(Reading time: 26 - 51 minutes)

அம்மா.... நீ பேசாம இருக்கியா! அதுதான் நீ புலம்பறத பாத்து ஊருக்கு வருவேனு சொன்னா உடனே எனக்கு பிரச்சனையினு நான் உன்கிட்ட சொன்னது போல கிளப்பிவிடுற. நான் நல்ல ஜாலியா வேலைக்கு போய்டு வந்துட்டுதான் இருக்கிறேன். அண்ணன் அடுத்தமாசம் ஒன்னாந்தேதி எப்பவும் போல் பார்க்கவந்தா போதும். ஏதாவது நீயா நெனச்சுகிட்டு புலம்பி அண்ணனையும் சங்கடப்படுத்தாத. நான் நல்லாத்தான் இருகிறேன்மா, அப்புறம் வீட்டில் அண்ணன், மதினி என் மருமகப்பிள்ளை எல்லோரையும் கேட்டதா சொல்லு. அடுத்த தடவ எல்லோரிடமும் பேசுறேன் என்றபடி தொடர்பை துண்டித்தவள், அப்பாடா... என்று பெருமூச்சு விட்டபடி எதில் இருந்தோ தப்பிப்பது போல இரண்டு போனையும் தள்ளி வைத்துவிட்டு, இத்துனூண்டு இருந்துகிட்டு இது என்னமா மனுசங்களை ஆட்டிவைக்குது என்று நினைத்தவள், இன்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் ரொம்பவே மனமும் உடலும் சோர்ந்து போய் சாப்பிட கூட போகாமல் அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கிபோனாள் என்று சொல்வதைவிட ஓய்ந்து தளர்ந்து படுத்து மயங்கிப்போனாள்.

தூக்கத்தில் இருந்த அழ்குநிலாவிற்கு அந்த நரேன் அவளை துரத்திவர வேகமாக ஓடிப்போகிறாள் அழகுநிலா. அவளுக்கு மூச்சு வாங்க உடலெல்லாம் நடுங்க தலைதெறிக்க ஓடியபடி பின்னால் அந்த மினிஸ்டரின் மகன் துரத்துவதை திரும்பி பார்த்தபடி ஓடுகிறாள், திரும்பி பார்த்தபடி ஓடியதால் எதிரில் வந்தவனை கவனிக்காமல் மோதி விழ பார்க்கையில் அவள் கீழே விழுந்து விடாமல் ஓர் வலியகரம் அவளை தாங்கி பிடிக்கிறது. பதற்றத்துடன் நிமிர்ந்து பார்க்கையில் அவளை பிடித்து தன்னுடன் சேர்த்து பாதுகாப்பாய் அணைக்கிறான் ஆதித். அந்தநேரம் அழகி.... அழகி.... உனக்கு என்ன ஆச்சு! என்று அவள் ரூம்மேட் அவளை தட்டி எழுப்பவும் விழித்துபார்த்தவள் மொத்தமாக வியர்த்துப்போய் மலங்க மலங்க விழித்தாள்.

அவள் ரூம்மேட் ஆஸ்பத்திரியில் நைட் டியூட்டி முடித்துவிட்டு ஆறுமணிக்கு ரூமிற்குவந்தவள் அழகுநிலா படுத்தபடி மூச்சுவாங்கியபடி தொப்பலாக வியர்வையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்து பயந்து அவளை எழுப்பியிருந்தாள்..அவள் முழிப்பதை பார்த்து என்னப்பா என்னசெய்யுது என் பதட்டமாக் கேட்டாள்

அதன் பின்தான், இரவு பேன் கூட போடாமல், உடுப்பைமாற்றாமல் அப்படியே படுத்து தூங்கிவிட்டதும் தனக்கு நேற்று நேர்ந்த சம்பவங்களின் பாதிப்பு கனவுவரும் அளவு தன்னை பாதிப்பதையும் உணர்ந்தவள், இல்லப்பா... ஒரு கெட்ட கனவு வேற ஒன்னும் இல்லை! என்று பயந்தபடி தன்னை பார்த்துக்கொண்டு இருந்த ரூம்மேட்டை சமாதானப் படுத்தியவளுக்கு தூக்கம் தொலை தூரம் ஓடிப்போனது.

