(Reading time: 26 - 51 minutes)

அவள் கூறியதும் தன கைப்பிடியை வேகமாக விளக்கிகொண்டவன் வார்த்தைகளில் நெருப்புப் பறக்க “ஆமா நீ பெரிய கிளியோபாட்ரா” சரியான பட்டிக்காடு உன்னை போய் கையை பிடிச்சு இழுத்துட்டாலும்.... என்னமோ என் அம்மா ஊர் காரியே இந்த போன் மேட்டரில் ஏதாவது உதவமுடியுமா..? என்று பார்த்தால் ரொம்பத்தான் பேசுற நீ என்றான் ஆதித்.

அவன் அவ்வாறு கூறியதும் அழ்குநிலாவிற்கு ஒருமாதிரி போய்விட்ட்டது ,எனவே ஆமா நான் பட்டிக்காடு தான் எனக்கு தெரிந்த நாகரிகம் எல்லாம் உடையில் நாகரிகம் என்ற பேரில் அரைகுறையாக உடுத்துவதை தான் நான் அனாகரிகமாக நினைக்கிறன். அதேபோல் ஆண் பெண் நட்பை மதித்தாலும் தேவையில்லாமல் யாரும் என்னை தொட்டுப்பேசுவதை கண்ணியகுறைவாக நினைப்பவள் நான், உங்களுக்கு நான் அழ்கானவளாகத் தெரியனும் என்ற அவசியம் எனக்கில்லை என்றாள்.

அவளில் கருத்து அவனின் சிந்தனையோடு ஒத்திருப்பதை நினைத்தவனுக்கு அவளில் மேல் மேலும் நல்ல அபிப்ராயமே உண்டானது அவள் பேசிமுடிக்கும் முன்பே சரண்டர் என்று கூறுவதை போல் கையை உயர்த்திய ஆதித் போதும் போதும் இனி உன் கையை தொட்டுப்பெசமாட்டேன் என்று கூறிய பாவனையில் ஓர் நிமிடம் ஸ்டன் ஆகி அப்படியே நின்று விட்டால் அழகுநிலா.

அவள் நின்றதை பார்த்து உதட்டில் ஓர் முறுவலுடன் தன் ஒற்றை புருவத்தை அசால்டாக தூக்கியபடி என்னை சைட் அடித்தது போதும் அந்த மினிஸ்டர் மகனின் போனை என்னிடம் கொடுக்கிறாயா நான் கொண்டுபோய் உன் வீடியோவை டெலிட் செய்து உன்னிடம் கொடுக்கிறேன் என்றான் ஆதித்.

அவனை தான் சைட் அடிப்பதாக கூறியதும் தன மேலேயே அழகு நிலாவிற்கு கோபம் வந்தது தன்னை பார்த்து பட்டிக்காடு என்று சொல்பவனை வெட்கம் கேட்டு நான் பார்த்ததால் தானே இவன் என்னை இலக்காரமாக நினைத்து பேசுகிறான் என்று மனதிற்குள் நினைத்தவள் முகத்தை கடுமையாக வைத்தபடி தேவைஇல்லை என் பிரச்னையை இனி நானே பார்த்துக்கொள்வேன் நீங்கள் இதுவரை எனக்கு செய்த உதவிக்கே என்னால் பிரதி உபகாரம் எதுவும் செய்யமுடியாமல் கில்டியாக பீல் பண்றேன் இனிமேலும் உங்களை என்பொருட்டு கஷ்டப்பட வைக்க என்றால் முடியாது நான் வருகிறேன் என்றவள் விருவிருவென அந்த பில்டிங்கினுள் சென்று மறைந்தாள்.

அவள் வாங்காமல் போன வளையலை தன கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே காருக்கு வந்த ஆதித் .

