ஆதித்துடைய அப்பாவை அழகுநிலா அங்கிள் தானே என்று கேட்டதில் இருந்து வாய்க்கு பூட்டு போடுக்கொண்டான் ஆதித் . அவனுக்கு ஏனோ அழகுநிலாவின் முன் தேவையில்லாமல் தங்களின் குடும்பத்திற்குள் இருக்கும் பினக்குகளை காண்பிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் அவரின் அப்பா விடை பெறுவதற்காக தலையாட்டும் போது கவனிக்காததுபோல் நின்று கொண்டான் . அவர் கிளம்பியதும்,
அம்மா போகலாமா! என்றவன், அழ்குநிலாவைப் பார்த்து குட்பை என்று சொல்லியவன் திரும்பி நடக்கமுயன்றான்.
ஆனால் ஜானகியோ, என்ன ஆதித்? கூட கூட்டிவந்த புள்ளையை இப்படித்தான் அம்போவென விட்டுட்டுப் போவதா? நீ வாம்மா அழகுநிலா நாங்கள் போகும் போது உன் வீட்டு வாசலில் உன்னை இறக்கிவிட்டுட்டுப் போறோம் என்று அவளையும் கூட அழைத்தாள்.
வேணாம் ஆண்டி. நீங்க போங்க. நான் போய்விடுவேன் என்று மறுத்தாள் அழகுநிலா. அதற்கு ஜானகி, “என்ன அழகி என் பையன் என்னை பார்த்ததும் உன்னை கழட்டிவிட்டுவிட்டான் என்று நீ என்னை மனதிற்குள் திட்டவா?” நீ என் உடன் வந்தேதான் ஆகணும் என்றபடி, அவளின் கையை பிடித்து தன்னுடன் விடாமல் கூட்டிகொண்டே சென்றால் ஜானகி.
ஆதித்துகு தனது அம்மாவின் செயல் கோபத்தை உண்டாக்கியது. ஜானகியை கடிந்து பேசமுடியாமல் அதற்கும் அழகுநிலாவைத்தான் மனதிற்குள் “அவங்க இழுத்துட்டு வந்தா இவளும் வந்துரதுதானா” என்று திட்டியபடியே அவளை முறைத்துப் பார்த்தான்.
அவன் முறைத்துப்பார்த்ததும் இவங்க அம்மா இழுத்துட்டுவந்தா அவங்களிடம் சொல்வதுதானே! எதற்கு என்னை முறைத்துப்பார்கிறார்? என்று நினைத்தபடி அவனை பார்த்தாள்.
அழகுநிலா, தன மகனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்த ஜானகி அவன் முகத்தை எதற்கு பார்க்கிற. உன்னை இப்போ கூப்பிடுவது நான்தான். அவன் சம்மதிக்கணும் என்ற அவசியம் இல்லை என்றவள் குரலில் அத்தனை ஒட்டுதல் இருந்தது அழகுநிலாவின் மேல்.
உடனே அழகுநிலா, “கேட்டுக்கிட்டாயா?” என்ற மிதப்பான பார்வை ஒன்றை அவனின் மேல் செலுத்தியவள், ஆதித்தை பார்த்து நான் ஆண்டிக்காகத்தான் உங்க காரில் வருகிறேன் என்று சொல்லியவள் ஜானகியோடு கை கோர்த்தபடி நடந்தாள்.
அப்பொழுது ஜானகி அழகுநிலாவிடம் ஆதித் இதுவரை நட்பு என்று யாருடனும் நெருங்கி பழகி நான் பார்த்ததில்லை. அதுவும் பெண் தோழி உண்டு என்று அவனே சொன்னால் கூட நான் நம்பமாட்டேன். எனக்கு அவனை மற்ற பிள்ளைகள் போல் நண்பர் வட்டத்துடன் கலகலப்பாக பார்க்கவேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. இன்றுதான் எனக்கு தெரிந்தவள் என்று உன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறான். என் மகனை அவன் தொழில் வட்டமில்லாத நட்பு வட்டாரத்தில் உன்னை சந்தித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது என்றாள்.
