(Reading time: 26 - 51 minutes)

ஆனா பிரச்சனை இன்னும் முடியல ரமேஷ். அங்கேயும் பிரச்சனை ஆகிவிட்டது. ஆனால்.... அன்று ஹோட்டலில் உதவிய அதே ஆதித்தான் நேற்று மாலிலும் என்னை காப்பாற்றினார் என பதில் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் டீம் லீடர் அவர்கள் இருவரையும் பார்த்து உங்க இரண்டு பேருக்கும் கொடுத்த வேலையை முடிச்சாச்சா... என கேட்டதும் இதோ முடித்துவிடுகிறோம் என இருவரும் தங்களுடைய வேலையில் ஆழ்ந்தனர்

பதினோரு மணிக்கு எல்லோரும் மீட்டிங்ஹாலில் கூடியதும், வசந்த், எல்லோருக்கும் தங்களுடைய புது எம்டியாக மாதேஷ் என்னுடைய பார்ட்னராக இணைகிறார் என்று அறிமுகப்படுத்தி வைத்தான். மேலும், தங்களுடைய நிறுவனத்தை புது பில்டிங்கில் விரிவு படுத்துவதாகவும் மேலும் இன்னும் நிறுவனத்தின் வர்த்தகத்தை பெரிய அளவில் செய்வதற்காக ஆட்களையும் விரைவில் பணியமர்த்தப்படுவதாகவும், அதற்கு முன்னோடியாக தற்போது உள்ள அலுவலர்களை எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் திறமையின் அடிப்படையில் பிரித்து புதிய போஸ்டிங்குகள் உருவாக்கப்படுவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டன.

அதில் தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் முடியும் வரை மட்டுமே இப்பொழுது உள்ள டீம் தொடரும் என்று கூறப்பட்டது. மேலும் வசந்த், அழ்குநிலாவின் பெயரை சொல்லி அவங்க சேர்ந்து கொஞ்ச நாளிலேயே சுறுசுறுப்பாக பணிபுரிவதை பார்த்து அவங்களை புது எம் டீ மாதேசுகு தேவையான டீடைல்ஸ் கொடுக்கும் டெம்ரவரி அசிஸ்டன்டாக நியமனம் செய்யப் படுவதை அறிவித்தான். எனவே தற்போது அவளின் டீமில் இருந்து அவளை ரிலீவ் பண்ணுவதாகவும் அவளது டீம் லீடர் அவளின் பொறுபை கூடுதலாக ஏற்று செய்யும் படி உத்தரவு பிறப்பித்தான்.அழகுநிலாவிற்கு நம்பவே முடியவில்லை. அவள் எல்லோரையும் போலத்தான் வேலை பார்த்தாள். எதில், தான் ஸ்பெசல் என அவளால் யூகிக்கமுடியாமல் இதை ஏற்பதா? என தயக்கத்துடன் விழித்தாள்.

----தொடரும்----

Episode 06

Episode 08

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.