப்போவே சொன்னேனே அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் , சரி சரி சீக்கிரம் வீடு போய் சேரு, உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்" என்றான் .

“ஏண்டா அர்ஜுன் , நீ மட்டும் இஷ்டத்துக்கு  சுத்தறியே ? உங்க மிஸஸ் எதுவும் கேக்க மாட்டாங்களா?” என்றான் சதீஷ் என்னும் மற்றொரு நண்பன்.

அர்ஜுனுக்கு பெருமை பிடிபடவில்லை.

"எல்லோருக்கும் என்னை மாதிரி மனைவி கிடைப்பாளா? நா எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போனாலும் முகம் மாறாமல் வரவேற்பா. வெளியிலே சாப்பிட்டேன் ன்னா கூட எதுவும் சொல்ல மாட்டா, அவ்வளோ ஏன் , போன வாரம் நம்ம ஸ்டெனோ ஸ்ரீஷாவை பைக்கில ட்ரோப் பண்ணதை என் மனைவி எதேச்சையா  பாத்துட்டா. அப்போ கூட அவ எதுவுமே சொல்லலை தெரியுமா . ரியலி ஐயாம் லக்கி” , என்றான் பெருமையுடன்.

நிதினுக்கு அவன் மனைவியின் நினைவு வந்தது. இந்த விஷயங்களிலெல்லாம் அவ சரியான ராட்சசிதான். அன்று எதிரில் வந்த பெண்ணின் சேலை அழகாயிருந்ததுன்னு ஒரு செகண்ட் அவன் பார்த்ததுக்கே அரை மணி நேரம் அவனுக்கு  அர்ச்சனை நடந்தது. அவளைத் தவிர வேறு பெண்ணை அவன்  பார்க்கக் கூட கூடாதாம். எல்லாம் தலை எழுத்து என்று மனதில் நொந்தபடி ,

"ஆமாப்பா அர்ஜுன். சிஸ்டர் மாதிரி ஒரு பொண்ணு அமையறதுக்கு ரொம்பவும் கொடுத்து வைக்கணும் " என்று அர்ஜுன் சொன்னதை ஆமோதித்தான் நிதின்.

அர்ஜுனுக்கு கல்யாணமாகி ஆறுமாதங்கள் ஆகின்றது. அவனைப் பார்த்தால் திருமணமானவன் என்று யாராலும் சொல்லமுடியாது. அவ்வளவு சுதந்திரமாக இருப்பான். அர்ஜுனின் மனைவி சுவப்னா மிகவும் அழகிய பெண். அதோடு அவள் அர்ஜுனை அவன் போக்கிலேயே விட்டுவிடுவாள்.  திருமணத்துக்கு முன்பும் பின்பும் அவனது சுதந்திரம் தடை படவேயில்லை.

 அவன் தன் மனைவியை பற்றி பெருமையாக பேச பேச நிதினுக்கு தன் மனைவியின் செயல்பாடுகள் வெறுப்பைத் தந்தன..

நிதின் மனைவி நந்தினி நிதினுக்கு ஆயிரம் கட்டுப் பாடுகள் விதிப்பாள். ஆபீஸ் முடிந்ததும் நேரே வீட்டுக்கு வரவேண்டும் என்று விரும்புவாள். அர்ஜூனுடன் சேர்ந்து ஊர் சுற்றினால் அவளுக்கு பிடிக்காது. அதேபோல வீட்டில் அவள் சமைக்கும் சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும். அவன்  நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தால் சரியான மண்டகப்படி கிடைக்கும். எங்கிருந்துதான் இப்படி ஒரு ராட்சசியை  அப்பா அவனுக்காக தேர்ந்தெடுத்தாரோ? கல்யாணம் ஒரு கால்கட்டு என்பது சரியாகத்தான் இருக்கிறது. என் சுதந்திரத்தில் இவள் என்ன தலையிடுவது?

இன்று என்ன ஆனாலும் சரி. பார்ட்டிக்கு போய்விட்டு பன்னிரண்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தான்.,அவளுக்கு ஒன்றுமே தெரியப் படுத்தாமல் செல்போனை ஸ்விச் ஆப் செய்துவிட்டு அர்ஜூனுடன் கிளம்பினான்.

அர்ஜூனால் நம்ப முடியவில்லை. "என்னடா நீயுமா வர்றே ? வரவர உனக்கு தைரியம் அதிகமாயிடிச்சிடா. எதுக்கும் வீட்டுக்குள் போகும்போது ஹெல்மெட் போட்டுக்கோ"  என்று பரிகாசித்தபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.