அவள் அவ்வாறு சொல்லவும் ஒரு நண்பர் கூட இல்லாத அவ்வளவு டெரர் பீசா உங்கள் மகன் என்று கண்களை உருட்டி பயப்படுவதுபோல் அழகுநிலா கூறியதும், போக்கிரி பொண்ணு என்னிடமே என்மகனை கேலி செய்கிறாயா? உன்னை..... என்று செலமாக் ஓர் அடி முதுகில் கொடுத்தால் ஜானகி .
அச்சோ... ஆண்டி பூப்போன்ற கையை வைத்தா அடிப்பது எங்கே காமிங்க உங்க கை கன்றிவிட்டதா பார்க்கலாம், என்றால் அழகுநிலா .
அவள் அவ்வாறு கூறவும், சிரித்தபடி ஓர் விரலை காட்டி பத்திரம் என்று கூறினாள். அதற்கு அழகுநிலா ‘சரண்டர் என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு கூறியதும்’ ஜானகி கலகலவென சிரித்தாள். அச்சிரிப்பில் அழ்குநிலாவும் இணைந்துகொண்டாள் பின் ஜானகி சொன்னாள் நீயும் பூப்போல இருப்பதால் எனக்கு சேதாரம் இல்லை இன்று அவளை ரசனையுடன் பார்த்தபடியே சொன்னாள்..
ஆதித்துகு தன அம்மா இப்படி கலகலப்பாக ஒருவருடன் பேசி இதுவரை பார்த்ததில்லை. முகம் முழுவதும் சிரிப்புடன் பேசிக்கொண்டு இருக்கும் தன் அம்மாவை பார்த்தவனுக்கு அழ்குநிலாவின் சுபாவம் தன தாயை மகிழ்விப்பதை உணர்ந்தான். இவள் இருக்கும் இடம் உயிர்ப்புடன் இருக்கும் என்னையுமே சரிக்கு சரி இவளுடன் பேசவைத்துவிட்டாள் தானே! என்று நினைத்து புன்னகையுடன் அவர்களை முன்னால் நடக்கவிட்டு பின்னால் சென்றான் ஆதித்.
காரில் ஏறியதும் ஆதித்துடன் முன்னால் அமர்ந்திருந்த ஜானகி அழ்குநிலாவை பார்த்து திரும்பி உட்கார்ந்தபடி வீட்டிற்கு வந்து இரவு உணவை முடித்துபின் உன்னை ஆதித் உன் வீட்டில் விடச்சொல்கிறேன் என்றாள். அதற்கு அழகுநிலா.
அச்சோ! ஆண்டி..... ஹாஸ்டலில் எட்டுமணிக்குள் நான் இருக்கவேண்டும் அதற்குபிறகு செல்லவேண்டுமானால் நான் முன்பே தகுந்த காரணத்தை சொல்லி பெர்மிசன் வாங்கியிருக்க வேண்டும். இப்போவே 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது மன்னிச்சுக்கோங்க ஆண்டி. உங்கள் வீட்டிற்கு என்னால் இப்போ வர முடியாது என்றால் அழகுநிலா .
நீ ஹாஸ்டலிலேயா இருகிறாய்? இங்க நீ எந்த காலேஜில்? படிக்கிற பொண்ணா? என்று கேட்டாள்
Adith ammaku Nila-vai pidichu ponathala antha vaira nagaiyai avalukku koduthiduvangalo
Madhesh entry innum enna prachanaya kondu varum
Thank you for long interesting EPI.
Nice twist with Madhesh intro to Nila and team.
Will Adhi also join in this?
How Nila will delete that video?
Expecting more updates with long EPI.
Indha adith ketapove nila phone ah kudithirukalam
En ipdi panra??
Varsha va adith console pana porana??
Ena sis inum hero sir ku avarkana heroine yar nu theriyalaya?! !