என்ன முதன்முதலா பாத்தப்போ எப்படி பாத்தாங்களோ அதே மாதிரி தான் இப்போவரை நடத்துராங்க..ஷரவ் ஷரவன் கேக்கவே வேணாம்..இந்த வீட்டு மாப்பிள்ளை சிவா..சின்ன மருமக கௌரி இதுக்குமேல ஒருத்தருக்கு பெஸ்ட்டா பேமிலி அமையுமா சொல்லு..போன ஜென்மத்துல என்ன பாதிலேயே கூப்ட்டுகிட்டதுக்கு ப்ராய்சித்தமா கடவுள் இவ்ளோ ப்யூட்டிபுல்லா என் லைஃப்ப டிசைன் பண்ணிருக்காரு..கரெக்ட் தான???
ஏனோ கார்த்திக் முகம் வாடிவிட,அவன் கன்னத்தை கிள்ளியவள்..மாமா ரிலாக்ஸ் நா எதார்த்தமா சொன்னேன்..இந்தமாதிரி நடக்ககூடாதுநு தான் கடவுள் முன்ஜென்ம நியாபகங்களை எல்லாம் அழிச்சு புது உயிராவே எல்லாரையும் படைக்குறாரு..ப்ரில்லிண்ட் இல்ல..
கடவுளுக்கே சர்டிபிகேட்டா ம்ம் சரி வா கீழ போலாம் சஹிம்மா டைம் ஆய்டுச்சு பாரு..இருவருமாய் கீழிறங்கிய நேரம் மணி பதட்டமாய் அவர்களை நோக்கி வந்தார்.தம்பி நானே உங்கள கூப்பிடனும்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க..
என்னாச்சுண்ணா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க.??
தம்பி நீங்க உள்ள போங்க நா இதோ வரேன் என மீண்டும் அவர் வீட்டை நோக்கிச் சென்றார். கார்த்திக் என்னவென புரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருக்க சஹானா அறைவாசலில் கைகட்டி நின்று கொண்டிருந்தாள்..
மணி வரும் அரவம் கேட்டு திரும்பியவன் அவரோடு வந்த இருவரையும் கண்டு குழம்பினான்..இருந்தும் ஒன்றும் கேட்டுக் கொள்ளாமல் அவர்களை வரவேற்று அமர செய்தான்..சஹானா உள்ளே சென்று அவர்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்துவரா அதுவரையுமே ஒருவரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்..சஹானாவே ஆரம்பித்தாள்..
மணி அண்ணா ஏதோ முக்கியமான விஷயம்நு சொல்லிட்டு அமைதியாவே இருக்கீங்க இவங்க ரெண்டுபேரும் யாரு???அதுவும் இந்த நேரத்துல வந்துருக்காங்க??
சஹானாம்மா வந்து..அத எப்படி ஆரம்பிக்கநு தெரியாம தான் உக்காந்துருக்கேன்…இவங்க பேரு காமாட்சி அம்மா..இது அவங்க பேத்தி வள்ளி..நம்ம தோட்டத்து பக்கத்துல தான் வீடு ..ரொம்ப நாளா இவங்கள நா பாக்கவேயில்ல..இன்னைக்கு காலைலதான் பாத்து பேசிட்டு வந்தேன்..திடீர்நு பாத்தா இங்க வந்து நிக்குறாங்க..ஏன்னா இவங்க சொல்ற விஷயம் அந்தமாதிரி இருக்கு..
என்ன அண்ணா ஏன் இவ்ளோ தயங்குறீங்க என்னாச்சு??-கார்த்திக்..
தம்பி இந்த பொண்ணோட அப்பா அம்மா சின்ன வயசுலயே தவறிட்டாங்க..பாட்டிதான் எல்லாமே கஷ்டப்பட்டு காலேஜ் படிக்க வச்சுட்டு இருக்காங்க..பரிட்சை முடிஞ்ச பத்து நாள் லீவ்ல தோட்டத்து வேலைக்கு போய்ருக்கா டெய்லி சம்பளம்ங்கிறதால பாட்டிக்கு உதவியா இருக்குமேநு நினைச்சுருக்கு..ஆனா போன இடம்தான் அவ வாழ்க்கைய அழிக்குற எமனோடதுநு தெரியாம போய்டுச்சு..அதான் அந்த பாழாபோன அருணோடது தம்பி என்ன அர்த்தமுள்ள பார்வையை பார்க்க கார்த்திக் சஹானாவை பார்த்தான்..
அந்த கடன்காரன் இந்த புள்ளையோட வாழ்க்கைய நாசமாக்கிட்டான்ப்பா..இதபத்தி வெளில சொன்னா பாட்டியை கொன்னுடுவேன்னு மிரட்டிருக்கான்..அதுவும்போக இந்த ஊர்ல அவனை எதிர்த்து பேச ஆளே கிடையாது..அப்போதான் தற்செயலா சிவா தம்பியை பத்தி தெரிய வந்துருக்கு அதான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமாநு கேட்டு வந்துருக்காங்க..
சஹானா அந்த பெணண்ணருகில் அமர்ந்து ஆதரவாய் தோள்பற்றினாள்..அவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது..
அழாதம்மா நாங்கெல்லாம் இருக்கோம்..தைரியமா இவ்ளோதூரம் யோசிக்குற பாரு அதுவே பெரிய விஷயம்..-கார்த்திக்..
தேங்க்ஸ் அண்ணா ஆனா அந்த மிருகத்துக்கு தண்டனை கிடைக்காம நா ஓயமாட்டேன்..பொண்ணுங்கனா அவனுக்கு அவ்ளோ இளப்பமா போச்சா..இந்தமாதிரி ஆளெல்லாம் நிக்க வைச்சு சுடணும் அண்ணா அப்படி ஒரு தண்டனை இல்லாததால தான் இவனெல்லாம் தப்பை மட்டுமே சரியா பண்ணிட்டு இருக்கான்..
தம்பி அவ ஏதோ சின்ன பொண்ணு எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசுறா..பாவி மக வாழ்க்கைதான் போச்சு உசுரோடயாவது இருக்காளேநு நா நிம்மதி பட்டுட்டு இருக்கேன்..அவனை எதிர்த்தா இருக்குற இடம் தெரியாம ஆக்கிருவான்ப்பா..எங்களுக்கு இதெல்லாம் வேணாம்..புத்திமதி சொல்லி அனுப்புங்கப்பா..
கார்த்திக் அவர்களை தேற்ற வழிதெரியாமல் இருக்க சஹானா பாட்டியிடம்,பாட்டிம்மா நீங்க தைரியமா இருங்க உங்க பேத்தி இனி தனி ஆளில்ல..நாங்க அத்தனைபேரும் அவளுக்குத் துணையிருக்கோம்..நீங்க நம்பிக்யோட வீடுக்கு போங்க எங்களை பாத்ததா யார்கிட்டேயும் சொல்லிக்க வேணாம்..மணி அண்ணா நீங்க போய் விட்டுட்டு வாங்க என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்..
மாமா..
நா பாத்துக்குறேன் சஹிம்மா நீ போய் படு நா வந்துரேன்..என போனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் செல்ல சஹானா தனதறையில் அவனுக்காக காத்திருந்தாள்..நேரமாகியும் அவன் வராமல் போக அப்படியே உறங்கியும் போனாள்..காலை வெளிச்சம் முகத்தை தழுவ எழுந்தவள் கார்த்திக் அறையில் இல்லாததை கண்டு அவனுக்குமாய் காபி எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்..