டேஸ் போர்டின் மீதிருந்த வளையலை எடுத்து காரைவிட்டு போன மகனை பார்த்த ஜானகி இன்னும் அதில் இருந்த நகைக்கடை பையை பார்த்தவள் என்ன அது என எடுத்துப்பார்த்தாள் அதில் இருந்த வைர நகைகளை பார்த்த ஜானகி தன மகன் அதை அழ்குநிலாக்கு வாங்கியதாக் நினைத்தாள் பின் ஏன் இதை அவளிடம் கொடுக்கவில்லை என்று யோசனையுடன் அதனை பார்த்துக்கொண்டு இருக்கையில் காரின் கதவை திறந்து ட்ரைவர் இருக்கையில் உட்கார்ந்த ஆதித்திடம் நகை அழகாக இருக்கிறது ஆதித் யாருக்கு இதை வாங்கின என கேள்வி கேட்டார்.

ஒரு நிமிடம் பதில் சொல்ல தடுமாறிய ஆதித் பின் சமாளிப்பாக உங்களுக்குத்தான் அம்மா பிடிச்சிருக்கா என்றான் .

அவனின் தடுமாற்றத்தை பார்த்து தன மகனுக்கு கூட காதலை சொல்வதில் தயக்கம் இருக்குமா? எதற்கும் தயங்காதவன் எந்தவிசயத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் சிங்கம் போன்ற தன் மகன் கூட காதல் என்றதும் அதை வெளிபடுத்த வெட்கம் எனும் தடை ஏற்படுகிறதே என்று நினைத்தவள் உதட்டில் முறுவலோடு இது போன்ற டிசைன் எல்லாம் போடும் வயதை நான் கடந்துவிட்டேனே ஆதித் ஆனாலும் கொடு எனக்கு வரும் மருமகளுக்கு பத்திரமாக வைத்து கொடுக்கிறேன் என்று அந்த நகையை தன பேக்கினுள் வைக்கப் போனாள்

அப்பொழுது அம்மா இந்த வளையலையும் அதனுடன் வைத்திருங்கள் இது அழகுநிலாவினுடயது அவளைத்தான் நீங்கள் வீட்டிற்கு என் பிறந்தநாளுக்கு கூப்பிடுவதாக சொன்னீர்களே வந்தாள் கொடுத்துவிடுங்கள் என்று கூறி கொடுத்தான்.

இருவருக்குள்ளேயும் ஏதோ ஊடல் போல என மனதிற்குள் நினைத்த ஜானகி மீண்டும் மீண்டும் கேள்விகேட்டு அவனை சங்கடப்படுத்தாமல் அந்த வளையலையும் தனது பேக்கினுள் வைத்துக்கொண்டாள்.

ஆதித் வர்சாவுக்கும் தனக்கும் உள்ள காதலை இப்பொழுது போய்கொண்டிருக்கும் அவனது ப்ராஜெக்ட் முடிந்த பின்பு தனது அம்மாவிடம் சொல்லல்லாம் என நினைத்துக்கொண்டு இருந்தான் .

ஜானகி அந்த நகையை காட்டி யாருக்கு வாங்கின என்று கேட்டபோது ஒருநிமிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்தவன்,அப்படிச் சொன்னால் இப்பொழுதே அவளை பார்க்கவேண்டும் என கூற ஆரம்பித்துவிடுவார்கள் ஆனால் டயமன்ட் ஷோரூமில் வைத்து அவள் தன்னிடம் கோபமாக போயிருக்கும் இந்த சூழலில் கூறவேண்டாம் என முடிவெடுத்தவன் உங்களுக்குத்தான் வாங்கியது என்று கூறிவிட்டான் .

ஆனால் ஆதித்தின் மனம் அலைபாய்ந்தது. எப்படி வர்சாவிற்கு புரியவைப்பது? “அப்போ நான் கூப்பிடும்போதே நின்றிருந்தால் அழ்குநிலாவின் வாய்மூலமே அவள் உண்மையை தெரிந்திருக்கலாம்.” எல்லாம் அழகுநிலாவினால்தான் என்று சிறிதுநேரம் அவளின் மீதுமட்டுப்பட்ட கோபம் திரும்ப எட்டிப்பார்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.