இன்னைக்கு எப்படியும் நடந்த சம்பவத்தை சுமதியிடம் பகிர்ந்து எப்படி இந்த சிக்கலில் இருந்து வெளியில் வரலாம் என முடிவு செய்யவேண்டும் என நினைத்தாள். அன்று அந்த ஹோட்டலில் தனக்கு நடந்த சம்பவம் முதல் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை வரை தனது தோழி சுமதியிடம் பகிர்ந்து கொள்ள அழ்குநிலாவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, காலேஜ் படிக்கும்போதிருந்தே விசுவும் சுமதியும் காதலில் விழுந்துவிட்டார்கள் என்றபோதிலும், மூன்றுபேரும் பெரும்பாலும் நண்பர்கள் என்ற முறையில் தான் பொதுவாக பேச்சுக்கள் இருக்கும். ஆனால் தற்போது விசு வேறு இடத்தில் வேலை பார்ப்பதாலோ? அல்லது வாரம் ஓர்முறை பார்க்கமுடிந்ததாலோ என்னவோ? விசுவும் சுமதியும் தான் இருந்தாலும் ஓட்டிக்கொண்டே தன முன்னால் இருப்பதை பார்த்த அழ்குநிலாவிற்கு தான் அவர்களுக்கு இடையில் தொந்தரவாக இருகிறோமோ என்ற எண்ணம் உண்டானது.

அதை நாசுக்காக் சுமதியிடம் ஜோடிப்புறாக்களுக்கு இடையில் என்னை ஜோக்கரா நிப்பாட்டவாடி என்னை உங்ககூட எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போற? இந்ததடவை நான் அவுட்டிங் உங்க கூடவரலப்பா! என சொன்னதும் சுமதி சண்டைகே வந்துவிட்டாள். அடியே முதல்ல நீயும் விசுவும் எனக்கு நல்ல ப்ரண்ட்ஸ் அதற்கு பிறகுதான் எனக்கு அவன் லவ்வர். மூணுபேரும் சேர்ந்துதான் சுத்துறோம் நீயும் வரனும் என கூறியபின், தவிர்கமுடியாமல்தான் அவர்களுடன் ஊர் சுற்ற சென்றாள் அழகுநிலா.

ஆனால், தான் அவளிடம் இவ்வளவு நடந்தும் எதையும் பகிர்ந்துகொள்ளாதது தெரிந்தால் ரொம்ப கோபப்படுவார்கள் இருவரும், என்று எண்ணியவள் அந்த போனையும் தன்னுடன் எடுத்துக்கொண்டே ஆபீஸ் கிளம்பினாள்.

ஆபீசில் தான் நுழைந்ததும் முகம் முழுவதுவும் சந்தோஷத்துடன் தன்னை எதிர்கொண்டு ஓடிவந்த சுமதியை பார்த்தவள், என்னடி! முகத்தில் பலப் எரியுது வீட்டில் பிரச்சனை அது இது என்று என்கிட்டே போனில் புலம்பிவிட்டு நான் திரும்ப போன் பண்ணினால் கூட அட்டன் பண்ணாமல் கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருந்தவளை இன்று அழுது வடியும் முகத்தோடு தான் பாப்போம் என வந்தால், நீ என்னடானா இப்படி பல்ப் போட்டமுகத்தோட ஜொலிக்கிற என்று கலாய்த்தாள் அழகுநிலா.

சுமதியோ அழகியை பார்த்து, அடியே! என் பெரியப்பா நாரதர் செய்த கலகம் நன்மையில் முடிங்க்சுருச்சுடீ அழகி! என்று சொன்னதும், அழகுநிலா புதிர்போடாமல் உன் சந்தோசத்திற்கான காரணத்தை சொல்லு என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, விசுவிடம் இருந்து சுமதிக்கு போன் வந்தது,

இரு சொல்றேன் என்றவள் போனை அட்டன் பண்ணி டேய் விசு நான்தான் முதலில் அழகிட்ட சொல்வேன் என்றாள். பின்பு அவன் என்ன சொன்னானோ அட சீ... என்னாலெல்லாம் உன்ன வாங்க, போங்க, மாமா, அத்தான் என்றெல்லாம் கூப்பிடமுடியாது நான் எப்பொழுதும் போல் உன்ன பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.