(Reading time: 2 - 3 minutes)

சிறுகதை - த‌ம்ப‌தி - பூவேந்தன்

flowers

ப்பா ஆப்ரேஷ‌ன் தியேட்ட‌ருக்கு போகும்போது ம‌ணி காலை10.30

நானும் அம்மாவும் காத்திருப்போர் அறையில்

இர‌ண்டு ம‌ணி நேர‌மாகியும் 

எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை 

நான் "அம்மா.. சாப்ட ‌எதாச்சும் வாங்கிட்டு வ‌ர‌வா" 

வேண்டாம்டா அப்பா வ‌ர‌ட்டும் பாத்துட்டு அப்புற‌மா

ச‌ரிம்மா

கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து

அம்மா "உன‌க்கு ப‌சிக்குதாடா"

இல்ல‌ம்மா 

 "ஒன்னு ப‌ண்ணுடா நீ போய் சாப்ட்டு என‌க்கு பார்ச‌ல் வாங்கிட்டு வா"

ச‌ரிம்மா..

வ‌ரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்ட்டு அம்மாக்கு பார்ச‌ல் வாங்கிட்டு வ‌ந்தேன்.

இந்தாம்மா நீ போய் சாப்டு

கொஞ்ச‌ நேர‌ம்டா இப்போதான் ஆப்ரேஷ‌ன் முடிஞ்சுதாம் சொல்ட்டு போனாங்க..

அதுக்கு பிற‌கு ஒரு ம‌ணி நேர‌ம் க‌ழிச்சுதான் வார்டுக்கு வ‌ந்தார் அப்பா

இப்போவாச்சும் சாப்டும்மா

இருடா அப்பாட்ட‌ ஒரு வார்த்த‌

என்ன‌ங்க‌.. என்ன‌ங்க‌..

மெல்ல‌ க‌ண் திற‌ந்து அம்மாவை பார்த்த‌ அப்பா 

ம‌ணி என்ன‌

2.30ங்க‌

நீ சாப்ட்டியா 

உங்க‌ள‌ பாத்து பேசிட்டு தோ போறேன்

போய் சாப்டுடி மொத‌ல்ல‌

அம்மா ச‌ந்தோஷ‌மா சாப்ட‌ போனா

நான் ஒன்றும் புரியாம‌ல் விழித்தேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.